காதலில் விட்டுக்கொடுப்பதும் தியாகமே..! அந்த வலியின் உணர்வுகளில் வாழுங்கள்..!

Sacrifice Quotes in Tamil-தியாகம் என்பது தாயின் மருவுருவம் என்போம். நாட்டுக்கு இன்னுயிர் தந்தவர்களை தியாகி என்போம். அதையும் தாண்டி தியாகம் என்பதுள்ளதா..?;

Update: 2022-08-31 08:19 GMT

Sacrifice Quotes in Tamil

Sacrifice Quotes in Tamil

தியாகம் என்பது வெறும் விட்டுக்கொடுத்தலில் மட்டுமில்லை. அது இழப்பிலும் அடங்கிக்கிடக்கிறது. அது வழியாக வேதனை வடிக்கிறது. காதல் வெற்றிபெறுவதைவிட தோல்வியில் இருக்கும் வலிகளுக்கே வலிமை அதிகமாகிறது. அந்த இழப்பைத்தாங்கும் இதயம் கூட தியாகத்தின் மருவுருவே.

அப்படி வலிமிகுந்த உணர்வுகளுக்கான மேற்கோள்களை படீங்க.

  • இன்பத்தை சுமந்திடும் சிறு மனதை கேட்டேன், இறைவனிடத்தில்! அவனோ, வலியை மட்டுமே தாங்கும் மனதை அளித்தான் என்னிடத்தில்!
  • எப்படியெல்லாமோ வாழ வேண்டும் என ஆசைப்பட்டு, ஒரு கட்டத்தில் எப்படியாவது வாழ்ந்தால் போதும் என்ற மனநிலையில் தள்ளிவிடுகிறது, வாழ்க்கை.
  • சுலபமாக கிடைத்துவிடும் எந்த பொருளுக்கும் இவ்வுலகில் மதிப்பில்லை, அன்பாயினும் சரி!
  • அன்பு என்பது ஒரு அருமருந்து. தேவையான அளவு இருந்தால், வாழ்வை நல்வழிப்படுத்தும். அதுவே அளவுக்கு மீறினால், விஷமாகி வாழ்க்கையையே அழித்துவிடும்!
  • யாருக்காகவும் கண்ணீர்  விடு, யாரும் துடைக்க வருவார்கள் என்றெண்ணி கண்ணீர் விடாதே!
  • .நடிக்கத்  தெரிந்தவன் எல்லாராலும் மதிக்கப்படுகிறான்! நடிக்க தெரியாதவன், எல்லாராலும் மிதிக்கப்படுகிறான்
  • புரியாத வார்த்தை இருந்தும் பயன் இல்லை! புரியாத வாழ்க்கை வாழ்ந்தும் பயன் இல்லை!
  • வலிமையான இதயங்களில் தான், அதிக வடுக்களும் உள்ளன!

Sacrifice Quotes in Tamil

  • சில உறவுகளால் வாழ்க்கை துளிர்விடுகிறது. சில உறவுகளால் வாழ்க்கை துவண்டு விடுகிறது..!
  • கண்ணீருக்கு மட்டும் கடவுள் நிறம் கொடுத்து இருந்தால், இந்த உலகம் முழுவதும் கண்ணீரீன் நிறமாகத்  தான் இருக்கும்!
  • வாழ்நாள் முழுவதும் உன்னிடம் இருக்க ஆசைப்பட்டேன்! என் காதல் உனக்கு புரியவும் இல்லை, என்னை நீ மதிக்கவும் இல்லை!
  • தேவைக்கென்று பழகுபவர்கள் விட்டுச் சென்றால், விலகி இருங்கள்! மீண்டும் தேவைப் படுமாயின், தேடி வரட்டும்!
  • எவ்வளவு தான் நீ என்னை வெறுத்தாலும், உன் நிழல் போல் உன்னை பின் தொடர்வேன்!
  • எல்லாப் பக்கமும் உறவுகள் கசக்கும் போது, மனதிற்கு பிடித்தவரிடம் தான் மனம் ஓடி வருகிறது!அந்த உறவும் புரிந்துகொள்ளாமல் வதைக்கும் போது, வாழ்க்கை வெறுத்துத்தான் போகிறது!
  • நீங்காத வலிகளைத் தந்துவிட்டு நீங்கி விட்டாய் – உயிர் நீங்காதோ என ஏங்கிக்கொண்டிருக்கிறன் நான்..!
  • என் இதயத்தில் நீ தந்த வலிகளை உன் இதயம் சந்திக்குமாயின், அது துடிப்பதையே நிறுத்திவிடும்!
  • உணர முடியாத, சந்தோசமும் நீதான்! உணர்த்தி சென்ற வலியும் நீதான்!
  • அதிகாலையில் எழும் முதல் நினைவும் நீ, தொடக்கமாய்! இரவில் தோன்றும் கனவும் நீ, முடிவாய்!
  • மூச்சு நின்றால் மட்டும் மரணமில்லை! சில அன்பான இதயங்களின் பேச்சு நின்றால் கூட, மரணம் தான்!
  • உறக்கம் இல்லாத என் இரவில், இறக்கம் இல்லாத உன் நினைவுகளை சுமந்து கொண்டு, மறக்க முடியாமல் நானும், நம்மால் மலர்ந்த காதலும்
  • மரணத்தை காட்டிலும்

கொடுமையானது மனக்கவலை.

  • மரணம் ஒருமுறை தான் கொல்லும்.

மனக்கவலை நொடிக்கு நொடி கொல்லும்.

சிலரின் மௌனம் திமிரல்ல அவர்களுக்குள் இருக்கும் வலி…!

  • பழகிய மிருகங்களிடம் இருக்கும் பாசம் கூட,

பழகிய மனிதர்களிடம் இருப்பதில்லை…

  • ஒருதுளி அன்பை கொடுத்து நூறுதுளி கண்ணீரை விலை கேட்பதுதான் இந்த வாழ்க்கை…
  • காயங்களின்றி காலம் எதையும் கற்றுக்கொடுப்பதில்லை…
  • நேசிப்பவர்கள் எல்லாம் நம்மோடு நிலைத்துவிட்டால் நினைவின் மொழியும் பிரிவின் வலியும் தெரியாமல் போய்விடும்…
  • என்ன நடந்தாலும் உன்னிடம் சொல்லியே பழகிவிட்டேன் நீ போனதை யாரிடம் சொல்ல?
  • என் இதயமும் உணர்வற்று..

உன் நினைவால்..

என் உயிர் மட்டும் …

வாழுதடி..!

Sacrifice Quotes in Tamil

  • மறக்க நினைக்கும் நீயும்…

மறக்க முடியாமல் நானும்.

  • விடைபெறாத என் வார்த்தைகளால்..

விடுபட்டு நிற்கிறது என் காதல் உந்தன் முன்…

  • சேரவும் முடியாது பிரியவும் முடியாது ஆனால் ஒன்றாகவே பயணிப்பது தண்டவாளங்கள் மட்டுமல்ல சிலரின் காதலும் தான்
  • பேச வாய்ப்பிருந்தும் பேச முடியாத தருணங்களையும் சேர வாய்ப்பிருந்தும் சேர முடியாத தருணங்களையும் கடந்து வாழும் காலம் ஒரு சிறந்த மருந்தாகும்..
  • உலகிலேயே மிக விலை உயர்ந்த விஷயம் நம்பிக்கை அதை அடைய வருடங்கள் ஆகலாம் அது உடைய சில நொடிகளே போதும்
  • சிறு சிறு மாற்றங்கள் ஏதேதோ யோசிக்க தோன்றுகிறது பிரியமான உள்ளங்கள் இடமிருந்து
  • எதிர்பார்த்த போது கிடைக்காத எதுவும் அதன் பிறகு எத்தனை முறை கிடைத்தாலும் சந்தோஷம் கொடுப்பதில்லை அன்பும் அப்படித்தான்
  • உலகின் உண்மையான அன்புக்கு கிடைக்கும் மிகப்பெரிய பரிசு கண்ணீர் துளிகள்
  • நாம் பிறருக்கு தேவை என்றால் கண்டுகொள்ள படுகிறோம் கவனிக்கப்படும் அதுவே தேவையில்லை என்றால் காயப்படுத்த பயப்படுகிறோம்
  • அனைவரும் அருகில் இருந்தும் அனாதை போல் உணர வைக்கின்றது நாம் நேசித்த அவரின் பிரிவு
  • நேசித்த உறவுகளை நேரில் பார்க்க முடியவில்லை என்றாலும் நேசித்த நினைவுகளை நெஞ்சுக்குள் பார்க்க முடியும்
  • சிறு சிறு மாற்றங்கள் ஏதேதோ யோசிக்கத்  தோன்றுகிறது பிரியமான உள்ளங்களிடமிருந்து..!
  • கடலில் நின்று கலசத்தை கவிழ்த்தான் சாம்பலாக கரைந்து சென்றார் நீந்த கற்றுக்கொடுத்த தந்தை..
  • நிஜத்தில் பாதி கனவில் மீதி என்று வாழ்க்கை கடந்துக்கொண்டிருகின்றது…
  • வேடிக்கை பார்ப்பவனுக்கு இழப்பின் மதிப்பு புரியாது
  • நம் உறவாக இல்லாத போதும் அவர்களின் மரணம் மனதை பாதிக்கதான் செய்யுது
  • வழக்கம்போல் உலகம் அமைதியாகவே இயங்கிக்கொண்டிருக்கு ஆங்காங்கே உயிர்கள் துடிப்பதை ரசித்தவண்ணம்…
  • நினைவுகளும் சுமை மனதுக்கு தொல்லையாகும் போது
  • நேசித்தலை விட பிரிதலின் போது உன் நினைவுகள் இரட்டை சுமை… மனதின் அழுத்தம் குறைக்க ஒருமுறை கடன்கொடு உன் இதயத்தை..
  • சில ரணங்களை மறக்க ஏதோவொன்றை மனம் ரசிக்கதான் வேண்டும்

Sacrifice Quotes in Tamil

  • நிஜத்தின் வலியில் கற்பனை எல்லாம் இறந்து போனது
  • சில நேரங்களில் தனிமை கடினம் சில நேரங்களில் தனிமை தான் இனிமையான தருணம்…!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News