Pirivu Quotes in Tamil-காதலில் தோற்றவர் வாழ்ந்து காட்டுவதே காதலுக்கான மரியாதை..!
காதலின் பிரிவு மட்டுமே வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வலியாக இருக்கும். உண்பதை மறக்கும், உறக்கத்தை மறக்கும். என்ன செய்வதென்று அறியாமல் தட்டுத் தடுமாறும்.;
Pirivu Quotes in Tamil
பிரிவு என்பது வருந்தும் செயல். சில பிரிவுகள் நிரந்தரமானவை. சில பிரிவுகள் தாற்காலிகமானவை. இறப்பு என்பது நிரந்தர பிரிவாகும். ஆனால் காதலிலும் நிரந்தர பிரிவு உண்டு. ஆனாலும் அது இன்னொரு துணை கிடைக்கும் வரை மட்டுமே. ஆனாலும் பிரிவின் வலி காதலில் மட்டுமே ஆழப்படுத்தும். வருத்தம் கொள்ளச் செய்யும். வேதனையில் துடிக்கச் செய்யும். சில நேரங்களில் தவறான முடிவுக்கும் இட்டுச் செல்லும்.
ஆனால் தற்கொலை என்பது காதலுக்கு தீர்வல்ல. காதலர்கள் பிரிந்தாலும் காதல் உண்மை. அந்த காதல் சாவதில்லை. வாழ்ந்துகாட்டுவதே காதல்.
Pirivu Quotes in Tamil
இங்கு பிரிவின் வலி குறித்த மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன. நீங்களும் படித்து வலியை காதலுக்குக் கிடைத்த வழியாக மாற்றுங்கள்.
யாரிடம் இருந்தும்
ஆறுதல் கிடைக்காமல்
நமக்கு நாமே ஆறுதல்
சொல்லவும் முடியாமல்
இருக்கின்ற நிலை
மிகவும் கொடுமையானது.
அன்பு புரியவில்லை என்றால்
விளக்குவதை விட
விலகுவதே மேல்.
நீ தூரம் சென்று
கொண்டே இருக்கிறாய்,
உன் நினைவுகள் மட்டும்
நெருங்கிக் கொண்டிருக்கிறது.
அன்று நம்மோடு
உயிராய் இருந்தவர்கள்
இப்போது நம்மை
"கயிறாக" கூட மதிப்பதில்லை.
Pirivu Quotes in Tamil
காதல் ஒன்று உருவாகும் போது
அதன் பின்னால் பிரிவு ஒன்று
ஒளிந்திருக்கும்.
நீ விரும்பியதாலோ என்னவோ
இந்த மெளனமே என் வாழ்க்கை
என்றாகிவிட்டது.
உன்னை பிரிந்தபின்.
உன்னோடு வாழ
பல கனவுகள் கண்டேன்.
என் வாழ்க்கையே
வெறும் கனவாக
போகுமென்று தெரியாமல்.
சில காயங்களுக்கு
"பிரிவு" மருந்து
எல்லா காயங்களுக்கும்
சிறந்த மருந்து, அமைதி!
நீ பிரிந்து சென்றாலும்
பிரிய மறுக்கிறது
பிரியமானவளே நீ தந்து
சென்ற அழகிய நினைவுகள்.
Pirivu Quotes in Tamil
பிரிந்து போன ஒவ்வொரு
காதலுக்கு பின்னும்
சொல்லப்படாத
ஒரு பாசம் இருக்கும்
அது பிரிந்த பின்னும்
இருக்கும்.
நேசித்தவர்கள் எல்லோரும்
கிடைத்து விட்டால்
பிரிவின் வலி
என்னவென்று தெரியாமல்
போயிருக்குமோ என்னவோ.
அன்பின் பூக்களுக்கு தான் விதையிட்டேன்.
பிரிவின் முட்கள் எப்படி முளைத்ததென்று
இப்போது வரை விளங்கவேயில்லை.
அன்பு புரியவில்லை என்றால்
விளக்குவதை விட
விலகுவதே மேல்.
நம்மீது அளவற்ற அன்பு
செலுத்தும் ஒருவரினாலேயே..
நம்மை அளவில்லாமல்
அழ வைக்க முடியும்.
நமக்கு பிடித்தவர்களிடம்
இருந்து குறுஞ்செய்திகளும்
வரவில்லை எனும் போதே
தெரிந்து கொள்ளலாம்..
அவர்களுக்கு நம்மை விட
அதிகம் பிடித்தவர்கள்
அதிகம் இருக்கிறார்கள்
என்று.
Pirivu Quotes in Tamil
நான் தேடி தேடி வந்து
பேசுவதனால் அதற்கு
நீ தரும் பரிசு
வேதனைகளும்
அவமானங்களும்
மட்டும் தான்.
என் கண்களில் இருந்து
வழியும் ஒவ்வொரு
கண்ணீர் துளிகளும்
நீ தந்த வலிகளின்
வெளிப்பாடு.
வேண்டாமென்று செல்லும்
உறவுகளை தொந்தரவு
செய்யாதீர்கள்.. பிரிவில்
உங்கள் நினைவுகள்
நிழலாடும் உணர்ந்தால்
தேடி வரட்டும் வெறுத்தால்
விலகி செல்லட்டும்.
பாரமாக ஒருவரின் அருகில்
இருப்பதை விட.. அவர்களை
விட்டு தூரமாக விலகி
இருந்து விடுங்கள்.
Pirivu Quotes in Tamil
நான் உன் கூட இருந்தாலும்
இல்லை என்றாலும
நீ சந்தோசமா இருந்தா
எனக்கு அதுவே போதும்.
காரணம் இல்லாமல் கண்ணீர்
வருகிறது என்றால்.. நீ
யாரையோ நேசிக்கிறாய்
என்று அர்த்தம்
உண்மையாக அல்ல உயிராக.
உங்களிடம் இருந்து விலகி
இருக்க விரும்புவர்களிடம்
வற்புறுத்தி அன்பை
பெற நினைக்காதீர்கள்..
அந்த அன்பின் மூலம்
உங்களுக்கு எந்த பயனும்
கிடைக்க போவதில்லை.
இந்த உலகில் உண்மையான
காதலுக்கு கிடைக்கும் பரிசு
கண்ணீர் துளிகள் மட்டுமே.
Pirivu Quotes in Tamil
சிலரை பிடிக்காது என்றாலும்
வெறுக்க முடியாது.
சிலரை பிடிக்கும் என்றாலும்
நெருங்கிட முடியாது
புரிதல் ஒன்றே
அன்பை உணர்த்தும்.
காதல் ஒன்று உருவாகும் போது
அதன் பின்னால் பிரிவு ஒன்று
ஒளிந்திருக்கும்.
இழந்து விட்டேன் என்பதை
விட.. தவறவிட்டேன்
என்பதே உண்மை.
அன்பும் ஒரு நாள்
தோற்று போகும் உண்மை
இல்லாதவரை நேசித்தால்.
Pirivu Quotes in Tamil
பிரிந்து போன ஒவ்வொரு
காதலுக்கு பின்னும்
சொல்லப்படாத
ஒரு பாசம் இருக்கும்
அது பிரிந்த பின்னும்
இருக்கும்.
உனக்குள் என் நினைவும்
எனக்குள் உன் நினைவும்
இருக்கும் வரை நமக்கு
பிரிவு என்பதே இல்லை.
பிறர் மீதான வீண்
எதிர்பார்ப்புக்களை
குறைத்துக் கொண்டால
போதும்.. எப்போதும்
நிம்மதியாக இருக்கலாம்.
இதயத்தில் அன்பு இருந்தால்
உன்னை மறந்து விடலாம்
உன் அன்பு தான் என் இதயம்
என்றால் எப்படி உன்னை
மறக்க முடியும்.
ஒவ்வொரு நொடியும்
உனக்காகவே பிறக்கிறது..
உன்னை நினைப்பதிலேயே
அந்நொடிகளும்
கடந்து போகிறது..
நீ மட்டும் எங்கே செல்கிறாய்
என்னை தவிக்க விட்டு.
Pirivu Quotes in Tamil
எத்தனை சண்டை வந்தாலும்
எவ்வளவு அழுதாலும்..
எவ்வளவு ஏமாற்றம் வந்தாலும்
கடைசி வரை பிரிந்து விடாமல்
இருப்பது தான்
உண்மையான காதல்.
என்றோ சந்தித்துப் போன
சில காட்சிகளை மனது
இன்றைக்கும் சுவாசிக்குமானால்..
அது நாம் நேசித்த
நிமிடங்களாக தான்
இருக்க முடியும்.