Mothers Day Wishes in Tamil-குழந்தைகளின் இறைவி, தாய்..!

“தாயிற் சிறந்த கோயில் இல்லை” என்று ஒளவையார் தாய்மையினை போற்றினார். தாய் என்பவள் இந்த பூவுலகில் இல்லையென்றால் மனிதன் என்னும் பிறப்பே இருந்திருக்காது.;

Update: 2023-12-20 05:17 GMT

mothers day wishes in tamil-அன்னையர் தின வாழ்த்துகள்(கோப்பு படம்)

Mothers Day Wishes in Tamil

இறைவனையும் தாயையும் எப்போதும் உவமைப்படுத்தும் சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். தாயினுடைய அன்பினால் தான் இந்த உலகமே இயங்கி கொண்டிருக்கின்றது.

தாய் என்ற ஒற்றை சொல்லின் பொருளாக அளவு கடந்த அன்பு மற்றும் எண்ணிலடங்காத தியாகம் என்று சொல்ல முடியும். ஒரு தாயானவள் ஒரு குழந்தையினை பெற்றெடுத்து அதனை பாராட்டி சீராட்டி பாதுகாத்து வளர்ப்பதற்காக தன்னையே அர்ப்பணிக்கின்றார்.

Mothers Day Wishes in Tamil

அன்னைக்கு வாழ்த்துச் சொல்வோம் 

அம்மா ! மறுமுறை உந்தன் கருவறை வேண்டும் முழுவதும் துறந்து முழுமையாக உன்னில் சங்கமம் ஆக மறுபடி என்னை மடியினில் சுமப்பாயா? அன்னையர் தின வாழ்த்துகள்

வலி தந்தவர்களை உயிராய் நினைப்பது தாய்மையும் காதலுமே. அன்னையர் தின வாழ்த்துக்கள்

அன்னையர் தின வாழ்த்துகள்

தன் குழந்தையின் வாழ்க்கை வளர தன்னையே வருத்தி கொள்ளும் தயாரும் உண்டு

என்னை சுவாசிக்க வைத்த அவளுக்காக நான் வாசித்த முதல் கவிதை அம்மா. அன்னையர் தின வாழ்த்துகள்

இவளருகில் தோள் சாயும் போது துன்பத்தின் சுவடுகளும் தொலைதூரம் இவள் மடியில் துயிலுறங்கும் போது இதயத்தில் இன்பத்தின் அருவியும் கரைபுரண்டோடும் ஒருமுறை உதிக்கும் நம்மை தினம்தினம் சுமக்கும் ஒரே ஜீவன் நம் அன்னை


Mothers Day Wishes in Tamil

அம்மாவுக்கொரு கடிதம் உனக்கு வலி கொடுத்து பிறந்த காரணத்தால் தானோ எனக்கு வலி ஏற்படும்போதெல்லாம் அழைக்கிறேன் உன்னையே “அம்மா ” என்று. அன்னையர் தின வாழ்த்துக்கள்

மின்னல் மின்னும்போது அம்மாவைக் கட்டி அணைக்கும் குழந்தைக்குத் தெரிந்திருக்கிறது, அம்மா அதைவிடப் பெரிய சக்தி என்று

இறந்தாலும், பிள்ளைகளை நினைக்கும் இதயம், அம்மாவின் இதயம் மட்டுமே... அன்னையர் தின வாழ்த்துகள்

உயிர் எழுத்தில் "அ" எடுத்து மெய் எழுத்தில் "ம்" எடுத்து உயிர்மெய் எழுத்தில் "மா" எடுத்து அழகு தமிழில் கோர்த்தெடுத்த முத்து "அம்மா". அன்னையர் தின வாழ்த்துகள்

Mothers Day Wishes in Tamil

அன்பும் அக்கறை அரவணைப்பும் பாசம், நேசம், தியாகம் என எல்லா உணர்வுகளையும் ஒரே இடத்தில் பெற முடிந்தால் அதுதான் உண்மையானவாழும் கடவுள் அம்மா

உலகில் தேடி தேடி அலைந்தாலும், மீண்டும் அமர முடியாத சிம்மாசனம்... தாயின் கருவறை அன்னையர் தின வாழ்த்துகள்

மூச்சடக்கி ஈன்றாள் என்னை அம்மா மூச்சுள்ளவரை காப்பேன் உன்னை

ஆயிரம் சொந்தங்கள் அனைத்திட இருந்தாலும்.... அன்னையே உன்னை போன்று அன்பு செய்ய யாரும் இல்லை இவ் உலகில்...... அன்னையர் தின வாழ்த்துகள்

அம்மா அன்று நம் தொப்புள் கொடியை அறுத்தது நம் உறவை பிரிக்க அல்ல அது நம் பாசத்தின் தொடக்கத்திற்கு வெட்டப்பட்ட ரிப்பன்


Mothers Day Wishes in Tamil

முடியாத பாசம் உனக்காக அழுகும் விழிகள் நீ மட்டும் சாய்ந்து கொள்ள ஒரு தோள் உன்னை பசிக்காமல் பார்த்து கொள்ளும் ஒரே ஒரு தேவதை "அம்மா ". அன்னையர் தின வாழ்த்துகள்

படைத்தவன் கடவுள் என்றள் என் தாயே எனக்கு முதல் கடவுள் அன்னையர் தின வாழ்த்துகள்

100 எலும்புகள் உடையும் அளவு மரண வலி *பிரசவ வலி* அதை தாங்கிய தாயால் தன் பிள்ளையின் ஒரு துளி கண்ணீரை தாங்க முடிவதில்லை

வார்த்தைகள் இல்லாமல் பேசினேன்.. கண்கள் இல்லாமல் ரசித்தேன்.. காற்றே இல்லாமல் சுவாசித்தேன்.. கவலைகள் இல்லாமல் வாழ்ந்தேன்.. என் தாயின் கருவறையில் இருக்கும் வரையில்..!! அன்னையர் தின வாழ்த்துகள்

உடலில் சுமந்து உயிரைப் பகிர்ந்து உருவம் தந்த தெய்வம் அம்மா !

Mothers Day Wishes in Tamil

எந்த திசையிலும் உன் முகமே என்னை அரவணைத்திட பாரத்திடுதே அன்னை உந்தன்மடி சாய்ந்து கிடந்திட நூறு ஜென்மம் வந்து ஏங்குகின்றேன் நித்தம் நித்தம் உந்தன் அன்பை பெற்றுவிட ஏழு ஜென்மம் எனக்கு வேண்டும் என்பேன்

குளிரோடு கோடை வரும் மாரி மழையும் வரும் மாறி மாறி வரும் காலநிலை யாவும் மாற்றமின்றி தொடரும் தாயன்பு. அன்னையர் தின வாழ்த்துகள்

ஆயிரம் உறவுகள் அவனியிலே கிடந்தாலும் அன்னையின் உறவுக்கு ஈடாகுமா

எப்படிப்பட்ட பணக்காரனும் பிச்சைக்காரனாக மாறிவிடுவான் தனது அம்மாவின் பாசத்திற்காக.”

Mothers Day Wishes in Tamil

“அம்மா என்றால்? தன் வயிற்றில் உன்னை சுமந்து கொண்டு இரவு பகல் பாராமல் ஓடி ஓடி உழைத்து உன் பசியை போக்கி தன் பசியையும் போக்கி கொண்டு மறுநாள் காலையில் எழுந்து ஓடுகிறாள் அடுத்த வேளை உணவுக்காக.”

“அம்மா இல்லாத சிலரிடம் சென்றே கேட்டுப்பாருங்கள் அம்மா என்றால் யார் என்று.”

“உன் மேல் அன்பு காட்ட யாரும் இல்லையே என்று நினைக்கும்போது நான் இருக்கிறேன் என்று வருபவள் தான் அம்மா.”

“அம்மாவிற்கு என்று தனியாக கவிதை வேண்டாம் அன்பாக பழகி பார் அம்மாவே ஒரு கவிதைதான்.”

“உன் அன்பின் கதகதப்பும் வலிக்காத தண்டனைகளையும் இனி யாராலும் தரமுடியாது அம்மா.”

“உன் மூச்சடக்கி இன்ற என்னை என் மூச்சு உள்ளவரை காப்பேன் உன்னை.”

Mothers Day Wishes in Tamil

“என்னை சுவாசிக்க வைத்த என்னம்மா விற்கான நான் வாசித்த முதல் கவிதை அம்மா.”

“ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும் உன் அன்பை மட்டும் தேட வைக்கிறாய் அம்மா.”

“அம்மாவை நினைவுபடுத்தும் படி சிலரால் சமைக்க முடியும் ஆனால் அம்மாவை மறக்க வைக்கும் படி யாராலும் சமைக்க முடியாது.”

“வாழ்க்கையில் கடைசி வரை தனக்கென்று சமைக்காத ஒரே ஜீவன் அம்மா.”

“உன் மீது உள்ள அக்கறையில் சமயப் அதனால்தான் அம்மாவின் சமயல் அமிர்தம் போல் இருக்கிறது.”


Mothers Day Wishes in Tamil

“அம்மாவின் வயிற்றில் இருந்த வரை தான் அம்மாவின் கஷ்டம் தெரிந்தது வெளியே வந்த பிறகுதான் அம்மாவின் பாசம் தெரிந்தது.”

“அம்மா அன்புக்கும் உனக்கும் அர்த்தம் ஒன்று உன் அன்பை வர்ணிக்க எழுத்தாணிகள் போதாது, வார்த்தைகளும் பற்றாது.”

“ஆருயிரே எனக்கு உயிர் தந்த உறவே தினமும் உறங்காமல் என்னை பாதுகாத்த சிறகே.”

“இமை போல் காத்த கருவே உதரத்தில் சுமந்து உதிரத்தை சுரந்து ஊட்டிய அமுதே”

“ஈடற்ற இதயமே எல்லா உழவிற்கும் ஈடு உண்டு.”

Mothers Day Wishes in Tamil

“அம்மா இல்லையென்றால் அனைத்து உறவுகள் சேர்ந்தாலும் ஈடு செய்ய முடியுமா.”

“இந்த உலகிற்கு எப்படி சூரியன் வெளிச்சம் தருகிறதோ அதே போல் நம் வாழ்விற்கு வெளிச்சம் நம் அம்மா.”

“உறங்காத விழிகளே நான் தூங்கும் அழகை நீ ரசிக்க இரவெல்லாம் தூங்காமல் விழித்திருந்தாயோ”

“ஊடலிலும் கூடலே! தவறான பாதையில் தடுமாறிப் போகாமல் உரிமை எனும் உளி பிடித்து என்னை சிலையாக உருவாக்கிய சிற்பி நீ.”

“எனக்காய் வாழும் தெய்வமே எத்தனை தெய்வங்கள் இருந்தாலும் எந்தன் முதல் தெய்வம் நீ அல்லவா.”

“ஏர் போல எனை உழுது பார் போற்றும் நற்பயிராய் பசுமையாய் வளர்த்தாயே.”

“ஐயம் தீர்க்கும் என் முதல் ஆசிரியை! எல்லாம் அறிந்த விலை என்றாலும் அறியாதவள் போல் என் மழலை மொழி ரசிப்பதிலே.”

Mothers Day Wishes in Tamil

“ஒன்றுமே செய்யமுடியாமல் படுத்தாலும் என் பசி பொறுக்க மாட்டாய்! எப்போதும் நீ என்னை வெறுக்க மாட்டாய்!”

“ஓராயிரம் காலம் நான் வாழ்ந்தாலும் உன் மடி சாயும் ஒரு நாள் என் சொர்க்கம்.”

“நிலவில் கூட களங்கம் உண்டு உன் அன்பில் இல்லை தாயே.”

“அம்மாவின் அன்பை எத்தனை முறை எனக்கு போட்டாலும் விடை தெரியாத கணிதம்.”

“இமை மூடி கிடந்தாலும் இன்பமாய் இருந்தேனே அவளோடு கருவறையில் பஞ்சு மெத்தை எனக்கு இருக்கு கொஞ்சி பேச ஆசையும் இருக்கு.”

“செஞ்சி வச்ச மெத்தை அம்மா மடி ஆயிடுமா வெள்ளை முடி இருந்தாலும் வியர்வையில் நனைந்தாலும் அழுக்காய் இருந்தாலும் அவள் தான் என்னோட அரண்மனை அரசி.”


Mothers Day Wishes in Tamil

“ஆயிரம் உலக அழகி வந்தாலும் அவள் தான் என்னோட முதல் அழகி என் அம்மா.”

“அன்பாய் பேசுவாய் என் அம்மா அடிமையாய் மாறுவாள் என் அம்மா என் அன்புக்கு மட்டுமே.”

“அர்த்தமற்ற ஆயிரம் என்னை சுற்றி இருந்தாலும் என்னுள் குடியிருக்கும் ஒரே உறவு அம்மா.”

“உலகமே நான்தான் என்று நினைப்பாள் என் அம்மா! என்னை சுற்றியே வருவாள் என் அம்மா!”

Tags:    

Similar News