ரெட் ஒயின் குடித்தால் அழகு கூடுமாம்..! எப்டீன்னு பாருங்க..!
Wine Benefits in Tamil-ஒயின் என்பது போதைக்காக பயன்படுத்துவதும் உண்டு. அதேபோல இந்த ரெட் ஒயின் எப்படி தயாரிக்கறாங்க? அதன் பயன்கள் என்ன? தெரிஞ்சிக்குவோம்.
Wine Benefits in Tamil-குடி குடியை கெடுக்கும்னு சொல்லுவாங்க. ஆனா ஒயின் குடிப்பது பல நன்மைகளைத் தரும்னு நாம பார்க்கப்போறோம். நீங்க நினைப்பதுபோல இந்த ஒயின் போதை தருவது அல்ல. உடலுக்கு நன்மையை தரக்கூடிய பானமாக கருதப்படுகிறது. பொதுவாகவே ரெட் ஒயின் சாப்பிடுவதால் முகம் அழகாகும் என்றும் கருதப்படுகிறது.
ஆனால், உண்மையான காரணம் உடம்பிலுள்ள மெலனின் டோனை பாதுகாத்து அதிலுள்ள ஆன்டிஆக்சிடன்களை மெருகேற்றுகிறது.பொதுவாக நம்மில் பலருக்கும் வெயிலில் இருப்பதால் தோல் நிறம் சற்று குறைந்து காணப்படும்.
அதே வெயிலில் இல்லாமல் வீட்டில் இருந்தால் நிறம் குறையாமல் இருக்கும். அவ்வாறு முகம் வெண்மையாகவும் பளபளப்புடனும் இருப்பதற்கு தோலிலுள்ள மெலனின் நிறத்தை பாதுகாப்பதே காரணம். அந்த மெலனின் நிறத்தை பாதுகாப்பது இந்த ரெட் ஒயின்.
எப்படி தயாரிக்கப்படுகிறது..?
ரெட் ஒயினானது ஆன்டிஆக்சிடன்கள் நிறைந்த திராட்சைப் பழங்களை நொதிக்கவைத்து தயாரிக்கப்படக்கூடியது. இதனால், அதில் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன.
ஒயின் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
- உடலுக்கு நன்மை அளிக்கக்கூடியதில் இந்த ரெட் ஒயின் என்கிற மதுபானமும் ஒன்றாகும்.
- இதை அளவாக குடிக்கும்போது அது உடலுக்கு நல்ல பயனை அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது.
- மேலும் இதனை எடுத்துக்கொள்வதன் மூலம் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி உடலுக்கு நல்ல பயனை கொடுக்கிறது.
- பெண்கள் இதனை எடுத்துக்கொள்வதன் மூலம் அவர்களுக்கு தேவையான ஊட்டத்தை கொடுத்து அவர்களின் தோல்களுக்கு நல்ல பொலிவைத் தருகிறது. மேலும் இதயநோய், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அதிக வலுவைக் கொடுத்து அவர்களை பாதுகாக்கிறது.
- ரெட் ஒயினில் அதிக அளவு ஆன்டிஆக்சிடன்கள் காணப்படுவதால் இவை புற்றுநோயை தடுக்கும் வல்லமை உடையதாக காணப்படுகிறது.
- திராட்சையின் தோலில் தான் அதிக அளவு ஆன்டிஆக்சிடன்கள் காணப்படுகிறது. அதை நொதிக்கவைத்து தயாரிக்கப்படுவதால் அதிக சத்து நிறைந்து காணப்படுகிறது.
- ரெட் ஒயினில் குறைந்த அளவே கலோரிகள் காணப்படுவதால் இது உடலின் எடையை அதிகரிக்காது. எனவே, உடல் எடை குறைக்க விரும்புவோர் இதனை அருந்துவது நல்ல பயனை கொடுக்கும்.
- ரெட் ஒயினை குடிப்பதனால் அது மன அழுத்தத்தை சரிசெய்து பாதிக்கப்பட்ட டி.என்.ஏ-வை சரிசெய்யும் ரெஸ்வெரட்ரால் உள்ளது.
- தூக்கமின்மையானால் அவதிப்படுவோர் ரெட் ஒயினை பயன்படுத்துவதன் மூலம் நல்ல தூக்கம் வரும். ஏனெனில் ரெட் ஒயினில் தூக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மெலடோன் எனப்படும் உட்பொருள் காணப்படுகிறது.
- ரெட் ஒயின் உட்கொள்வதால் அது தோல்களின் தன்மையை பாதுகாத்து சருமப் பொலிவைத் தருகிறது. முதுமையைத் தடுத்து இளமையைத் தக்கவைக்கும் தன்மை ரெட் ஒயினுக்கு உள்ளது.
- புகையிலை பழக்கத்தை கைவிட நினைப்போர் ரெட் ஒயின் அருந்துவதால் அது குடல் அழற்சியை சரிசெய்து நல்ல பயனை அளிக்கிறது.
- ரெட் ஒயினில் அதிக அளவு பாலிபீனால் காணப்படுகிறது.இது நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.
- உயர்இரத்த அழுத்தமானது கண்நோய்,சிறுநீரக கோளாறுகள்,இதய பாதிப்புக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. இதை சரிசெய்வதற்கு ரெட் ஒயின் ஒரு நல்ல மருந்தாக பயன்படுகிறது.
எப்போது ஒயின் குடிக்கலாம் ?
ரெட் ஒயினை குடிப்பதற்கு உகந்த நேரம் இரவுதான். இரவு தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாகவே உட்கொள்வது நல்லது.
மீண்டும் ஒருமுறை நினைவில் கொள்ளுங்கள மருத்துவரின் ஆலோசனைப்படி இதனை உட்கொள்வது நல்லது.மேலும் ஆல்ஹகால் இல்லாத ஒயினை பயன்படுத்துவதும், அதனை அளவோடு எடுப்பதும் உடலுக்கு நன்மையை தரும் .
ஒயின் வகைகள்
ஒயின் வகைகளில் ரெட் ஒயின்,ஒயிட் ஒயின் என்று இரண்டு வகைகள் உள்ளன.
ரெட் ஒயின் கருப்பு மற்றும் சிகப்பு திராட்சைகள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. வெள்ளை ஒயின் வெள்ளை திராட்சை கொண்டு செய்யப்படுகிறது.
ஒயிட் ஒயின் இதயபாதுகாப்பிற்கு உகந்தது. ரெட் ஒயினானது பாலிபீனால் அதிகமாக காணப்படுவதால் அது ஒரு நாளைக்கு குறைந்த அளவு மட்டுமே எடுப்பது நல்லதாகும்.
ஒயின் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்
'விருந்தே ஆயினும் மருந்தோடு உண்' என்பது ஒளவையார் வாக்கு. ரெட் ஒயினில் அதிக அளவு பாலிபீனால் இருப்பதால் இதை அதிக அளவு எடுக்கும்போது பற்சிதைவு மற்றும் இதய பாதிப்பு ஏற்படலாம்.
மேலும் அதிகமாக எடுப்பதன் மூலம் இதில் காணப்படக்கூடிய வேதி பொருட்கள் உடல் ஹார்மோன்களோடு கலந்து பக்க விளைவை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. அதிகம் எடுத்துக்கொள்ளும்போது சிலசமயங்களில் இதய பாதிப்பை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் தன்மையும் உடையது.
ஆல்கஹால் இல்லாத ஒயின்
பொதுவாகவே ஆல்ஹகால் இல்லாத ஒயினை பயன்படுத்துவது நல்லதாகும். ஆனால் சிறிதாவது ஆல்கஹால் சேர்க்கப்பட்டே ஒயின்கள் தயாரிக்கப்டுகின்றன. எனவே, மருத்துவரின் ஆலோசனைப் படியே பயன்படுத்துவது நல்லது.
ஒயினின் அழகு குறிப்பு
சிலர் உடல் அழகுக்காக ஒயினை பயன்படுத்துவது உண்டு. ஒயினை பயன்படுத்தி ஃபேசியல் செய்வதும் உண்டு.
மேலும் அதை குடிப்பதற்கு தயக்கம் இருப்பவர்கள் ஒயினை ஒரு காட்டன் துணியில் நனைத்து அதை முகத்தில் தேய்த்து பத்து நிமிடங்கள் கழித்து கழுவும்போது முகம் பொலிவும் மென்மையும் பெறுகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2