சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்..பாசம் என்றும் வளர் பிறைதான்..!
Paasam Quotes in Tamil-நீ அனாதை என்ற சொல்லை அனுபவித்தவர்களுக்குத்தான் சொந்தங்களின் உன்னதம் தெரியும். பாசம் இழந்தவர்களுக்குத்தான் அன்பின் உயர்வு தெரியும்.
Paasam Quotes in Tamil-பாசம் என்பது சொல்லி வருவதில்லை. அக்காவுக்கு தம்பியையும், தம்பிக்கு அக்காவையும் பிடித்துப்போவது, அக்கா என்பவள் தம்பிக்கு இன்னொரு தாய். ஒரு கிளையில் மலர்ந்த பூக்கள். அதேபோல அண்ணன், தங்கை பாசமும் அப்படித்தான். அண்ணனை இன்னொரு அப்பா என்றே தங்கை நினைப்பாள். அவள் ஆசைப்படுவதையெல்லாம் தனது சக்திக்கு மீறி செய்ய நினைப்பான், அண்ணன். அது பாசத்தால் எழும் அரவணைப்பு.
- பணம் இன்று வரும் நாளை வந்த வழி சென்று விடும்..ஆனால் பாசம் என்றும் நிலையானது.. பணத்துக்காக
- பாசத்தை விற்று விடாதீர்கள் மீண்டும் கிடைப்பது கடினம்..!
- பாசம் கட்டவிட்டாலும் பரவாயில்லை.. வேஷம் போடாதீர்கள்..!
- அதிக பாசம் ஒரு நாள் நம்மை அனாதை ஆக்கிவிடும்..!
pasam quotes in tamil
- ஆயிரம் பேர் எதிர்த்து நின்று நம்மீது பழி சொன்னாலும்..தவறு நம்மீதே இருந்தாலும் நம்மை விட்டுக்கொடுக்காமல் இறுதிவரை போராடும் உறவுக்கு பெயர் தான் மனைவி..!
- பழகிவிட்டு போக பலர் வருவார்கள் பாசம் காட்ட ஒருவர் மட்டுமே இருப்பார்.. இழிவுபடுத்தி இழந்து விடாதீர்கள்..!
- காரணத்தோடு சண்டை போடுவதும் காரணமின்றி கோபப்படுவதும்..வெறுப்பதன் வெளிப்பாடு அல்ல..
- பாசத்தின் மாறுபாடு தான்.. இதை தவறாக புரிந்து கொள்பவர்களே அதிகம்..!
- நடிக்க தெரியாத பாசத்தில் அதிகம் இருப்பது கோபம் சண்டை மட்டுமே..!
- நீ அன்பாக பேசி என்னை வென்றாலும் பேசாமலே இருந்து நீ என்னை கொன்றாலும்..உன்னை நிழல் போல் துரத்துவேன் என்றென்றும்..!
- அவசரப்பட்டு யார் மேலையும் அதிகமா பாசம் வைச்சிடாதீங்க..இங்கு யாரு எப்போ எப்பிடி மறுவாங்கனு தெரியாது..!
உண்மையான பாசம் இருந்தால்..வார்த்தைகள் தேவையில்லை நினைவுகள் கூட பேசும்..!- பொய்யா பழகுறவங்கள நம்புறாங்க.. உண்மையான பாசமும் அக்கறையும் கொண்டவங்கள மதிக்க கூட
மாட்டேங்குறாங்க..!
- பாசமே இல்லாதவங்க கிட்ட பாசம் காட்டினால்.. பழகிய பாவத்திற்கு வேஷம் வேணும்னா போடுவாங்களே
தவிர பாசம் கிடைக்காது..!
- பல மணி நேரம் பேசும் உதடுகளை விட சில நிமிடம் நினைக்கும் இதயத்திற்கு தான் பாசம் அதிகம்..!
- ஆசை என்பது சில நாட்களில் மறைந்து போகும்.. ஆனால், பாசம் மட்டுமே வாழ்நாள் முழுவதும்
நிலைத்து நிற்கும்..!
- வேஷம் நிறைந்த பாசம் மதிக்கப்படுகின்றது..உண்மை கலந்த நேசம் தூக்கி வீசப்படுகிறது..!
- உண்மையான பாசத்திற்கு தகுதியானவர்கள் நமக்கு கிடைத்து விட்டால் கண்களில் கண்ணீருக்கு வேலையிருக்காது..மனதினில் மகிழ்ச்சிக்கும் பஞ்சம் இருக்காது..!
- தேவையின் முடிவில் அனைத்து பாசமும் ஊமை ஆகிவிடுகின்றது.
ஒரு பெண் அழகென்று அனைவருக்கும் தெரியும்.. ஆனால் ஒரு ஆண் அழகென்று அவனை ஆழமாய் நேசிக்கும் பெண்ணிற்கு மட்டுமே தெரியும்..!- நம் பாசத்தை பற்றி நினைத்துக் கூட பார்க்க நேரமில்லாதவர்களை தான் நாம் துரத்தி துரத்தி நேசிக்கிறோம்..!
- உலகத்திலேயே மிக அதிபயங்கர போதை எது தெரியுமா..? நமக்கு பிடித்தவர்களின் பாசத்திற்காக ஏங்கி தவிப்பது தான்..!
- நானும் வெறுக்க தொடங்கி விட்டேன் சில உறவுகளை காரணம்.. நான் வைத்த உண்மையான பாசம்
பொய்யாகிப் போனதால்..!
- ஒரு சிலர் நம்ம மீது பாசமா இருக்காங்கனு நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு இருந்தாலும்
- அது வேஷமாக போயிடுமோனு அதை விட பயமா இருக்கு.
- பாசம் பலவீனமான ஆயுதம் ஆனால் பலமாக காயம் தந்துவிடும்..!
- அன்பு பாசம் வைத்தவர்களுக்கு மட்டும் எப்போதும் இரண்டு தண்டனை…பிரிவு..! நினைவு..!
- அன்பு என்பது ஆழ்கடல் போன்றது. கரையில் தேடினால் சிப்பித்தான் கிடைக்கும். மூழ்கி தேடினால் தான் முத்துக்கள் கிடைக்கும்.
- அன்பு என்பது ஒரு சிறந்த பரிசு. அதை பெற்றாலும் கொடுத்தாலும் சந்தோசமே..
- ஆனந்தமான வாழ்க்கை வாழ ஆடம்பரம் தேவை இல்லை. அன்பானவர்கள் இருந்தால் போதும்.
- கிடைக்கும் என்பதில் பிரச்னை இல்லை.. ஆனால் நிலைக்குமா என்பதில்தான் பிரச்னை அன்பு..!
- உறவென்று ஆயிரம் பேர் இருந்தாலும் ஒருவருக்காக மட்டும் மனது ஏங்குவது தான் உண்மையான அன்பு..
- புன்னகையே அன்பின் சின்னம் அதுவே நாம் பிறருக்கு கொடுக்கும் அழகிய பரிசு..
- அன்பு என்பது போர் செய்வது போன்றது துவங்குவது சுலபம் நிறுத்துவது கடினம்..
- அன்போ,காதலோ நட்போ எதுவா இருந்தாலும் ஒருத்தர் விட்டால் இன்னொருத்தருக்கு கண்டிப்பாக வலிக்கும்..
- ஒருவரிடம் பேசவே கூடாது என்று முடிவு செய்த பிறகும் அவரிடம் மீண்டும் பேச தூண்டும். உணர்வே உண்மையான அன்பு.
- சேர்த்து வைப்பது மிக கடினம். செலவு செய்வது மிக எளிது. பணம் மட்டுமல்ல அன்பும் பாசமும் கூட..
- பாசம் காலத்தால் பாதை மாறலாம். அது தந்த சுமைகளும் சுகங்களும் என்றும் மாறுவதில்லை மறைவதில்லை...!
- வயதால் எவ்வளவு தான் வளர்ந்தாலும் அக்காவுக்கு தன் தம்பி என்றுமே சிறு குழந்தை தான்..
- தாயிடம் கூட சில உண்மைகள் மறைப்பதற்கு இருக்கலாம். ஆனால் அக்காவிடம் மறைப்பதற்கு பொய்கள் கூட ஒன்றுமில்லை..
- தாயின் மறு உருவமாக நீ..உனது முதல் குழந்தையாக நான்..
- தன் தம்பியை பெற்ற குழந்தையாக பார்ப்பதும் அக்காவை இன்னொரு அம்மாவாக பார்ப்பதும்தான் உன்னதமான அக்கா தம்பி உறவு..
பிள்ளை வரம் பெறாமலே தாயாகும் வரம் அக்காகளுக்கு மட்டுமே உண்டு..- உன்னை வயிற்றில் சுமக்கும் பாக்கியம் எனக்கு இல்லை. ஆகையால் என் மடியில் சுமந்து தீர்த்து கொள்கிறேன்..
- அன்னையின் அன்பை அவளிடம் கண்டேன். அன்பிற்கு அடைமொழி என் அக்கா என்றேன்..
- பத்து மாதம் சுமக்கவில்லை. ஆனால் உன்னில் பார்க்கிறேன், தாயின் மறு உருவம்..நீ..
- ஒவ்வொருவரும் யாரோ ஒருவரின் அன்பிற்கு அடிமையாக இருக்கின்றனர். நானும் ஓர் அடிமைதான் என் அக்காவின் அன்பிற்கு..
- அம்மாவிடம் கூட சொல்லாத ரகசியத்தை அக்காவிடம் கூறுவது அவள் மீதுள்ள நம்பிக்கையால்..
- ஆறுதல் தேடும்போது தோழியாக சண்டையின் போது வில்லியாக தாலாட்டுவதில் தாயாக எப்போதும் என் அன்னையாக மாறிவிடுகிறாள் என் அக்கா..
- தம்பிகள் இருக்கும் அக்காகளுக்கு மட்டுமே தெரியும், அவன் குழந்தை அல்ல குட்டிச் சாத்தான் என்று..
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2