பூமிக்கு வான் வழங்கும் தானம், மழை..! நீரின்றியமையாது உலகு..!

Kavithai About Rain in Tamil-மழை,என்பது வளி மண்டலத்திலிருக்கும் நீராவி குளிர்ந்து நீர்ம நிலையை அடைந்து, ஈர்ப்பு விசையின் காரணமாக பூமியை நோக்கி விழும் நிகழ்வு.;

Update: 2022-09-28 10:59 GMT

Kavithai About Rain in Tamil

Kavithai About Rain in Tamil-மழை எப்படி உருவாகிறது? கடல் பரப்புகள் மற்றும் பிற நீர்நிலைகளில் இருந்தும், சூரிய வெப்பத்தால், ஆவியாதல் செயல் முறை மூலம், நீரானது நீராவியாகி வானை நோக்கி மேலெழுந்து செல்கின்றது. அப்படி மேலெழுந்து செல்லும்போது, மேலே செல்லச் செல்ல வெப்பநிலை குறைவதனால் நீராவி ஒடுக்கமடைந்து சிறு நீர்மத்துளிகள் உருவாகின்றன. அவை ஒரு தொங்கல் நிலையில் மேகங்களை உருவாக்கும்.

மேகங்கள் மேலும் குளிர்வடையும்போது, மேலும் ஒடுக்கமடைந்து பெரிய நீர்த்துளிகளாக மாறுகின்றன. அவற்றின் எடை அதிகரிக்கையில் புவி ஈர்ப்புவிசை காரணமாக மேகங்களில் (கார்முகில்களில்) இருந்து நீரானது துளிகளாக, திவலைகளாக பூமியின் மேற்பரப்பில் விழும் போது மழையானது ஏற்படுகிறது. மழை விழும் போது மொத்த நீரும் நிலத்தை அடைவதில்லை. அதில் ஒரு பகுதி நீராவியாகி விடுகிறது. பாலைவனம் போன்ற பகுதிகளில் மொத்த நீரும் ஆவியாகிவிடுவதும் உண்டு. ஒரு இடத்தில் மழை அதிகமாகப் பெய்யும் காலம், அவ்விடத்திற்குரிய மழைக்காலம் என அழைக்கப்படுகின்றது. ஆகவே மழையும் பருவநிலையைக் குறிப்பிடும் காலக்கருவியாக உள்ளது.

  • காற்றுக்காதலன் அணைத்ததால் மேகக்காதலிவிடும் ஆனந்தக் கண்ணீர், மழை..!
  • விண்ணுக்கும் மண்ணுக்கும் தொங்கவிடப்பட்ட நூல் கயிறுகள்..மழை..!
  • ஜில்லென்று நம் ஜீவனை உருக்கி, இந்த ஜில்லாவையே ஜிகிர்தண்டாவாய் மாற்றி விடுகிறது மழை..
  • சிறிய நேர மழையில் மனமும் கூட நனைந்தது, அவனை நினைவூட்டிய ஒரு நொடியில்..
  • கார்மேகம் பிழிந்தெடுத்து மை திரட்டி இறைவன் எழுதிய கவிதையோ மழை..
  • மழைக்கு ஒதுங்கி நிழற்குடையின் கீழ் நின்றேன்! அவளும் அங்கு வந்தாள் இப்பொழுது நிழற் குடைக்குக் கீழும் மழை..
  • உன் வார்த்தைகள் மழையாய் பொழிய, பொழிய நனைகிறேன் நான்... பகலும் இரவும் எதுவென புரியாமல், அருகில் நடப்பதும் தெரியாமல் நனைகிறேன் நான்...
  • வானம் அழுகிறது, விவசாயி சிரிக்கிறான், மழை..
  • மழைக்கு ஒரு வாசல் உண்டு வாசலிலே அது விழுவதுண்டு, இருந்தாலும் அனைவராலும் ரசிக்கப்படுவதுண்டு..
  • அவள் வெகுநாட்களாக காத்திருக்கிறாள், நீ வந்து அவள் பசியாற்றுவாய் என்று, தரிசு நிலம் - மழையை..
  • மழை பொழியும் அந்த மகிழ்வான நேரம், ஓர் குடையில் இருவரும் ஒன்றாக தொலைதூரம் இடைவெளி இல்லாது, இருக்கமாய் இருவரும் காதலிலே பயணிப்போம்..மழையை ரசித்தபடி, மனமும் குளிர்ந்தபடி செல்ல வேண்டும் ஓர் அழகிய காதல் பயணம்..
  • மழையோ அவளை நனைத்தது! அவள் அழகோ, என்நெஞ்சை பறித்தது.. அவள் மழைச்சாராலில் நனைந்ததால், நான் அவள் முகச்சாயலில் கரைந்தேன்...
  • நம் மனதில் பல காயங்கள் இருந்தாலும், மெல்லிய சாரலோடு, சிலுசிலுவென்று காற்றுடன் வரும் மழையில் நாம் நனையும் போது நம் மனதில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் மறைந்து போகிறது..
  • வீட்டுக்குள் இருக்கும் என்னவளை ஜன்னல் வழியே அவளை ரசிக்கிறது.. மழை
  • முத்துகள் விழும் சத்தம் கேட்டு விழித்தெழுந்தேன், சிதறியது முத்துக்கள் அல்ல மழைத்துளிகள்..
  • சிலுசிலுவென பொழிகின்றாய்.. சிறு சிறு துளிகளாய் விழுகின்றாய்..வைரக்கற்கள் தெறித்தாற்போல சிதறி வீழ்கின்றாய்..
  • உன் வருகைக்கும் முன்னே குளிர் காற்றை அனுப்பி மண் மட்டுமல்ல விவசாயிகளின் மனங்களையும் குளிர் வடையச் செய்தாயே.
  • மழையே மெல்ல மண்ணில் விழுந்து, எழுந்து உயிருடன் கலந்தாய்! பல விவசாயிகளின் உயிரையும் காத்தாய்..
  • மழைத்துளி இசையால் மனம் காகித கப்பல் போல் மிதக்குமே.. ஆயிரம் கவலைகள் இருந்தாலும் உடனே என்னை விட்டு விலகிச் செல்லுமே..
  • பூமிக்கு நீ தந்த வருகையால் மலர்ந்தது மலர்கள் மட்டுமல்ல மக்கள் மற்றும் விவசாயிகளின் மனமும் தான்.
  • உன் சின்ன தூறல் இசைகேட்டு.. உன் செல்ல மழையின் குரல் கேட்டு, உன்னில் இன்று விழிக்கிறேன்..
  • உருமி மேளம் இடி முழங்கி வரவேற்ப்பை தருகிறாய்.. வாசல் வந்து வரவேற்றால் கண்டு கொள்ளாமல் போகிறாய்..
  • வண்ண வண்ண கலர் பூசி வானவில்லாய் ஒளிகிறாய்.. வையகத்திற்கும் உயிர் தந்து உன்னை நீயும் இழக்கிறாய்..
  • மெல்ல மெல்ல கரைகிறேன் உன் மழை பொழிவாள்.. நீ செல்ல செல்ல உறைகிறேன் நீ போன பின் அடிக்கும் குளிர் காற்றால்..
  • ஏன் வந்தாய்? ஏன் சென்றாய்? புரியவில்லை, உன் இன்ப சாரலில் நனைகையில்.
  • கார்மேக கூந்தல் கொண்டு கட்டி அணைக்க நீ வந்தாய்! சற்று நிமிடம் ஆடிப்போனேன் உந்தன் உடல் (மழைத்துளி) பட்டதும்..
  • கடலில் நீ விழுந்து கனிம நீர் ஆனாய்.. தரையில் நீ விழுந்து கரிம நீர் ஆனாய்..
  • மழையில் நனைவது அதைவிட அழகு.. மழையின் இடையே வெயில் பேரழகு..மழையில் குழந்தையின் காகித கப்பல் அழகோ அழகு.. மழைக்குப்பின் மண்வாசனை அற்புதமான அழகு.. மழை இரவின் குளிர் அழகே அழகு.. அடுத்தநாள் பெய்யும் மழை அதனினும் அழகு.. மொத்தத்தில் மழையே ஒரு அற்புதமான அழகு..
  • மழையே உன் வருகையால் அளவற்ற மகிழ்ச்சி விவசாயிகள் மனதிற்குள் ஓடையாய் பெருக்கெடுத்து ஓடுகிறது.
  • கார்மேக தோட்டத்தில் பூத்த கண்ணாடிப் பூவே..காற்றில் பறந்து என் மீது விழுந்தாயோ..
  • உன் சத்தம் கேட்க நித்தம் நிற்கிறேன். உலகின் கவலையும் மறந்தேன்.. உயிருடன் இணைந்தேன்.. உன்னுடன் இன்று உன் நுழைந்தேன்.
  • மேளதாளங்கள் முழங்க..மின்னல் வாணவேடிக்கை நடத்த மழை மகளை வரவேற்கிறது இயற்கை..
  • கானகம் வரைந்த தூரிகையற்ற ஓவியம் மழை..


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News