Quotes for Friends in Tamil-மரியாதை கிடைக்காத ஒரு உறவு நட்பு..! வாடா..போடாதான்..!

வாழ்வில் எத்தனையோ நண்பர்களுடன் பழக நேரிடும். ஆனால் சில உன்னத மனிதர்களிடம் மட்டுமே நட்பு நிலைத்து நிற்கிறது. அதுவே உண்மையான நட்பு.;

Update: 2024-02-09 15:16 GMT

quotes for friends in tamil-நட்பு மேற்கோள்கள் (கோப்பு படம்)

Quotes for Friends in Tamil

உண்மையான நட்பானது எதையும் எதிர்பார்க்காது. துன்பம் வரும் போது முதலில் உதவக்கூடியது உண்மை நட்பு. ஜாதி⸴ மத பேதமின்றி பழகக் கூடியதே உண்மை நட்பின் அடையாளம் ஆகும்.நட்பானது ஆறுதல் கூறவும் துன்பத்தின் போது கூடவே துணையாக இருக்கும். உண்மை நட்பு உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதோ, எதிர்பார்ப்புடன் உதவி செய்வதோ உண்மை நட்பில் என்றும் கிடையாது.

Quotes for Friends in Tamil

புரியாத நட்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை புரிந்த நட்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை...

நல்ல தோழி உயிராக பழகினால், அவள் காதலியைவிட சிறந்தவள்..

உன் நட்பு என்னும் சிறையில் சிக்கிக் கொண்டேன் தவறுகள் செய்தால் தண்டித்து விடு ஆனால் விடுதலை மட்டும் செய்து விடாதே..

உங்கள் தவறை நியாயப்படுத்தும் நண்பனை விடவும் சுட்டிக்காட்டி திருத்தும் நண்பன் தான் சிறந்தவன்...

அன்று புன்னகை மட்டுமே வாழ்க்கையாக இருந்தது..! இன்று நினைவுகள் மட்டுமே வாழ்க்கை ஆகிவிட்டது நண்பா நம் பிரிவினால்.

நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது. ஆனால், ஒரு நல்ல நண்பனின் மவுனம் இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தி விடும்.

Quotes for Friends in Tamil

ஆறுதல் சொல்ல தோழி இருந்தால் அழுவதில் கூட ஆனந்தம் உண்டு, தூக்கி நிறுத்த தோழன் இருந்தால் விழுவதால் கூட சுகம் உண்டு.

இன்னொரு நட்பு உன்னை போல கிடைக்க போவதில்லை..

அறிமுகம் இல்லாமல் வந்தோம் அடிக்கடி பேசி கொண்டோம் உறவுகளுக்கு மேலே, உயிர் ஆனோம். காலங்கள் கடந்து சென்றாலும் கடைசி வரை தொடர வேண்டும் நம் நட்பு...

புன்னகை என்ற முகவரி உங்களிடம் இருந்தால்.. நண்பர்கள் என்ற கடிதம்.. உங்களுக்கு வந்து கொண்டே இருக்கும்..

உங்கள் தகுதியை உயர்த்திக்கொள்ள தகுதியுள்ள மனிதர்களிடம் பழகுங்கள். தவறான நபருடன் பழகுவதற்க்கு பதில் தனியாக இருப்பதே மேல்.

-ஜார்ஜ் வாஷிங்டன்

Quotes for Friends in Tamil


உங்கள் சிறந்த நண்பருடன் வாழ்க்கையைப் பகிர்ந்து, வழிப் பயணத்தை ஒன்றாய் ரசித்து ஒவ்வொரு இலக்கையும் ஒன்றாய் அடைவதே திருமணம்.

-ஃபான் வீவர்

எனக்குள் இருக்கும் சிறந்தவற்றை வெளிக்கொணர்பவனே, என் சிறந்த நண்பன்.

-ஹென்றி ஃபோர்டு

ஒரு முட்டாள் தன் நண்பர்களை பயன்படுத்துவதைவிட ஒரு அறிவாளி தன் எதிரிகளை நன்றாக பயன்படுத்திகாள்கிறான்.

-பால்டாசர் கிரேசியன்

புத்தகங்களை யாருக்கும் இரவல் தராதீர்கள், அது உங்களுக்குத் திரும்ப வராது. என்னிடம் உள்ள புத்தகங்கள் யாவும் என் நண்பர்கள் எனக்கு இரவல் தந்தது தான்.

-அனடோல் பிரான்ஸ்

Quotes for Friends in Tamil

நட்பு என்ற வார்த்தை இந்த உலகில் உலவும் வரை

இங்கு யாரும் அனாதை இல்லை

நண்பர்கள் தவறு செய்தால் மன்னித்து விடாதே. மறந்து விடு

ஏனெனில் அவர்கள் உணர்வுகள்,உன் உறவுகள் அல்ல

எதிர்பாராத சந்திப்பில் தோன்றும் புன்னகை,

நினைவுபடுத்தும் நட்பின் பசுமையை!

நல்ல நண்பனை அடைய விரும்பினால்

நீயும் நல்லவனாக இருக்க வேண்டும்

எதையும் செய்ய கூடிய நட்பு கிடைத்தும்,

அதை உபயோகித்துக் கொள்ளாததில் இருக்கிறது

நட்பின் அழகு!

ஒரே ஒரு நல்ல நண்பன்

உன் வாழ்க்கையில் இருந்தாலும்

நீ ஆசிர்வதிக்கப்பட்டவன்

Quotes for Friends in Tamil

ஆறுதல் சொல்ல தோழி இருந்தால்

அழுவதில் கூட ஆனந்தம் உண்டு

தூக்கி நிறுத்த தோழன் இருந்தால்

விழுவதால் கூட சுகம் உண்டு

ஆயிரம் சொந்தம் நம்மை தேடி வரும்

ஆனால், தேடினாலும் கிடைக்காத ஒரே சொந்தம்

நல்ல நண்பர்கள்!


ஸ்டேட்டஸ் ஐயும் சேவிங்ஸ் ஐயும்

பார்த்து பழகும் உறவுகளுக்கிடைய

குணத்தையும் மனதையும் பார்த்து பழகும்

நட்பு சிறந்ததே

பல நாட்களுக்கு ஒரு முறை பேசினாலும்,

நண்பனின் பட்டப்பெயர் தான்

முதலில் ஞாபகத்தில் வருகிறது

Quotes for Friends in Tamil

பல நேரங்களில் விட்டு கொடுப்பது மட்டுமல்ல

சில நேரங்களில் தட்டிகொடுப்பதும் தான் நட்பு!

மலரின் வாசம் அனைவரையும் கவரும்!

அதுபோல நம் நட்பின் சுவாசம் அனைவரையும் கவரட்டும்!

நாம் தவறு செய்யும் போது சிரிக்கின்ற நண்பன்

கஷ்டப்படும் போதும் சிரித்துக் கொண்டுதான் இருப்பான்

எத்தனை வயதானாலும்

மரியாதை மட்டும் கிடைக்காது

நண்பர்களிடத்தில்

Tags:    

Similar News