ஓ..இதுதான் காதலா..? உனக்கே உனக்கானேன்..உன்னாலே உயிர் வாழ்கிறேன்..!
Possessiveness Quotes in Tamil-எனக்குச் சொந்தமானவளை, இந்த தென்றல் கூட தீண்டவிட மாட்டேன். ஒரு குழந்தை முத்தமிட்டாள் கூட எனக்குள் பொறாமை எழும். அதுதான் காதல்.
Possessiveness Quotes in Tamil-எனக்கு மட்டுமே சொந்தம் என்று வாழ்வதே காதல் வாழ்க்கையின் இலக்கண நடை. உன்னை மட்டுமே எனக்குப்பிடிக்கும் என்று தொடங்கும் அந்த காதல் என்னை மட்டுமே காதலிக்கவேண்டும். நீ எனக்கு மட்டுமே சொந்தம். வேறு யாரும் கூட தொடக்கூடாது என்று சிறு பிள்ளையாய் அழுது ஆடம் பிடிக்கும். அதைத்தான் காதல்.
- உன்னோட ஈஸியா சண்ட போட தெரிஞ்ச எனக்கு உன்ன எப்படி சமாதானப் படுத்துவதுனு தெரியல...
- என் தாயின் அன்பிற்கு பிறகு நான் ஏங்கிய ஒன்று உன்னோட அன்பிற்கு மட்டுமே...
- நீளமான சண்டைகளுக்கு பின் தொடங்கும் அன்பு ஆழமானது சண்டையிடுங்கள் உடனே சமாதானமாகுங்கள்...
- காலம் நேரம் தெரியாமல் காதலிக்க வேண்டும் உன்னை மட்டும் என் வாழ்நாள் முழுவதும்...
- ஒவ்வொரு நாளும் நம்மல சந்தோஷம் வெச்சிக்கிற மாதிரி ஒரு காதல் கிடைச்சா நம்ம வாழ்க்கையே சொர்க்கம் தான்...
- உனக்கே உயிரானேன் என்னாலும் எனை நீ மறவாதே....உனக்குள் உறவானேன்..மறவாமல் சுமப்பாயடி..
- உனக்காக நான் இருக்கிறேன் எதற்காகவும் வருந்த வேண்டாம் என்ன நடந்தாலும் நானிருப்பேன் உன்னோடு என் வாழ்வின் இறுதி வரை உனக்கே உனக்காய்....
- என் துன்பங்கள் யாவும் காற்றோடு கறைந்தே போகிறது! நீ என்னுடன் பேசும் நேரங்களில்...
- என் பலம், என் பலவீனம் இவை இரண்டுமே உன் அன்பு ஒன்று தான்...என் வீரம், என் கோழைத்தனம் அதுவும் உன்னால்தானடி..
- பிரியாத வரம் வேண்டும் எனக்கு,இந்த மண்ணை விட்டு அல்ல உன் மனதை விட்டு...வாழ்வதும் வீழ்வதும் உன்னாலே.
- யாரோவாக அறிமுகம் ஆகி யாவரையும் பின் தள்ளி யாதுமாகி நிலைத்து விட்டாய் என்னில்.. அன்பால் ஆயுள் கைதி ஆக்கிவிட்டாய் உன்னில்....ஆயுள்முழுதும் உன் சிறைக்கைதியாய்.
- நான் சோகம் கொள்ளும் நேரங்களில் எல்லாம் நீயும் உன் அன்பு மட்டுமே என்னுடைய பெரிய தேடுதல்களாக உள்ளது... நீயின்றி நான் இல்லை....
- உயிர் போகும் நாள் வரை உன்னை தேடுவேன். உனை மீண்டும் பார்த்தப் பின் கண் மூடுவேன்...
- காதலியின் கோபத்தையும் கவலையையும் புரிந்து கொள்ளும் ஒவ்வொரு ஆணும் தன் காதலியை - கண் கலங்க விடுவதில்லை...
- சந்தோஷத்தில் கூட இருக்குறது மட்டும் காதல் இல்ல... எவ்ளோ கஷ்டம் வந்தாலும் கூடவே இருக்கனும். அது தான் உண்மையான காதல்..
- வெறுப்பேத்தும் நேரங்களில் அவளின் கோபத்திற்கு முதல் எதிரி என் சிரிப்பே..
- உன்னை இன்னும் அதிகமாக நினைக்க வேண்டும் என்பதற்காகவே வருகிறதோ நமக்குள் இத்தனை சண்டைகள்...
- அவசியம் இருந்தால் மட்டும் பேசும் உறவுகளுக்கு மத்தியில்.. அன்புக்காக பேசும் சிலர் கிடைத்தால் அது நாம் பெற்ற வரம்..
- வாடிய மல்லிகையும் வாசனையோடு தான் இருக்கும் என்னவள் கூந்தல் தொட்ட காரணத்தால்....
- உன்னிடம் ஏதேதோ சொல்ல வந்தேன் உன் விழியின் மொழி கண்டு ஒன்றுமில்லை என்றேன்.. "ஒன்றுமில்லை" என்ற ஒற்றைச் சொல்லில் ஓராயிரம் சொற்கள் ஒளிந்து இருப்பதை நீ அறிவாயோ..?
- கத்தியின்றி இரத்தமின்றி கண் அசைவிலே கருணை கொலை செய்தாயோ? கேட்டால் அதற்குப் பெயர்தான் காதல் என்று சொன்னானோ?
- காலையில் கதிரவனாக மாலையில் தென்றலாக பகலில் நிழலாக இரவில் நிலவாக கோடையில் மழையாக குளிரில் தணலாக காற்றில் மொழியாக கவிதையில் வரியாக உன் அன்பின் அன்பாக காத்திருக்கிறேன் நீ வருவாய் என..
- எதார்த்தத்தை மிஞ்சிய ஏமாற்றமும் அழகு.. ஏமாற்றத்தை மிஞ்சிய அழகு..
- அழுக்கை அழகாக்கி பின்பு அழகை அழுக்காக்கி செல்லும் அமானுஷ்ய சக்தி கொண்டதுதான் காதல்..
- புவியீர்ப்பு விசையை மிஞ்சிய அவனது விழியீர்ப்பு விசையினால் அஞ்ஞானம் தோற்று விஞ்ஞானத்தை வென்றதோ அவன/ளது கண்கள்..
- அடிமையானேன்.. உனக்கு ஆயுள் முழுதும்..ஆயுதத்திற்கு பயந்து அல்ல அன்பிற்கு பணிந்து..! உன் காதல் கணக்கற்றது..
- பல பெண்களில் கூட்டுக்கலவை தான் அவள் ஒருத்தி... சிலசமயம் அம்மா, சிலசமயம் தோழி, சிலசமயம் அக்கா, சிலசமயம் மகள், சில சமயம் காதல் சாகசக்காரி, சிலசமயம் இராட்சசி, சிலசமயம் சண்டைக்காரி...மொத்தத்தில் எனக்கு எல்லாமுமாக..
- அவள் தலைநீராடிய வெள்ளிக்கிழமையில் சதா புலம்பிக்கொண்டே சமையலறையில் இருக்க அவள் பின் கழுத்திலிருக்கும் "வியர்வை வாசத்தை ரசிக்கத் தெரிந்தவனுக்கு" அவளை சமாதானப்படுத்த காரணம் தேவைப்படுவதில்லை....அது ஒரு ஊடல் வரலாறு..
- உன்னைப்போல நானும் "யாருக்கும் தெரியாத மாதிரி பார்க்கக் கற்றுக்கொண்டிருந்தால்" உன் தோழிகளிடத்தில் எனக்கு 'பொறுக்கி' என்ற பெயர் வந்திருக்காது.
- என்னை விட என் காதல் மிகவும் பேரழகானது.. ஏனென்றால், நான் "காதலிப்பது உன்னைத்தான்..." நீ இருப்பதோ என் இதயத்தில்தான்..
- காலையில் உன்னை சண்டையிட்டுச் செல்வதே, இரவில் மெத்தையில் உன்னை சாமதானம் செய்யத் தானடி..அது ஒரு இன்பக்காதல்..
- காலை, மாலை, இரவு என முப்பொழுதும் உன் நினைவுகள் தான்.. நினைவுகள் இனி போதும் நிஜமாய் உன்னை கேட்கிறேன் ஐ லவ் யூ..
- உண்மைக்காதல் நமக்குள் இருக்கும் வரை இந்த சண்டைகளுக்கு எப்போதும் ஒய்வு கிடையாது. சண்டைகளுக்கு ஓய்வளித்தால் உடல்களின் இன்பத்திற்கு வேலை இல்லாமல் போய்விடும்.
- என் இதழை விட வேறு எந்த சிறந்தச் சீனி மிட்டாய் உனக்கு கிடைத்து விடப் போகிறது? இந்தா, உன் இஷ்டம் போல மிச்சமில்லாமல் சுவைத்துக்கொள்...
- உன்னோடு தினமிருந்தால் அந்த உயிரில்லா கரடிபொம்மைக்கும் உன்மேல் காதல் வரும் என்பதாலேயே உனக்கு இன்னுமும் கரடிபொம்மை வாங்கித்தராமல் இருக்கிறேன். இனியும் கேட்காதே நான் சுயநலக் காதல்காரன் தான்..
- அரவணைத்து அன்பு காட்டும் உள்ளத்தை விட, அழும்போது ஆறுதலாய் அணைக்கும் உள்ளமே, உண்மையானது..
- சத்தியம் செய்து கொள்வோம், இனி சந்தேகப்பட சந்தர்ப்பங்கள் இருக்க கூடாதென்று. சண்டையிடக் காரணம் தேடக்கூடாதென்று. கோபித்துக்கொள்ளக் குறைகள் ஆராயக் கூடாதென்று.. காதல் செய்ய நேரங்களை செலவிட வேண்டும். அரவணைக்க எப்போதும் உடனிருக்க வேண்டும். கண்ணீர் துடைக்க கைகள் காத்திருக்க வேண்டும்..
- உன்னைப் பற்றி நான் எழுத நினைத்த கவிதை, முடிவில்லாமல் நீண்டது.. உன்னை ஒரு சில வரிகளில் அடக்க முடியாது என என் மனத்திற்கு தெரியாததால்..
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2