Memories in Tamil-மூளை பெட்டியின் அள்ளமுடியா ரகசிய சுரங்கம், நினைவுகள்..!
நினைவுகள் என்பது ஒருவரது ஞாபக பெட்டிக்கும் இருக்கும் மறக்கமுடியாத சம்பவங்கள். சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அசைபோட்டு மகிழ்ந்திருக்கும்.;
memories in tamil-நினைவுகள் (கோப்பு படம்)
Memories in Tamil
நினைவுகள் என்பவை ஞாபகச் செல்களுக்குள் பதிந்து கிடக்கும் வாழ்க்கையின் தொகுப்பு. அது எந்த நேரத்தில் எந்த நினைவுகளை வெளியே கொண்டுவரும் என்பது யாருக்கும் தெரியாது. யாரும் அறியாத சந்தர்ப்பத்தில், யாரும் அறியாத ஒருவரைக் கூட நினைவுகள் கொண்டுவரும்.
எப்போதோ சிறுவயதில் ஒரு குருவியை அடித்திருப்போம் அல்லது ஒரு நாயை விரட்டி அடித்திருப்போம். அதை 50 ஆண்டுகளுக்குப் பின்னர் கூட நினைவுகளாக நெஞ்சில் மலரும். அதுவே ஒரு குருவிக்கு கூடு வைத்திருப்போம். ஒரு தக்காளி செடி நட்டிருப்போம். அந்த செடியின் வாசனை கூட இன்னும் நெஞ்சில் நினைவுகளாக பதிந்திருக்கும்.
Memories in Tamil
சிறுவயது நண்பர்கள், சிறு வயது குறும்புகள், சிறு வயது சொந்தங்கள், பள்ளிப்படிப்பில் நடந்த சுவையான சம்பவங்கள் , பள்ளி சுற்றுலா சென்ற இடங்கள், காலில் ஏற்பட்ட காயங்கள், இறந்த தாத்தா, பாட்டி, அதிகாலை நேரத்தில் விவசாய நிலத்துக்குச் சென்ற நாட்கள், ஆடு மாடு மேய்த்த நாட்கள், கோடை காலத்து நண்பகல் நேரத்தில் பிறரது தோட்டத்தில் புகுந்து நுங்கு வெட்டி தின்ற நாட்கள், கள்ளிச் செடிக்குள் தேன் கூடு கண்டால், அதை எடுக்கமுற்பட்டு தேனீயிடம் கடிபட்ட நாட்கள்..கல்லூரியில் ஏற்பட்ட முதல் காதல் ஆஹா..இன்னும் எத்தனை எத்தனை நினைவுகள், நெஞ்சில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
தினம் தினம் வெட்டி எரிந்தும் வளர்ந்து
கொண்டிருக்கும் நகங்களை போல்,
பல முறை தூக்கி எறிந்தும் என் இதயத்தில்
கொட்டிக் கிடக்கிறது உன் நினைவுகள்.
உன் அணைப்புக்குள் நீ என்னை
சிறை வைக்க வில்லை என்றாலும்.
நான் சிறை பட்டு தான் கிடக்கிறேன்.
முப்பொழுதும் உன் நினைப்புக்குள்.
கண் இருந்தும் குருடனாக வாழ ஆசை.
நினைவு இருந்தும் நினைவிழக்க ஆசை.
கண் திறந்தால் பிம்பமாக அலைகிறாய்.
கண் மூடினால் நினைவுகளாக அவிழ்கிறாய்.
நிஜமாகி விடு என் உயிரே நிஜமாகி விடு என் கனவே.
Memories in Tamil
நிறம் மாறாது வானம்.
வாசம் மாறாது பூ.
தினம் மாறாது உதயம்.
கணம் மாறாத உன்
நினைவுகளுடன் நான்.
எதை எதையோ செய்து
மனதை மாற்ற முயற்சித்தாலும்.
அது ஒரு போதும் மாறாமல்
நிலைத்து நிற்கிறது உன் நினைவில்.
என் உறக்கத்தின் ஒவ்வொரு
இரவும்
உன் நினைவுகளுக்கு
பலியாகிறது.
Memories in Tamil
பிம்பம் முழுவதும் நீயாகிறாய்.
ஆதலால் இமைகள் மூடிட மறுக்கின்றது.
காணும் கனவுகள் கலைந்தாலும்.
உன் நினைவுகள் கலைந்திட கூடாது என்பதற்காக.
தனிமையில் விட்டு விட்டு சென்று விட்டாய்.
உன் நினைவுகளை எனக்குள் தந்து விட்டு.
நீ என்னோடு நிஜத்தில் வாழ்ந்தது சில நாள் தான்.
நான் உன் நினைவோடு வாழ்கிறேன் பல நாள்.
என் இதயம் துடிக்கும் வரை
என்னில் நீங்காது உன் நினைவுகள்
உறக்கத்தை தர இரவு காத்திருந்தும்,
உறங்காது உன் நினைவுகளுடன்
நானும் விழித்திருக்கிறேன்.
தனிமையில் வாழும் நிலவைப் போல்.
Memories in Tamil
இணையாத நம் வாழ்வில்,
துனையானது உன் நினைவுகள்.
அழியாத என் காதலுடன்
தனிமையில் நான்.
சில உறவுகள் நம்மை விட்டு பிரிந்தாலும்.
கொடுத்து விட்டு செல்கின்றன.
நினைத்து நினைத்து அழ
வலி தரும் ஆழமான நினைவுகளை.
கொட்டி தீர்த்த மழைக்கு பின்,
இலையில் ஒட்டி இருக்கும் ஈரம் போல்.
சொட்டு சொட்டாய் வடிகிறது
கண்களில் கண்ணீராய் உன் நினைவுகள்.
நாடோடியாக அலைந்து திரிகிறேன்.
உன் நினைவுகளை சுமந்து கொண்டு.
தினமும் நிலவோடும் போராட முடியவில்லை.
உன் நினைவோடும் போராட முடியவில்லை.
நிலவை பார்க்கும் போதெல்லாம்,
உன் முகத்தை காண்கிறேன்.
உன் நினைவோடு போராடும் போதெல்லாம்,
என் கண்ணில் கண்ணீரை காண்கிறேன்.
Memories in Tamil
இதயத்தின் கவலைகளை மறக்க முடியாது.
நீ என்னை விட்டு சென்றாலும்,
மனதை விட்டு செல்லாது உன் நினைவு.
காலங்கள் கடந்த பின்பும்.
நம் காதல் காட்சிகளும் மாறவில்லை,
அதன் சாட்சிகளும் மாறவில்லை.
வலிகளோடு கடந்து செல்கிறேன்.
காதல் கொடுத்த நினைவுகளை
கவி என்ற பெயரில் கண்ணீரால்
இங்கு பதிய வைத்து விட்டு
இரவில் உறக்கம் வருகிறதோ இல்லையோ!
தவறாமல் வந்து விடுகிறது உன் நினைவுகள்!
விலகவும் முடியாமல்,
நெருங்கவும் முடியாமல்,
தினம் தினம் வதம் செய்கிறது,
உன் நினைவுகள் என்னை
Memories in Tamil
கடந்து போனாலும் கனமாக
இருக்கிறது மனது.. கலைந்து
போனாலும் கனவாக
இருக்கிறது நினைவு..!
நினைவுகள் நல்லதாக
இருந்தாலும் சரி கெட்டதாக
இருந்தாலும் சரி நம்ம கூட
தான் இருக்கும்..
மறக்க முடியாது.
நினைவுகள் நிஜம் இல்லை
என்று தெரிந்தாலும்.. மனம்
என்னவோ நினைவுகளை
தான் நேசிக்கிறது..!
தொலைத்த இடமும்
தெரிகின்றது.. தொலைந்த
பொருளும் தெரிகின்றது..
வலியும் உணரப்படுகிறது..
ஆனால் திருப்பி மீட்கத்தான்
முடியவில்லை. எல்லாமே
நினைவுகளாக.
Memories in Tamil
பிடிப்பதற்கு காரணம் இருந்தும்
பிடிக்காமல் போகிறது சிலரை..
வெறுப்பதற்கு காரணம்
இருந்தும் வெறுக்க
முடியவில்லை சிலரை..!
நிஜங்கள் தரும் சந்தோஷத்தை
விட நினைவுகள் தரும்
சந்தோஷம் அதிகம்..
அதனால் தான் நிஜங்கள்
நிலைப்பதில்லை நினைவுகள்
என்றும் அழிவதில்லை.
காலங்கள் கடந்தும் காலாவதி
ஆகிவிடாத மருந்து..
அன்பானவர்களின் அழகான
நினைவுகள் மட்டுமே..!
பத்து நிமிடமோ.. பல வருடமோ
சிலருடன் இருந்த நினைவுகள்
என்றும் மறந்து போகாது.
முகவரி இன்றி முடிந்து போன
உறவுகளிடம் தான் முடங்கி
விடுகிறது நம் நினைவுகள்.
Memories in Tamil
நிஜத்தில் மீண்டும்
அடையமுடியாத அழகிய
நினைவுகளாய் கனவில் அடிக்கடி
திரையிடப்படும் நிகரில்லா
காட்சிகளாய் குழந்தை
பருவ ஞாபங்கள்.
மறக்க இயலாமல் வலியுடன்
நினைவுகளை சுமப்பதில்
உள்ளது உண்மையான அன்பு.
நிஜம் ஒரு நொடி வலி நினைவு
ஒவ்வொரு நொடியும் வலி.
மறதி உன்னை மனிதன்
ஆக்கும் ஆனால் நினைவுகள்
உன்னை கலைஞன் ஆக்கும்.
முடிந்ததையும் சரி..
இழந்ததையும் சரி..
எப்போதும் உன் நினைவில்
கொண்டுவரதே.
உணர்வுகளை நினைவுகளாய்
சேமிக்கும் மனிதர்கள் நாம்..
உணர்வுகளும் குறைய
போவதில்லை.. நினைவுகளும்
முடிய போவதில்லை.
முகவரி இன்றி முடிந்து போன
உறவுகளிடம் தான் முடங்கி
விடுகிறது நம் நினைவுகள்.
என்றோ சந்தித்து போன
சில காட்சிகளை மனது
இன்றைக்கும் சுவாசிக்குமானால்
அது நாம் நேசித்த நிமிடங்ககளாக
தான் இருக்க முடியும்.
Memories in Tamil
மீண்டும் மீண்டும்
நினைக்கத் தோன்றும் கடந்த
காலத்தின் சில நினைவுகள்
தான் நம் வாழ்வின்
வசந்த காலம்.