.மாலைக்கண் முதல் மனநோய் வரை விரட்டிடும் செவ்வாழைப்பழம்!
மஞ்சள் மற்றும் பச்சை வாழைப்பழங்களை காட்டிலும் செவ்வாழை பழத்தில் அடர்த்தி அதிகம்.
ஊட்டச்சத்துக்களும் அதிகம். வைட்டமின்கள் மட்டுமல்லாமல் தாதுக்களும் அடங்கிய பழம் இதுவாகும். இவை அனைத்துமே சேர்ந்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கின்றன. அதிக ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும்.. நுரையீரல், கல்லீரல், இதயம், குடல் உள்ளிட்ட உடலுறுப்புகளின் ஆரோக்கியத்தை செவ்வாழை காக்கின்றன.
இதய நோயை கட்டுப்படுத்துவதிலும் செவ்வாழைக்கு பெரும் பங்கு உள்ளது. முக்கியமாக குடலில் நல்ல பாக்டீரியாவின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரிக்க செய்யும் சாத்தியக்கூறுகள் செவ்வாழையில் இருக்கின்றன. ஆகையால் வயது முதிர்வினால் ஏற்படும் செரிமான பிரச்சனைகளை இவை தீர்க்கின்றன.
கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் தினமும் 100 கிராம் செவ்வாழையை சாப்பிட்டு வரலாம். செவ்வாழையை சாப்பிடுபவர்களுக்கு மாலைக்கண் பிரச்சனை வருவதே கிடையாது. இதிலுள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை தீர்க்கின்றன. செவ்வாழையை குட்டியாக நறுக்கி கண்ணின் மீது கொஞ்சநேரம் வைத்தாலே, மொத்த உஷ்ணமும் விலகி விடும்.
சொறி, சிரங்கு, வெடிப்பு தொந்தரவுகள் இருப்பவர்கள் வாரம் 1 செவ்வாழையை சாப்பிடலாம். இதனால் தொற்று நோய்களும் அண்டாது. கிருமிகளும் நீங்கி விடும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைய உள்ளதால், சருமம் பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. செவ்வாழையில் கால்சியம் உள்ளதால், பற்களுக்கும், எலும்புகளுக்கும் வலுதருகிறது. இதனால் பலவீனமான பற்களும் வலுவடையும். இந்த பழத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளதால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாகுவதை தடுக்கும். ஏற்கனவே சிறுநீரகத்தில் கற்கள் இருந்தாலும், செவ்வாழையை வாரம் 2 முறை சாப்பிடுவது சிறந்தது.
செவ்வாழைப்பழத்தில் வைட்டமின் B6 நிறைந்திருக்கின்றன. இது மூளையிலுள்ள செரோடோனின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இது மனநிலையை மேம்படுத்துகிறது. அத்துடன் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளை குறைக்கிறது. வாரம் இருமுறையாவது செவ்வாழைப்பழங்களை உண்பது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.