கூர்மையான வாளை விட வார்த்தைகள் கொல்லும்..! பாருங்களேன்..!

Pain Sad Quotes in Tamil-நாம் பயன்படுத்தும் சொற்கள் பிறரைக் காயப்படுத்தலாம். வார்த்தைகளை அளந்து பேசுங்கள், காயப்படுத்தாமல்..!

Update: 2022-09-08 07:28 GMT

Pain Sad Quotes in Tamil

Pain Sad Quotes in Tamil

வாழ்க்கையை வலிக்கச் செய்த அனுபவம் உங்களுக்கு இருந்தால் இதை அனுபவமாக ஏற்றுக்கொள்ளுங்கள். பிறருக்கு பாடமாக ஆக்குங்கள். அதுவே வாழ்க்கைக்கான வழி. வலிக்கச் செய்யும் மேற்கோள்கள் இங்கு தரப்பட்டுள்ளன.

  • அளவில்லாமல் சிரிக்க வைத்தவர்கள், ஒருநாள் அழவும் வைப்பார்கள்..!
  • இன்பத்தை சுமந்திடும் சிறு மனதை கேட்டேன், இறைவனிடத்தில்..! அவனோ, வலியை மட்டுமே தாங்கும் மனதை அளித்தான் என்னிடத்தில்..!
  • எப்படியெல்லாமோ வாழ வேண்டும் என ஆசைப்பட்டு, ஒரு கட்டத்தில் எப்படியாவது வாழ்ந்தால் போதும் என்ற மனநிலையில் தள்ளிவிடுகிறது, வாழ்க்கை..!
  • வல்லமை தாராய், இறைவா என்றேன்..அவன் வலியை மட்டும் தாங்கும் வல்லமை தந்தான்..!
  • பிறப்பு ஒரு வரியில், இறப்பு ஒரு வரியில், எளிதில் எழுதி விட்டான் சில வரிகளில்..! நடுவில் இருக்கும் வெற்றுப் பக்கங்களை நம்மிடம் கொடுத்தது ஏனோ? இது தான் வாழ்க்கையோ..?!
  • சுலபமாக கிடைத்துவிடும் எந்த பொருளுக்கும் இவ்வுலகில் மதிப்பில்லை, அது அன்பாக இருப்பினும் கூட..!
  • அன்பு என்பது ஒரு அருமருந்து. தேவையான அளவு இருந்தால், வாழ்வை நல்வழிப்படுத்தும். அதுவே அளவுக்கு மீறினால், விஷமாகி வாழ்க்கையையே அழிக்கும்..!
  • கேட்பதெல்லாம் கிடைத்ததால்தான்.. கிடைக்காதபோது அதன் வலி தெரிகிறது..கிடைப்பதற்கான வழி தெரியாமல்..!
  • யாருக்காகவும் கண்ணீர் விடு, யாராவது துடிப்பார்கள் என்றெண்ணி கண்ணீர் விடாதே..!
  • வாழ்வில் பல ஆயிரம் பேரைச் சந்தித்தாலும், ஒரு சிலர் மட்டுமே என்றும் நம் நினைவில் இருப்பார்கள்..! அதில் நாம் அதிகம் நேசித்தவர்களும், அதிகம் வெறுத்தவர்களும் அடங்குவார்கள்..!
  • நடிக்கத் தெரிந்தவன் எல்லாராலும் மதிக்கப்படுகிறான்..! நடிக்கத் தெரியாதவன், எல்லாராலும் மிதிக்கப்படுகிறான்..! இதுதான் உலகம்..!
  • வருத்தம் என்னும் வாழ்க்கையில், இன்பம் என்னும் வாடகை வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..!
  • புரியாத வார்த்தைகள் இருந்தும் பயன் இல்லை..! புரியாத வாழ்க்கை வாழ்ந்தும் பயன் இல்லை..!
  • வலிமையான இதயங்களுக்குள் மட்டுமே அதிக வலிகளும் உள்ளன..!
  • புரியாத போது தொடங்கும் வாழ்க்கை..எல்லாம் புரியும் போது முடிந்துவிடுகிறது..!
  • சில வலிகளுக்கு மருந்தில்லை என்பதறிந்தும், மறைத்து வைத்துக் கொள்கிறேன், ஓர் புன்னகைக்குள்..!
  • சில உறவுகளால் வாழ்க்கை துளிர்விடுகிறது..! சில உறவுகளால் வாழ்க்கை துவண்டு விடுகிறது..!
  • கண்ணீருக்கு மட்டும் கடவுள் நிறம் இருந்தால், இந்த உலகம் முழுவதும் கண்ணீரீன் நிறமாகத் தான் இருந்திருக்கும்..!
  • கானல் நீர் போல், காயங்களும் காணாமல் போய்விடும், காலங்கள் கடந்த பின்..! காயங்களை வருத்தி காத்திருந்தது போதும், கடந்து செல்லுங்கள்..!
  • வாழ்வில் வலிகளும் காயங்களுமே மனிதனை மாற்றுகின்றன..! சிலரை அமைதியாகவும், சிலரை அரக்கனாகவும்..!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News