சோகம் என்பது பிரிவின் வலியால் வருவது..! சோகம் பிழியும் கவிதைகள்..! அழுது விடாதீர்கள்..!

Sad Love Kavithai in Tamil-பிரிவின் துயரம் மனதை வாட்டும்போது சோகங்கள் சொல்லாமலே மனதில் வந்து குடிகொள்ளும்(கொல்லும்), அழையா விருந்தாளியாக.;

Update: 2022-11-01 11:22 GMT

Sad Love Kavithai in Tamil

Sad Love Kavithai in Tamil

காதலில் தோல்வி, ஏமாற்றம், துரோகம், உறவுகள் பிரிதல், அன்பு கிடைக்காமல் இருப்பது இப்படி சோகங்களுக்கு பல காரணங்களை அடுக்கிச் செல்லலாம். சோகம் மனதில் வடுக்களை ஏற்படுத்தும் பெரும்காயம். ஆமாம் அது வெறும் காயம்தான். ஆனாலும் மனசு மட்டும் அழுது தவிக்கும். எமது வாசகர்களுக்காக சோக கவிதைகள்..இதோ..!

  • காதலித்த நாங்கள் இருவரும் ஊர்வலத்தில் தான் இருக்கிறோம்...ஆனால் அவளுக்கு கல்யாண ஊர்வலம்..1 எனக்கோ.. இறுதி ஊர்வலம்...!
  • நான் இறந்த பின் தயவுசெய்து என் கண்களை மூடி விடாதீர்கள்..! எனக்கு அஞ்சலி செலுத்த வந்தாலும் வருவாள்..எனக்கானவள்., கடைசியாக ஒருமுறை பார்த்து விட்டுச் சென்று விடுகிறேன்...!
  • அவள் என் காதலை புரிந்து கொண்டு என்னைத் தேடி வருகிறாள், கையில் மலர் வளையத்துடன்..ஆனால் உறவுகள் மண் இட்டு மூடிவிட்டனர். இல்லை என்றால் நானே எழுந்து வந்திருப்பேன் அவளது மலரை வாங்கிக்கொள்வதற்கு..!


  • என் வாழ்க்கை என்ன ஓரங்க நாடகமா..? நாடகத்தில் என்னை மட்டும் தன்னந்தனியே நடிக்க விட்டு நீ மட்டும் தனியே சென்று விட்டாயே..?
  • யாரும் பயப்பட வேண்டாம்..நான் இறந்து விடுவேன் என்று. ஏனெனில் அவள் என்னை வேண்டாம் என்று உதறியபோதே நான் இறந்து விட்டேன். மீண்டும் இறப்பதற்கு இங்கு சாத்தியம் இல்லை.
  • என் இதயம் என்ன மண் பானையா..? நான் அன்பு செய்த அனைவரும் உடைத்து விட்டே செல்கின்றனர்..!
  • நேற்று அவள் இன்று நீ..! ஆனாலும் ஒட்டி வைத்திருக்கிறேன், தயாராக..! மீண்டும் உடை(தை)படுவதற்கு..!
  • என் மனதை நீங்கள் உடைப்பது பற்றி எந்தக் கவலையுமில்லை எனக்கு... உடைந்த சிதறல்கள் உங்களை காயப்படுத்தி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்...!
  • ஒருவரால் கிடைத்த அதிக மகிழ்ச்சி, அவர் இல்லை என்று ஆனவுடன்..அளவுக்கு அதிகமாகி விடுகிறது மறக்க முடியாத வலிகளாக...! அந்த அன்பை நோக்கி காத்திருக்கிறது என் மனசு..!
  • என்னைப் பிடிக்கவில்லை என்று சொல்லி இருந்தால் கூட சிறிது நாட்களில் மறந்திருப்பேனடி..! பிடித்திருக்கிறது என்று சொல்லி என்னைப் பித்துப் பிடிக்க வைத்து விட்டாயடி..!? எதிரியை நம்பலாம்..நம்பிக்கை துரோகியை எப்படி நம்புவதடி..?
  • பிரிந்து போன உன்னையும், இறந்து போன நம் காதலையும் ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது உன் நினைவுகள்...!
  • சூழ்நிலை சில நேரங்களில் பேச விடுவதில்லை. பேசினால் கேட்பதும் இல்லை. நீயாவது நிம்மதியாக வாழ்ந்து விடு என்று விலகிச் செல்லக் கற்றுக் கொடுத்து விடுகிறது, காலம்..!
  • உன்னோடு வாழ்வது மட்டும் வாழ்க்கை இல்லை. உன் நினைவுகளுடன் வாழ்வதும் வாழ்க்கை தான். அது மட்டுமே கூடுதல் வலிமை பெறுகிறது..!
  • ஒருவரின் வலியை இன்னொருவரால் புரிந்து கொள்ள இயலாது. அப்படி புரிந்து கொண்டிருந்தால், உடலாலும் உள்ளத்தாலும் காயங்கள் இன்றி வாழ்வை வாழ்ந்திருப்போம்,நிம்மதியாக..! எங்கு தொலைத்தோம் எம் வாழ்க்கையை..?!
  • உன் நினைவுகள் தரும் வலிகளை எழுதியேனும் குறைத்து விடலாம் என்று பேனாவை எடுத்தேன். ஆனால் பேனா கூட நழுவிபோகிறது உன்னைப் போலவே...!
  • என்னதான் மனதின் வலிகளை உன்னிடம் கொட்டித் தீர்த்தாலும், உன்னிடம் கொட்ட இயலாத வலிகளை என்ன செய்வது...!? என் மனதுக்குள் அடக்கம்செய்கிறேன், என் வலிகளை..!
  • இனி சிந்திட ஏதுமில்லை சிறிது கூட கண்ணீர்..! வற்றிய கண்களும் கடைசியாக ஒரு முறை உன்னை கண்டிட ஏங்குகிறது. அன்று எனக்காக நேரம் ஒதுக்கிய நீ இன்று என்னையே ஒதுக்குகிறாய்..! என் குளக் கண்கள் வற்றிப்போயின..!
  • விரல் இடையில் நழுவிச்செல்லும் நீர் போல நமக்கே தெரியாமல் சில உறவுகள் நழுவிச் செல்கின்றன. வேண்டாம் என்றாலும் சில உறவுகள் வந்து ஒட்டிக்கொள்கின்றன..! வேண்டும் என்று விரும்பும் உறவுகள் சில வேண்டாம் என்று வெட்டிச் செல்கின்றன..!


  • மனதின் வலி என்பதை கண்களில் வரும் கண்ணீர் மட்டுமே அடையாளப்படுத்தாது..! அது சிலரின் பொய்யான சிரிப்பைக்கண்டும் அடையாளமாகும்..!
  • எதிர்பார்ப்புகள் பெரும்பாலும் கனவாக மாறுவது நம் நம்பிக்கைக்குரிய நபரிடம் இருந்து மட்டுமே..!
  • ஒருவருக்கு உங்களை பிடிக்கவில்லை என்றால் தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள்..! ஏனெனில் நீங்கள் இறந்தால் அவருக்கு இறப்பு கிடையாது. இறப்பில் அவருக்கு வெறும் எண்ணிக்கை தான்..!
  • நிராகரிப்பு என்பதை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும் அதன் வலியும் வேதனையும்..! மரணத்தை விட கொடியது நிராகரிப்பு..!


  • எதையோ தேடி வானத்தில் வட்டமிட்டபடி பறக்கும் பருந்தைப் போல் உன் நினைவுகள் என்னை சுற்றிச் சுற்றியே வருகிறது..! எனக்குள் எதை தேடுகிறாய் என்பதை அறியாமலேயே நான்..!
  • நம் மனது அதிகமாக இல்லாத ஒன்றை தான் அதிகமாக தேடும். அதற்காகவே ஏங்கித்தவிக்கும்..! ஒன்று இல்லாதபோதுதானே அதன் முக்கியம் தெரியும்..!
  • கனவில் வரும் நிஜமும் நீ, நிஜத்தில் காணும் என் கற்பனையும் நீ..! என்னைப் பொறுத்தவரை கனவும்,நிஜமும் ஒன்றே என்பேன்..!
  • இல்லாத ஒன்றில் கிடைக்கும் சந்தோஷம் நிஜம் தருவதில்லை. சோர்ந்து போகும் தருணத்தில் எனக்கு இருக்கும் ஒரே ஆறுதல் தனிமை தான். தனிமை கூட வாழ்க்கைப் பாடத்தின் ஆசான்..!


  • ஏற்றுக்கொள்ள முடியாமல் ஏமாற்றவே மனம் ஆசைப்படுகிறது..! ஏனெனில் என்னை ஏமாற்றிக்கொள்ளும்போதுதான் உன்னைப்பற்றிய நினைவுகள் அதிகமாகிறது..!
  • ஆசைகள் மலை போல குவிந்து இருக்கிறது..! ஆனால் அது இருக்கும் இடமோ பாதாளத்தில்..! எங்கனம் தேடிப்போவேன்..?
  • உள்ளத்தின் உளறல்கள் பலருக்குப் புரிவதில்லை..! அது உடைந்து கிடந்தாலும் அதை கவனிக்க யாருமில்லை. கவனிக்காத ஜீவன்களுக்கு மட்டுமே உறவின் வலி தெரியும்..!


  • மனதின் வலிகளை மறைத்து போலி வேடமிட்டு புன்னகைக்கிறது பல முகங்கள். அது போலி முத்திரையிடப்பட்ட கலப்படப்பொருள்..! உறவுச் சந்தைகளில் விலை மதிப்பில்லாத தரமற்றவைகள்..!
  • நினைவுகள் நிறைந்து கொண்டே செல்கிறது. ஆனால் நிலையாய் நிஜத்தில் பாதி பேர் கூட இல்லை, நாம் உண்மையாக நேசித்தவர்கள் கூட..!
  • வார்த்தைகளால் சிதைவது மனம் மட்டுமல்ல அந்த உறவும் தான். உறவு மடிந்துபோனால் உயிரிருந்து என்ன பயன்..? நடைப்பிணமாக நான்..!
  • என் தலையணைக்கு தாகம் போல தினமும் கண்ணீரை கடனாக கேட்கிறதே...! எதை இழந்து என் கண்ணீர் தலையணை தாகம் தீர்க்கிறது..? காதல்..!


  • தேவைக்கு அதிகமான நினைவுகள் கூட கடனைப்போலத்தான்..! இரண்டுமே துக்கத்தை மட்டுமே தரும்.. கூடவே தூக்கத்தையும் பறித்துக்கொள்ளும்..!
  • பேச நிறைய இருக்கும் போது பேசுவதற்கு பிடித்தவர்கள் அருகில் இருப்பதில்லை. ஆனால் பேச நேரம் இல்லாதபோது பேச பொருளும் இல்லை..!
  • அடுத்தவர் ரசிக்கும் அளவிற்கு வாய் விட்டு சிரிக்கும் சிரிப்பில் கூட சொல்ல முடியாத சோகங்கள் மறைந்தே இருக்கின்றன..! வேதனை வடுக்களை மனதுக்குள் தேக்கியே..!
  • எவ்வளவு தூரம் கடந்து தான் சென்றாலும் சில நினைவுகள், நிழலை விட மோசமாக பின் தொடர்கிறது..விட்ட குறை தொட்டக் குறையாக..!
  • என் சிரிப்புக்குப் பின்னால் எவ்வளவு கஷ்டம் இருக்கிறது என்று என்னை புரிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். எனவே, காலம் என்பது ஒரு நாள் மாறக்கூடும். என் கவலைகளும் தீரும்..!
  • தனிமை வேதனை என்றாலும் கூட அது ஒரு பொதி மரம்..! அது கற்றுக்கொடுப்பதில் ஆசனாகவே இருக்கிறது..! அது கற்றுக் கொடுத்தது வாழ்க்கையின் மறுபக்கத்தையும்..!
  • புரிதல் இல்லையெனில் பிரிதலே மேல்..! அது எந்த உறவாக இருந்தாலும்...!
  • அனைவரும் அருகில் இருந்தும் அனாதை போல் உணர வைக்கின்றது நாம் நேசித்தவரின் பிரிவு.
  • சில சந்தர்ப்பங்களில் இழப்பதற்கும் தயராக இருங்கள்..! எதுவும் எளிதில் கிடைத்துவிடுவதில்லை..!
  • காயங்கள் உருவாக கத்திகள் தேவை இல்லை..! புரிதலற்ற வார்த்தைகளே போதும்..! வலிக்க வலிக்க நின்று கொல்லும்...வார்த்தைகள்..!
  • நீங்கள் ஒருவரை விட்டு பிரிந்த பின் உங்கள் மனம் வலிக்கிறது என்றால் அவர்கள் தான் உங்கள் இதயம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
  • சில சமயம் மீள முடியாத தனிமைக்கு தள்ளப்படுகின்றேன்..! எனது பேச்சுக்கு பிறரிடம் இருந்து மதிப்பு குறையும் போது..!
  • மனக் காயங்கள் ஆறியபோதும் நினைவுக்கு வரும்போதெல்லாம் வலிகள் மட்டும் ஏனோ புதிதாகவே தெரிகிறது..! மறக்க மறுக்கும் மனசு..!
  • பிரிந்து போவாய் என தெரியும்..ஆனால் என்னை மறந்து போவாய் என்பதே என் துயரங்களுக்கு தூளி கட்டிவிட்டது..!
  • பேசிப் பயனில்லாத போது மெளனம் சிறந்தது..! பேசியே அர்த்தமில்லாத போது பிரிவே சிறந்தது..! உறவுக்கும் பிரிவுக்கும் இடையே உள்ள இடைவெளி இதுதான்..!
  • எரித்துக் கொண்டிருக்கும் நினைவுகளை அணைத்து கொண்டிருக்கின்றேன் மையில் கவிதை வரிகளாக...! சோகங்கள் சொல்லாமலேயே விடைபெறுகின்றன..என் வார்த்தைகளின் வாய்ச் சவடாலில்..!
  • சில காயங்கள் ஆறாதிருப்பதே நல்லது.. மீண்டும் காயங்களை ஏற்படுத்திக்கொள்ளாதிருக்க அதுவே ஒரு பாடம்..!
  • பிரிவின் வலி பிரிந்தவர்களுக்கு மட்டுமல்ல பிடித்தவர் அருகில் இல்லாதவர்களுக்கும் தான்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News