நல்ல வாழ்க்கைக்கான மேற்கோள்கள்..! நல்லது செய்து வாழலாமே ..!

Ithuvum Kadanthu Pogum Quotes-நல்லது செய்தல் என்பது பிறருக்கு உதவுவது மட்டுமல்ல..தீங்கு செய்யாமல் இருப்பதுமே ..!

Update: 2022-09-08 08:29 GMT

Ithuvum Kadanthu Pogum Quotes

Ithuvum Kadanthu Pogum Quotes

வாழ்க்கை என்பது ஒருமுறை. அதை சொர்க்கமாக்குவதும் சேதமாக்குவதும் நம்ம கையில்தாங்க இருக்கு. நீங்க உங்க வாழ்க்கையை வசந்தமா மாத்திக்கங்க. உங்களுக்காக வாழ்க்கை பற்றிய சில மேற்கோள்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

  • வருத்தத்தை ஒரு சிலரே புரிந்து கொள்கிறார்கள்..! சிலர் கதை கேட்கவே விரும்புகிறார்கள்..!

பலர் அதையும் கேட்பதில்லை..!

  • வாழ்க்கை அடுத்த நொடியில் ஆயிரம் ஆச்சரியங்களை ஒளித்து வைத்திருக்கிறது, சிலவற்றை சந்தோஷங்களாக...! சிலவற்றை சங்கடங்களாக..!
  • பிரபல்யமும், செல்வமும் கடல் நீரைப் போன்றது...! அதனைக் குடிக்கக் குடிக்க..தாகம் அதிகரித்துக் கொண்டே இருக்கும்..!
  • தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் எவ்வளவுக்கு எவ்வளவு குறைத்துக் கொள்கிறோமோ..அவ்வளவுக்கு அவ்வளவு மன அமைதியும் நிம்மதியும் கூடும்..!
  • விருப்பம் இருந்தால் ஆயிரம் வழிகள்..விருப்பம் இல்லாவிட்டால் ஆயிரம் காரணங்கள்..இவை தான் மனிதனின் எண்ணங்கள்...!
  • பிறருக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் நம்பிக்கையை கொடுங்கள்..!ஆயுள் முழுவதும் அதுவே போதுமானதாக இருக்கும்..!
  • பழிவாங்குதல் வீரம் அல்ல, மன்னித்து அவரை ஏற்றுக்கொள்வதே வீரம்..!
  • பால் மட்டும் சுத்தமாக இருந்தால் போதாது..பாத்திரமும் சுத்தமாக இருக்க வேண்டும்..! இருந்தால் தான் பால் கெட்டுப்போகாது..! அதேபோல் தான், நாம் மட்டும் நல்லவராக இருந்தால் போதாது..! நம் சேர்க்கையும் சரியாக இருக்க வேண்டும்..!
  • வாழ்க்கை எப்படி வேண்டுமெனாலும் மாறட்டும்..! எண்ணங்கள் அடுத்தவரை காயப்படுத்தாமல் இருக்கட்டும்..! அதுவும் இதுவும் எதுவும் கடந்து போகும்..! ஆனால் எதுவும் மறந்து போகாது...!
  • ஞானிகள் ஆசான்களிடம் சரியாக கற்று தேர்ந்ந்தாலும், உன் வாழ்க்கையில் உன் அனுபவங்களே உன்னை

ஒரு சிறந்த மனிதனாக மாற்றும் வல்லமை பெற்றது..!

  • காணாமல் போனவர்களை தேடலாம்..அதில் சிறிதும் தவறு இல்லை..! கண்டும் காணாமல் போனவர்களை மட்டும் உன் வாழ்க்கையில் நீ தேடி விடாதே...!
  • அனைவருக்கும் இனிமையாக இருக்க அந்த இறைவனானாலும் கூட முடியாது..! அனைவரிடமும் நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்க முயற்சி செய்..!
  • எந்த செயல் செய்தபோதிலும் திறமை என்ற ஒன்றை மட்டும் வளர்த்து கொள்..! உன்னிடம் பணம், பொருள் ஒன்றும் இல்லாமல் இருக்கலாம்..ஆனால் இந்த திறமையின் மூலம் ஜெயித்து விடலாம், வாழ்க்கையை ஒரு கை பார்த்து விடலாம்..!
  • வாழ்க்கை என்னும் நதியின் இருபுறமும் இருப்பது கரை என்னும் நம்பிக்கை...!

அதில் பீறிட்டு ஓடுகிறது விதி என்னும் வேடிக்கை...!

  • கொடுப்பது சிறிது என்று தயங்காதே..! வாங்குபவருக்கு அது பெரிது..! எடுப்பது சிறிது என்று திருடாதே..!

இழப்பவருக்கு அது பெரிது..!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News