Love Words In Tamil-காதல் என்பது என்ன? எப்படி வந்தது? தெரிஞ்சுக்கங்க..!
காதல் என்பது உயிரினங்களுக்கு இருக்கும் சிறப்பு உணர்வு. அந்த ஈர்ப்பே உயிரினப்பெருக்கத்துக்கு அடிப்படை ஆனது. இது இயற்கை செய்துள்ள விந்தை.;
Love Words In Tamil
காதல் என்பது காப்பது என்ற அடிப்படை சொல்லில் இருந்து உருவானது என்பதை நாம் உணரலாம். மனிதன் நாகரிகம் அடையாத காலத்தில் தான் விரும்பிய பெண்ணை பிறர் தொடாமல் அலலது அவர்களை நெருங்க விடாமல் காத்தல் என்ற தொழிற்பெயரில் இருந்து உருவாகி இருக்கலாம்.
காத்தல் என்பது பாதுகாப்பு செய்தல். தனக்கு பிரியமானவர்களை, தனக்கு பிறந்த குழந்தைகளை குடும்பமாக வாழும்போது காப்பாற்றி நிற்பது என்ற பொருளின் உதயமானது. அப்படியான அந்த காத்தல் என்பதே காதல் ஆனது.
Love Words In Tamil
அந்த காதல் அன்புக்கு இணையானது. அன்பு என்பது கூட அரவணைத்தல், அன்யோன்யம் போன்ற நெருநையா என்ற பொருளில் வந்த வார்த்தையாக கூட இருக்கலாம். உதாரணமாக கீழே யில் வார்த்தைகள் இபப்டியாக தோன்றி இருக்கலாம் என்பதற்கு சில விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.
மோகம் என்ற சொல்லின் அடி. மோத்தல் அல்லது மோந்து பார்த்தல்
என்பதில் அடங்கியுள்ளதென்பது ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் இங்கும் பிற இடங்களிலும் விளக்கப்பட்டது. இப் பொருட் காரணம் என்னவென்றால், இயற்கையில் விலங்குகள் மோந்துபார்த்தே இணைசேர்கின்றன என்பதுதான். மனிதன் நாகரிகம் அடைந்து, மோப்பத்தினால் தன் துணையை அடையும் இயற்கை நிலையிலிருந்து வெகுதூரம் வந்திருக்கலாம். இருப்பினும் அவன் மொழியில் உள்ள சொற்கள் அவனைக் காட்டிக்கொடுத்துவிடுகின்றன,
இது உண்மையா என்று நீங்கள் ஐயுறலாம். பழங்காலத்தில் மனிதன்
மரப்பட்டையை இடுப்பில் அணிந்து மானத்தைக் காத்துக்கொண்டான்,
அது சீரை எனப்பட்டது. பின் துணி நெய்யக் கற்றுக்கொண்டு ஆடைகள்
அணிந்த காலத்தில் சீரை என்ற சொல் சீலை, சேலை என்றெல்ல்லாம் மாறிவிட்டாலும் அவன் மொழி அவன் முன் நிலையைக் காட்டிவிடுகிறது. ரகர லகரப் பரிமாற்றமுடைய சொல் திரிபுகள்.
Love Words In Tamil
காமம் காதல் என்பன காத்தல் அல்லது காவல் வழங்குதலை முன் காலத்தில் குறித்தன. ஒருவன் தன்னையும் தன் குடும்ப உறுப்பினரையும் காக்கும் கடமையையே மேற்கொண்டான். இதற்கு மாறாக அவன் பிற குடும்பத்தில் பிறந்த ஒரு மனிதப் பிறவியைக் காக்க முனைவது பெரும்பாலும் அவன் காதல் வயப்படும்போதுதான். தான் விரும்பிய ஒரு பெண்ணை (அல்லது ஆணை )ப் பிறனுக்கு விட்டுக்கொடுக்காமல் காவல் செய்கின்றான்( ள் )..
மொழியில் காதல் காமம் என்பனவெல்லாம் காவல் குறிக்கும் கா என்பதிலேயே அமைகின்றன. இச்சொற்களில் காவல் பொருள் மறைந்து பிற்காலத்தில் உடல் உணர்ச்சி, மன உணர்ச்சி பற்றிய "பொருள் நிறங்கள்" ஏற்பட்டன. ஆனால் காப்பது காதலியை என்ற காவற்பொருளை முழுவதும் மறைத்துவிட முடிவதில்லை.
பிரேமை என்ற சொல்லோ நேரடியாகவே இதைத் தெரிவிக்கிறது.
பிற = இன்னொரு குடும்பத்தின் பிற பெண்ணை அல்லது ஆணை , ஏமை = காத்து மேற்கொள்வது என்பது தெளிவாம். ஏம், ஏமம் : காத்தல். பிற என்பது ற > ர என்றானது. பிரேமை ஆனது.
Love Words In Tamil
இப்படி காத்தல் என்பது காதல், காமம், மோத்தல், மோகம், அன்பு நேசம், பாசம் என காதலின் நீட்சியாக வார்த்தைகள் தோன்றியுள்ளன.
காதலில் வாழ்பவர்கள் இன்று செல்லம், டார்லிங், குட்டி, செல்லக்குட்டி, செல்லம்டா, குட்டி பிசாசு, அழகின் அரக்கி, லொள்ளு பய, சிங்கக்குட்டி, டெட்டிபேர், சிண்ட்ரெல்லா, வாலுபய, அரக்கி, சூப்பி, தயிர்சோறு, அண்டங்காக்கா, அண்டா வாய், கருவாயா, கறுப்பி, செவப்பி இன்னும் ட்ரெண்டிங்கா பெயர்கள் வைத்து காதல் மழை பொழிகிறார்கள்.
காதல் இல்லாத வாழ்க்கை சுவாரஸ்யம் இல்லாத வாழ்க்கையாக இருக்கும். இந்த உலக இயக்கமே காதலால் மட்டுமே இயங்கி வருகிறது. காதல் என்பதற்குள் காதலி மட்டுமல்ல, மனைவி, கணவன், குழந்தைகள் என ஒரு கூட்டு இயக்கமாக இந்த சமூகம் கட்டமைக்கப்படுகிறது.
அந்த சமூகத்தின் ஒட்டுமொத்த இயக்கமே உலக இயக்கம். உலக இயக்கத்தில் ஈர்ப்பு இருப்பதாலேயே கல்வி கற்றல், புதிய கண்டுபிடிப்புகள், தேடல் போன்ற எல்லாமே சாத்தியமாக உள்ளது.
Love Words In Tamil
காதல் என்பதை எப்படியெல்லாம் கொண்டாடுகிறார்கள் என்பது நமக்கு இப்போது நன்றாகவே தெரியும். காதலில் பல காதல்கள் வந்துவிட்டன. நல்ல காதல், கள்ளக்காதல், புனிதக்காதல், சொல்லாக்காதல், செல்லாக்காதல், அறியாக்காதல், அறிந்த காதல், தெளிந்த காதல், பக்குவக்காதல் என காலத்துக்கு ஏற்ப நமது பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப காதல் பல வடிவம் பெற்றுள்ளது.
காதலுக்கென்றே ஒரு நாளை ஒதுக்கி காதல் செய்கிறார்கள். காதலர் தினம் என்று அதற்கு ஒரு பெயரும் வைத்திருக்கிறார்கள். காதலுக்கு இதயத்தை அடையாளப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இதயம் காதலின் சின்னம் ஆனது.
காதலை மையக்கருவாக வைத்து திரைப்படங்கள் எடுத்தால் வெற்றி பெறுகிறது. காதல் வெற்றிபெற்றாலும் பேசும். தொலைவியில் முடிந்தாலும் பேசும். காதலுக்காக உயிரைத் துறந்தவர்கள் ஏராளம். அதிலும் குறிப்பாக பெண்களைவிட ஆண்களே அதிகமாக காதலுக்காக உயிரிழந்திருக்கிறார்கள்.
உலகம் உள்ளவரை, உயிரினங்கள் உள்ளவரை காதலும் இருக்கும். காதல் அழியாதது.