முள்ளங்கி கீரையில் இவ்ளோ நன்மைகளா..? தெரிஞ்சா இனிமேல் விடமாட்டீங்க..!
முள்ளங்கிக் கீரையை சாப்பிடலாமா அல்லது கூடாதா என்பது கூட தெரியாமல் அதைப்பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இன்னும் பலர் இருக்கிறார்கள்.;
முள்ளங்கிக் கீரையை பொதுவாக யாரும் பயன்படுத்துவதில்லை. ஆடு, மாடுகளுக்கு கொடுப்பார்களே தவிர யாரும் உணவுக்குப் பயன்படுத்துவதில்லை. ஆனால், முள்ளங்கி கீரையில் அவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளன.
முள்ளங்கி கீரையின் நன்மைகள்
முள்ளங்கி குத்துச்செடி வகையைச் சேர்ந்த ஒரு கிழங்கு வகைத் தாவரமாகும். சிலர் முள்ளங்கிக் கிழங்கு என்பது முள்ளங்கிச் செடியின் வேர்தான், அது ஒரு கிழங்கல்ல. முள்ளங்கிக் கிழங்கு எப்படி பல மருத்துவ குணம் கொண்டதோ, அதேபோல் முள்ளங்கியின் கீரை, தண்டுகள் மற்றும் விதை போன்ற அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இந்த பதிவில் நாம் முள்ளங்கிக் கீரையின் பயன்களைப் பார்ப்போம்.
mullanki keerai health benefits
முள்ளங்கிக் கிழங்கு தரைக்கு கீழே இருக்கும். அதன் மேல் பக்கம் தழைத்து வளர்ந்திருப்பது முள்ளங்கியின் இலைப்பகுதி. இதைத்தான் நாம் முள்ளங்கிக் கீரை என்கிறோம். பெரும்பாலானோர் முள்ளங்கியை மட்டும் பயன்படுத்திவிட்டு, அதன் கீரையை அலட்சியமாக தூக்கி எறிந்துவிடுவார்கள். ஆனால், முள்ளங்கிக் கிழங்கைவிட அதன் கீரையில்தான் ஏராளமான மருத்துவ நன்மைகள் உள்ளன.
முள்ளங்கியில் இருப்பதைவிட ஆறு மடங்கு 'வைட்டமின் C' முள்ளங்கிக் கீரையில் இருக்கிறது. 100 கிராம் முள்ளங்கிக் கீரையில் சுமார் 28 கலோரிகள் கிடைக்கிறது. இதில் 90 சதவீதம் மாவுச் சத்தும், 0.7 சதவீதம் நார்ச்சத்தும் உள்ளன. புரோட்டீன், சுண்ணாம்புச் சத்து மற்றும் இரும்புச் சத்துக்களும் முள்ளங்கி கீரையில் உள்ளது. கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், வைட்டமின் A,B,C போன்றவைகளும் அதிகம் உள்ளன.
mullanki keerai health benefits
முள்ளங்கிக் கீரையின் மருத்துவ பயன்கள்
இரைப்பை சிறுநீரக கோளாறுகள்
முள்ளங்கிக் கீரை சாப்பிடுவதால் இரைப்பைக் கோளாறு, சிறுநீரக நோய்கள், மூலக்கடுப்பு, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் குணமாகும். .
சர்க்கரை குறைபாட்டுக்கு
முள்ளங்கிக் கீரை சர்க்கரை குறைபாடு உடையவர்களுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. ஆகவே, நீரிழிவு நோய் இருப்பவர்கள் தொடர்ந்து முள்ளங்கிக் கீரை சாப்பிடலாம்.
மலச்சிக்கலுக்கு
முள்ளங்கிக் கீரையில் நார்ச்சத்து மிகுந்து இருப்பதால் மலச்சிக்கலைக் குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது. மலச்சிக்கல் உள்ளவர்கள் முள்ளங்கிக் கீரையை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும். மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள், முள்ளங்கிக் கீரையின் சாற்றை 1 ஸ்பூன் அளவு எடுத்து 3 வேளைகளும் சாப்பிட்டு வந்தால் நல்ல முன்னேற்றம் தெரியும்.
கல்லீரல் கோளாறு
கல்லீரலில் ஏற்படும் பல கோளாறுகளை முள்ளங்கிக் கீரை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. எனவே கல்லீரலில் கோளாறு இருப்பவர்கள் முள்ளங்கிக் கீரையை அடிக்கடி சாப்பிடலாம்.
இதய பாதிப்பு
முள்ளங்கிக் கீரை இருதயத்திற்கு நல்ல பலம் சேர்க்கும் சிறந்த உணவுப்பொருளாகும். இதயம் பாதிக்கப்பட்டவர்கள், இதயப் படபடப்பு உள்ளவர்கள், இதய பலவீனம் உடையவர்கள் வாரம் ஒரு முறையாவது முள்ளங்கிக் கீரையை உணவில் சேர்த்து வந்தால் சிறந்த பலன் கிடைக்கும்.
mullanki keerai health benefits
சிறுநீரக கற்கள்
முள்ளங்கிக் கீரையில் சாறு எடுத்து 5 அல்லது 6 டீஸ்பூன் அளவு எடுத்து, 3 வாரங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீரகக் கற்கள் கரைந்துவிடும். அந்த அளவுக்கு முள்ளங்கிச் சாறுக்கு ஆற்றல் உள்ளது. அதேபோல சிறுநீர்ப்பை வீக்கம் இருந்தாலும் குணமாகும். சிறுநீர் கல்லடைப்பு, கரப்பான் என்ற தோல் வியாதிகளையும் குணமாக்கும் தன்மை முள்ளங்கிக் கீரைக்கு உள்ளது.
கண் பார்வை
சிலருக்கு கண் பார்வை மங்கலாகத் தெரியும். சத்து குறைபாட்டால் ஏற்படும் இந்த குறைபாட்டுக்கு முள்ளங்கிக் கீரையை அடிக்கடி உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை பலப்படும். வைட்டமின் பற்றாக்குறைகளும் நீங்கும்.
நீர்க்கட்டு
நீர்க்கட்டு என்று சொல்லக்கூடிய சிறுநீர் பிரியாமல் இருப்பது பலருக்கு அடி வயிற்றில் வலியை ஏற்படுத்தும். அவ்வாறு சிறுநீர் சரியாக பிரியாமல் இருப்பவர்கள் ஒரு ஸ்பூன் பார்லியை முள்ளங்கிக் கீரையுடன் சேர்த்து வேகவைத்துச் சாப்பிட்டால் நீர்க்கட்டு நீங்கி சிறுநீர் நன்றாகப் பிரியும்.