நட்பு என்பது ஒரு புத்தகம்..! அதை ஆழ்ந்து படிப்பது அவசியம்..! நட்புக் கவிதைகள்..!
Kavithai Natpu in Tamil-உன் நண்பனை யாரென்று கூறு. நீ யாரென்று நான் கூறுகிறேன் என்பது நட்பின் அடையாளத்தை வரையறுக்கும் கருவி என்றே கூறவேண்டும்.
Kavithai Natpu in Tamil
தோழமை அல்லது நட்பு என்பது இருவர் இடையே அல்லது பலரிடமோ ஏற்படும் ஒரு உறவு. வயது, மொழி, இனம், நாடு என எந்த எல்லைகளும் இன்றி, புரிந்து கொள்ளுதல், அனுசரித்தல் என்கிற இலக்கண அடிப்படை பெற்ற ஒரு உறவு. இங்கு இளையவர் என்றாலும் கூட நட்பில் ஒருவித முதிர்ச்சி (அதாவது ஆங்கிலத்தில் மெச்சூரிட்டி என்பார்கள்) காணப்படும். அதுவே விட்டுக்கொடுத்தல், அனுசரிப்பாக வெளிப்படுகிறது.
- 'நட்பு' என்பது மூன்றெழுத்து தான். ஆனால் அது ககுறுகிய நாட்களில் முடிவதல்ல. உயிர் முடியும் தறுவாய் வரை தொடரும் உறவு.
- 'கவிதை' என்பது காயம்பட்ட இதயத்திற்கு மருந்து. 'காதல்' என்பது காயப்பட போகிற இதயத்திற்கு விருந்து. நட்பு மட்டுமே மருந்தாகவும்..விருந்தாகவும் இனிக்கும் கரும்பு..!
- வானத்து நட்சத்திரங்களும் நண்பர்களும் ஒன்றென்பேன்..ஆமாம் எப்போதும் நட்சத்திரங்களும் நண்பர்களும் கூட்டமாகத்தான் இருப்பார்கள்..!
- தகுதியும் தராதரமும் பார்த்து வராத உறவு நட்பு மட்டும்தான். நட்பிற்கு தகுதியும் தராதரமும் பார்ப்பவர் எல்லாம் நட்புக்கு தகுதியற்றவர்கள் என்பது பொருளாகும்.
- நான் நேசிப்பது மலரையும் நட்பையும் மட்டும்தான். ஏனெனில் மலருக்கு வாசம் அதிகம். அதுபோல் தான் நட்புக்கு பாசம் அதிகம். அங்கு வேஷமும் இருக்காது விஷமும் இருக்காது.
- நமக்குள் இருக்கும் திறமைகளை, ரகசியங்களையும் யாரால் கொண்டு வர முடிகிறதோ இல்லையோ நம் நண்பர்களால் கண்டிப்பாக கொண்டு வர முடியும்.
- நண்பர்கள் இல்லாத வாழ்க்கை புத்தகங்கள் இல்லாத நூலகம் போன்றது.
- ரோஜா அளவிற்கு நான் ஒன்றும் அழகில்லை. ஆனால் என் மனசு அழகு. ஏனெனில் அதில் என் நட்பு இருக்கிறது.
- அடிப்படை தேவைகளில் உணவு,உடை,இருப்பிடம் என்பார்கள். அதேபோல இனிமேல் நான்காவதாக ஒன்றைச் சேர்க்கவேண்டும் என்பேன். ஆமாம், உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் உணவு, உடை, இருப்பிடத்திற்கு அடுத்து நான்காவது தூய்மையான ஒரு நட்பு.
- அதிக உரிமை எடுத்துக்கொள்வது, நக்கலோ, கேலியோ மகிழ்ச்சியாக இருப்பது, எதிர்பார்ப்பின்றி பழகுவது, குற்றம்,குறைகளை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் பெரிய மனிதர் போல முதிர்ச்சியோடு அணுகுவது, மனதில் பட்டது எதுவாக இருந்தாலும் நேருக்கு நேர் வெளிப்படுத்துவது, உதவி என்று வந்தால் முன்னுரிமை கொடுப்பது என அனைத்தும் இங்கே கிடைக்கப்பெறும் என்ற உன்னத உறவு தான் நட்பு.
- நாம் சந்தோஷமாக இருந்தால் அனைவருக்கும் தெரியும். ஆனால் நாம் சோகமாக இருந்தால் அது நம் நண்பனுக்கு மட்டும் தான் புரியும்.
- உரிமை கொள்ள ஆயிரம் உறவுகள் இருந்தாலும், உள்ளதைப் புரிந்து கொள்ள நண்பா உன் ஒரு உறவுபோதுமடா
- நட்பு ஆழ்கடல் போன்றது.. கரையில் தேடினால் சிப்பிகள் தான் கிடைக்கும். மூழ்கித் தேடினால் தான் உன்னைப் போன்ற முத்துக்கள் கிடைக்கும்.
- நாம் அழுதால்தான் கண்ணீர் துளிகள் வரும். ஆனால் நல்ல நண்பன் அருகில் இருந்தால் கண்ணீர் துளிகளும் காணாமல் போகும். உண்மை நட்பின் வலிமையால்..!
- நட்பு ஒரு புத்தகம் போன்றது. அதை சில நிமிடங்களில் அழித்து விடலாம். ஆனால் அதை எழுத பல ஆண்டுகள் வேண்டும்..!
- நண்பர்களை கவனமாக தேர்ந்தெடு. உனது வாழ்க்கையையே மாற்றும் உன்னதனமான உறவு அது.
- அன்பென்னும் அருமருந்தை அகமகிழ்ந்து அருந்தி தினம் இன்புற்று இருப்போம் வா. தாய், தந்தை, குரு, தெய்வம் இவற்றோடு நட்பென்னும் உயிர்ச்சொல்லை இந்த வரிசையில் சேர்ப்போம் வா..!
- நான் ஒரு ஓவியன். அதனால் நம் நட்பை ஓவியமாய் வரைய நினைத்தேன். ஆனால் என்னால் வரைய முடியவில்லை. பாசம் என்பதற்கான படைப்பை, நட்பு என்பதற்கான படத்தை என்னுள் கொண்டுவர முடியவில்லை..அது பிரபஞ்சம் தாண்டி எங்கோ உயர்ந்து நின்றது..!
- நண்பர்களை கண்ணாடியில் தெரியும் உருபோல் தேர்ந்தெடு. ஏனெனில் கண்ணாடி பொய் சொல்லாது. நிழல் உன்னை விட்டு எப்போதும் செல்லாது. அது இருளிலும் உன்னைத் தொடரும்..!
- ஈரேழுலகும் போற்றிடும் ஒரு இனிதான உறவு நட்பு. உலகிற்கே அன்பை பொழியும் ஓர் உன்னதமான உறவு நட்பு.
- அன்பான நண்பனைப் போல அழியாத சொந்தம் எதுவுமில்லை. வெறும் வார்த்தைகளால் கூறுவது நட்பல்ல பல பேருக்கு அது உயிர்மூச்சு.
- அன்பான நண்பன் கிடைத்துவிட்டால் அகிலத்தையே வென்றிடலாம். அன்பாக எமை வழிநடத்தும் அழகான பந்தம் நட்பு.
- எவ்வித துன்பம் வந்திட்ட போதும் எமை அரவணைக்கும் உண்மையான நட்பு. வறுமை வந்திட்ட போதும் எம் கை கோர்த்திடும் அன்போடு.
- பள்ளிக்கால நட்பைப் போல பசுமையானது எதுவுமில்லை. பள்ளியில் தோள் சேரும் தோழமை ஆயுள்வரை தொடர்ந்திட்டேல் அதுவே பேரின்பம்.
- உலகமே திரண்டு எதிர்த்தாலும் உன்னை விட்டு விலகாது என்றும். நீ குற்றவாளியே ஆனாலும் காப்பாற்றிடத் துடிக்கும் நட்பு.
- நல்ல நட்பே என்றும் உலகத்தின் சிறந்த செல்வமாகும். நல்லவனை நண்பனாக பெற்றுவிட்டால் நானிலம் போற்றும் உன்னை.
- யாரிடமும் நம்மை விட்டுத் தராது. துன்பம் வரும்போது நம்மை கைவிடாது. நாம் கலங்கும் போது தோள் தரும் ஈடு இணையில்லா உறவு நட்பு.
- நாம் தவறு செய்யும் போது ஊக்கப்படுத்துவது உண்மையான நட்பன்று. வாழ்வில் தவறு செய்யும்போது போது சுட்டிக் காட்டுவதே உண்மை நட்பு.
- அன்பான நண்பனை ஆபத்தில் அறியலாம். ஆபத்திலும் நம்மை கைவிடாது கூட நின்று காப்பவனே உண்மையான நண்பன்.
- முகமது நட்பது நட்பன்று. நெஞ்சத்து அகநக நட்பதே நட்பு என்றான் வள்ளுவன். உயர் நட்பினை பெருமைபடுத்தாதோர் யாருளர் இவ்வுலகில் என்கிறேன் நான்..!
- உண்மையான நட்பென்பது சிரித்து பேசுவது அன்று. உளமார நெஞ்சத்தில் தோன்றுவதே உண்மையான நட்பு.
- நம் நண்பனை வைத்து நாம் யார் என்று கூறிவிடலாம். நல்ல நண்பனே நம் நல்வாழ்வின் நற்சான்று. நம் அடையாளம்..!
- அன்னையின் அன்பும், தந்தையின் கண்டிப்புக்களும் ஒன்றாக அமைந்த ஒரு உறவே நட்பின் பொது அடையாளம். அனைத்தும் பொருந்திய உன்னத நட்பு..!
- நட்பு எனும் மூன்றெழுத்து இவ் உலகத்தின் உயிர்மூச்சு. ஓர் உடலில் ஈருயிர் வாழ்வது. உண்மையான நட்பில் மட்டுமே.
- தனிமை நம்மை நெருங்கிடாது. துன்பம் நம்மை தொடர்ந்திடாது. மனதில் எங்கும் நிறைந்திடும் மகத்தான உறவுவே நட்பு.
- நம் சந்தோசத்தின் மறு வடிவமாய் நாம் மகிழும் போது மகிழ்ந்து, அழும் போது அரவணைத்துக் கொள்ளும் ஒரு அக்கறையான சொந்தம் நட்பு..!
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2