சமையல் குறிப்பு : குழாய் புட்டு, நீத்துப்பெட்டி புட்டு…

புட்டு இரண்டு வகைப்படும். குழாய் புட்டு, நீத்துப்பெட்டி புட்டு

Update: 2023-11-20 12:00 GMT

புட்டு வகைகள் தயாரிப்பு

புட்டு இரண்டு வகைப்படும். குழாய் புட்டு, நீத்துப்பெட்டி புட்டு

மாவு, புட்டு போன்றவற்றை அவிக்கப் பயன்படும் குழாய் வடிவ சாதனம் மரத்தால் மட்டுமே செய்யப்பட்டிருந்தது. தற்போது அலுமினியம், எவர்சில்வர் என பல பொருட்களால் செய்யப்பட்டு, பல வடிவங்களில் சந்தையில்கிடைத்தாலும், பனை ஓலையால் ஆன கூம்பு வடிவ நீத்துப்பெட்டி என வட்டார வழக்கில் அழைக்கப்படுகிற சாதனம் இலங்கையில் பிரபலம்.

இன்றும் கிராம, நகரப்புறங்களில் பயன்பாட்டில் உள்ள நீத்துப்பெட்டி நம் முன்னோர்கள் நமக்கு தந்த ஒரு சொத்து. தமிழர் பாரம்பரியத்தில் பல்வேறுபட்ட உணவுகள் காணப்பட் டாலும் காலை, இரவு உணவு வேளை பெரும்பாலும் புட்டு முக்கிய பங்கு வகிக்கிறது.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் எல்லா வீடுகளிலும் புட்டு, ஒரு வேளை உணவாக அவர்களின் சாப்பாட்டு மேஜையில் இருக்கும். அந்தளவிற்கு இந்த உணவு பிரபலமாக உள்ளது. அரிசி மா, கோதுமை மா கொண்டு தயாரிக்கப்படும் புட்டு அவிப்பதற்காக இந்த நீத்துப்பெட்டியை பயன்படுத்துகிறார் கள்.

இது பெரும்பாலும் பனை ஓலை கொண்டு இழைக்கப்படும். தற்போது பிரம்பு கொண்டு இழைக்கப்பட்ட நீத்துப் பெட்டிகளும் சந்தைகளில் காணப்படுகின்றது. பனையோலை குருத்தை வெட்டி நிழலில் அல்லது வெயிலில் நன்றாக காயவிட்ட பின், அதை சீரான அளவுகளில் நீள நீள கீலங்களாக வெட்டப்பட்டு, ஓலைக்கீலங்கள் நேர்த்தியாக பின்னப்பட்டு நீத்துப்பெட்டி உருவாக்கப்படும்.

இதற்காக முற்றிய பனை ஓலையை  பயன்படுத்த முடியாது, பின்னும் போது ஓலை மடிந்து உடைந்து விடும் என்பதால். அதற்காக மிகவும் இளம் குருத்தோலைகளையும் பாவிக்க முடியாது, பின்னப்பட்ட நீத்துப்பெட்டி உறுதியில்லாமல் வளைய கூடியவாறு இருக்கும் என்பதால். பொதுவாக இளம் குருத்தில் இருந்து இரண்டாவது அல்லது மூன்றாவது குருத் தோலை தான் வெட்டி எடுக்கப்பட்டு பயன்படுத்தப் படும்.

கூம்பு வடிவில் இழைக்கப்பட்டிருக்கும் நீத்துப் பெட்டியின் கூம்பின் முனைப்பக்கம் கீழ் நிற்கத்தக்கவாறு நீருள்ள பானையுள் வைத்தால், அரைவாசி நீத்துப் பெட்டி உள்ளேயும், அரைவாசி பானைக்கு வெளியேயும் இருக்கத்தக்கதாக பானையில் விளிம்பில் பெட்டி பொருந்தி நிற்கும். நீத்துப்பெட்டி தொடாதவாறு பானையில் நீர் இருக்க வேண்டும்.

பிடித்துத் தூக்க ஏதுவாக இரண்டு காது மடல்கள் போல் வடிவமைத்து பின்னப்பட்டிருக்கும். இதற்காக நீத்துப்பானை என்ற ஒரு பானை பாவிக்கப்படும். அதில் சிறிதளவு நீர் விட்டு நன்கு கொதிக்க ஆரம்பித்த பிறகு, நீத்துப் பெட்டியில் புட்டு மாவை நிரப்பி அதில் வைத்து நீராவி வெளியில் போகாதவாறு நீத்து மூடி என்ற சாதனத்தால் மூடி சில நிமிடங்கள் அவிக்கப் படும். நவீன மயமாக மாற்றங்கள் ஏற்பட்டாலும் நீத்துப்பெட் டியில் புட்டு அவித்து சாப்பிடுவதில் உள்ள சுகமே தனியானது தான்.

Tags:    

Similar News