பொன்னை நேசிப்பதால் எம் அன்னையை மறந்து போனோம்..! வாழும்போதே வாழ்த்துவோம்..!
Mother Quotes in Tamil-தொப்புள் கொடியின் பந்தத்தால் இணையும் பாசம், தாயும் சேயும். காற்றில் கரைந்துள்ள அலைவரிசைகள் போல அன்பு என்பது கண்ணுக்குத்தெரியாமல் பிணைப்பாகிக் கிடக்கிறது.
Mother Quotes in Tamil
அம்மா என்ற ஒற்றைச்சொல் இந்த உலகத்தின் ஓட்டத்தையே நிறுத்திவிடும் ஆற்றல் பெற்றது. அம்மாவை தாய், அன்னை, ஆத்தா என்றெல்லாம் கூறப்படுகிறது. தாயின்றி ஒரு உயிரினம் தோன்றிவிட முடியாது. இயற்கையின் படைப்பில் தாய் என்ற ஒரு உயிரினம் விந்தை. ஆமாம், குழந்தை பிறந்ததும் குழந்தைக்கான உணவாக பால் படைக்கப்பட்டிருப்பது ஒரு விந்தை. குழந்தை தனது தாயை வாசனையால் கண்டுபிடிப்பதும் ஒரு விந்தை. இப்படி படைப்பு என்பதே ஒரு விந்தைக்குரியதே. இருவரின் இன்பத்தில் கிடைக்கும் மூன்றாவது இன்பம் குழந்தை.
நம்மைச் சுமந்த தாய் பற்றிய மேற்கோள்கள் இதோ உங்களுக்காக தரப்பட்டுள்ளன. வாசியுங்கள், உங்கள் அன்னையை நேசியுங்கள்.
காலம் முழுவதும் உன்னை வயிற்றிலும் மடியிலும் தோளிலும் மார்பிலும் சுமப்பவள் தாய்மட்டுமே. அவளை என்றும் மனதில் சுமப்போம். வாழும்போதே அவளை மதிப்போம்..!
பொங்கல் என்றும், தீபாவளி என்றும் வாரம், மாதம் என ஆயிரம் விடுமுறைகள் வருகின்றன. ஆனால், அவள் அலுவலகத்திற்கு மட்டும் விடுமுறை விடப்படுவதில்லை, அவள் ஓய்வெடுப்பதும் இல்லை..! ஆமாம், அம்மாக்களின் சமையலறைக்கும், அம்மாக்களுக்கும்..!
வாட்டும் வெயிலின் கோடை என்றாலும்..கொட்டும் மழையின் குளிர்காலம் என்று எதுவானாலும் என்னை தன்னருகே வைத்து அணைத்துக்கொள்கிறாள், என் அம்மா..! அதுதான் தாய்மையின் அடையாளமோ..?!
என் ஐம்பதில் கூட, வயது வித்தியாசம் பார்க்காது அம்மாவின் கொஞ்சலில் மட்டும் இன்னும் நான் குழந்தையாகவே இருக்கிறேன்..! எத்தனை வயதானாலும் என் தாய்க்கு நான் மகன்தானே..!
அம்மாவின் கைக்குள் இருந்த வரை உலகம் அழகாகத்தான் தெரிந்தது. இன்னும் நான் குழவியாகவே இருந்திருக்கலாமோ என்று என் ஆசை நீள்கிறது, பெருமூச்சாக..!
வலி நிறைந்தது என்பதற்காக யாரும் விட்டுவிடுவதில்லை தாய்மை எனும் உணர்வினை..!
அன்புகலந்த அக்கறையோடு சமைப்பதால்தான் எப்போதும் அம்மாவின் சமையலில் சுவை அதிகம்..!
நான் முதல்முறை பார்த்த அழகிய பெண்ணின் முக தரிசனம் அம்மா..! என் அகம் செழிக்க தன்னை உருக்கிக்கொண்டவள் என் அம்மா..!
இன்று என்னை இவ்வுலகுக்கு அறிமுகம் செய்த என் அன்பு அம்மாவுக்கு ஆயிரம் ஆயிரம் முத்தங்கள். இன்றுதான் உன் வயிற்றில் பிறந்தாற்போல மகிழ்ச்சிகொள்கிறேன் தாயே..என்னை ஆசீர்வதியும்..!
நான் உன்னுடன் இருக்கும் பொழுது என் பிரச்னைகள் கூட எனக்கு பெரிதாய் தோன்றவில்லை..நீ இருக்கிறாய் என்ற நம்பிக்கை..! இப்போதும் நீ இருப்பதுபோலவே எனது நம்பிக்கைகளை வளர்த்துக்கொள்கிறேன் என் அம்மாவே..! நீ என்னை ஆசீர்வதிக்கிறாய்.. எல்லா பிரச்னைகளும் மாயமாக மறைந்துவிடுகிறது..!
எதுவும் அறியாத, புரியாத வயதில் எந்த சுமைகளும் கவலைகளுமின்றி அன்னையின் கரங்களில்
தவழும் காலம் சொர்க்கமே..காலங்கள் கடந்தும் அந்த சொர்க்கத்தின் நாட்கள் இன்னும் இனிமையாக என் உள்ளத்துக்குள்..!
கருவறைக்குள் எனை அடை காத்து, உதிரத்தை எனக்கு உயிராக தந்தாயே, உன் சுவாசத்தை பாலாக்கி நான் வளர சுமந்தாயே, பாசத்தில் தாலாட்டி பல இரவுகள் தூக்கத்தை தொலைத்து எனக்காகவே வாழும் என் அன்பு தெய்வமமே.. என் தாயே..!
கடல் நீரை கடன் வாங்கி கண்கொண்டு அழுதாலும் நான் சொல்லும் நன்றிக்கு போதாதம்மா..! உடல்கொண்டு நான் வாழ தினம்தோறும் எனைத் தேற்றி வளர்த்தாயே என் தாயே..!
ஒவ்வொரு நாளும் கவலைப் படுவாள்..ஆனால் ஒரு நாளும் தன்னைப் பற்றி கவலைப்பட மாட்டாள்..! தனெக்கென வாழாத கருணை உள்ளம்..தாயன்றி யார் பெறுவார்..!
ஆழ்ந்த உறக்கத்தின் அஸ்திவாரம் அம்மாவின் தாலாட்டு..! அம்மா தலைகோதி அவளின் மடியில் படுத்து எடுக்கும் மதிய நேரத்து ஓய்வு சொர்க்கத்தின் வாசல்..!
ஆயிரம் உணவுகள் வித விதமாகச் சாப்பிட்டாலும் என் அன்னை சமைத்த உணவுக்கு ஈடாகுமா..? 5 நட்சத்திரம் 3 நட்சத்திரம் கொண்ட உணவகங்கள் எல்லாம் என் அன்னைக்கு பின்னாடி..!
உலகின் நிகழ்வுகளையும் அழகினையும் எடுத்துக் கூறும் முதல் குருவாக இருப்பவர் அம்மா மட்டுமே..! அப்பாவை எனக்குள் வரைந்துகாட்டிய பிரம்மா..என் தாய்..!
ஆயிரம் உறவுகள் உன் மீது அன்பாக இருந்தாலும் அன்னையின் அன்புக்கும் அவள் அரவணைப்பிற்கும்
எதுவும் ஈடாகாது..! நிபந்தனையற்ற அன்புக்கு அவளே உதாரணம்..!
தாய் மடியைக் காட்டிலும் ஒரு சிறந்த தலையணை இந்த உலகில் வேறெதுவும் இல்லை..! அவளது கருவறைக்குள் இருந்து சுகம் கண்ட எனக்கு அடுத்தது அவளின் மடி மட்டுமே சுகமானது..!
அம்மாஎன்னும் ஒரு ஜீவன் எந்த நேரத்திலும் தன்னைப் பற்றி கவலைகொள்ளாமல் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளும் அந்த உணர்வின் வெளிப்பாடே தாய்மை..!
உன்னை அணைத்துப் பிடிக்கும் போதெல்லாம் உணர்கிறேன் உலகம் என் கையில் என்று..என் தாயே எனக்கு உலகம்..!
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2