Nambikkai Quotes-நம்பிக்கை இல்லையேல் சிறு கல்லும் மாமலைதான்..!
தாழ்வு மனப்பான்மையை எப்போதும் மனதில் எழவிடாமல் நேர் நிலைகருத்துக்களை மனதிற் கொள்ள வேண்டும்.;
Nambikkai Quotes
எந்த சூழ்நிலையிலும் தளராத உள்ளம் கொண்டவனுக்கு இந்த உலகில் முடியாதது என்று எதுவுமில்லை. பிறர் மீது நாம் வைக்கும் பற்று நம்பிக்கை ஆகும். நம்மீது நாமே வைக்கும் நம்பிக்கையே தன்னம்பிக்கையாகும்.
வாழ்வில் வெற்றிபெற வேண்டுமெனில் தன்னம்பிக்கை அவசியம். மனித வாழ்வில் இன்பம்⸴ துன்பம் இரண்டும் இரண்டறக் கலந்தது. இன்பமாக மாற்றிக்கொள்வதில் நமது நம்பிக்கையில்தான் உள்ளது.
தோல்விகள் பல அடையக்கூடும்⸴ அவமானங்களைச் சந்திக்க நேரிடலாம்⸴ கஷ்ட துன்பங்களுக்கு முகம் கொடுக்க வேண்டி வரலாம்⸴ இவற்றையெல்லாம் எதிர்நீச்சல் போட்டு வெற்றி கொள்ள தன்னம்பிக்கை அவசியமாகும்.
Nambikkai Quotes
வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டுமெனில் தன்னம்பிக்கை முக்கியமாகும். தன்னம்பிக்கை இல்லாமல் சாதனைகள் செய்ய முடியாது.
நம்பிக்கையின் மேற்கோள்கள்
இதுவும் கடந்து போகும்
என்ற நம்பிக்கையில்
வாழ்க்கை பயணம்
தொடர்கிறது..!
கோபப்படு ஆனால்..
அதற்கு முன் அதை விட
மும்மடங்கு பொறுமையாக இரு..
பூமி கூட பொறுத்திருந்து தான்
பூகம்பத்தை வெளிப்படுத்துகின்றது..!
எப்போதுமே தளர்ந்து விடாதீர்கள்..
வாழ்க்கையில் எப்போதுமே
இன்னொரு வாய்ப்பு இருக்கும்..!
Nambikkai Quotes
நம்முடைய உள்ளமும் சிந்தனையும்
தெளிவாக இருக்குமானால் நம்மை
யாராலும் வீழ்த்த முடியாது..!
உன் மனசாட்சிக்கு நீ
உண்மையாக இருந்தால் போதும்
மற்றவர்களிடம் அதை நிருபிக்க
வேண்டியதில்லை..!
வாழ்க்கையை வெறுப்பதற்கு
ஆயிரம் காரணம் இருந்தாலும்
வாழ்க்கையை வாழ ஒரே காரணம்
தான் நாளை எல்லாம் சரி
ஆகிவிடும் என்ற நம்பிக்கையை..!
வெற்றி பெற வேண்டும் என்ற
பதற்றம் இல்லாமல் இருப்பது
தான்.. வெற்றி பெறுவதற்கான
சிறந்த வழி..
Nambikkai Quotes
இரண்டரை மணி நேரம் பார்க்கும்
சினிமாவிற்கே போரடிக்காமல்
இருக்க வில்லன்கள் தேவைப்படும்
போது நீண்ட நெடிய நம்
வாழ்க்கைக்கு சில வில்லன்களும்
பல துரோகிகளும் இருப்பதில்
தவறில்லை..!
ஆசைகள் எல்லாம் ஒரு நாள்
நிறைவேறும் என்ற நம்பிக்கையில்
ஆசைகளுடன் மட்டுமே செல்கிறது
என் வாழ்க்கை..!
Nambikkai Quotes
தொடங்கும் இடத்தில் இருந்து
பார்க்கும் போது பாதை முடிவது
போல தெரியும் நம்பிக்கை
கொண்டு நடை போட்டால்..,
பயணம் தொடரும்..,
இலக்கு தெரியும்..!
முடியும் என்று தெரிந்தால்
முயற்சி எடு.. முடியாது என்று
தெரிந்தால் பயிற்சி எடு..
வெற்றி நமதே..!
அதிக நேரம் இருக்காது அதிஷ்டம்..
நீண்ட தூரம் வராது சிபாரிசு..
எல்லா பொழுதும் கிட்டாது உதவி..
எப்போதும் ஜெயிக்கும்
நம்பிக்கை..!
முடிக்க முடியும் என்ற
நம்பிக்கையும் முடிக்க வேண்டும்
என்ற கட்டாயமும் முடியாத
காரியத்தையும்
முடித்து வைக்கும்..!
Nambikkai Quotes
உன் மீது உனக்கு நம்பிக்கை
இருந்தால் தோல்வி கூட
உன்னை நெருங்க பயப்படும்.
வாழ்க்கையில் நம்பிக்கை
இருக்க வேண்டும்.. ஆனால்
பிறரை நம்பி ஒரு பொழுதும்
இருக்க கூடாது..!
மொத்த உலகமும் முடியாது
என்று சொல்லும் போது
‘ஒரு வேளை முடியலாம்’
என்று கேட்கும்
குரலே நம்பிக்கை..!
நம்பிக்கை என்ற சிறு நூல்
இழையில் தான்.. அனைவரின்
அன்பும் இயங்கிக்
கொண்டிருக்கின்றது..!
அனைவரையும் நம்பு ஆனால்
எல்லா நேரங்களிலும்
நம்பாதே..!
Nambikkai Quotes
எதையும் எதிர் கொள்வேன்
என்ற மனநிலை மட்டுமே
நம்பிக்கையை கொடுக்கும்..!
முயற்சி செய்ய தயங்காதே..
முயலும் போது முட்களும்
உன்னை முத்தமிடும்..!
நம்பிக்கையுடன்
முயற்சி செய்..!
உள்ளத்தில் தளராத நம்பிக்கை
கொண்டவனுக்கு முடியாதது
என்று இந்த உலகில்
எதுவும் இல்லை..!