தொலைந்துபோன கடிதத்தை காதலில் தேடுவோம்..! காதல் கடிதம் எழுதுங்கள்..!
Best Love Letter in Tamil-காதல் இல்லாத வாழ்க்கை கரும்பாறைக்கு ஒப்பாகும். காதல் நிறைந்த வாழ்க்கை தேன் சுவைக்கு ஒப்பாகும். சரியான பருவத்தில் காதலித்து பாருங்கள். வாழ்வது சுவைக்கும்.
Best Love Letter in Tamil
இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் கடிதங்களும் விடைபெற்றுக்கொண்டன. அறிவியலின் அபரித வளர்ச்சி மயிலிறகால் வருடும் அழகிய சொற்களின் தொகுப்பாக காதலர்கள் கொட்டும் காதல் ரசங்களை களவாடிக்கொண்டது. கடிதம் காணாமாலேயே போய்விட்டது.
செல்போனில் நீண்டநேரம் பேசுவது, வாட்ஸ் ஆப்பில் காலை, இரவு வணக்கம் பரிமாறுவது, எங்கு சந்திக்கலாம் என்று கேட்டுக்கொள்வது மட்டுமே காதலின் இலக்கணமாகிப் போய்விட்டது. கடிதம் என்னும் கலை காதலுக்கு மட்டுமல்ல உறவுகளுக்கு, தூரத்தில் வாழும் சொந்தங்களுக்கு காணமுடியாத வருத்தங்களை பிழிந்து, சுகங்களை விசாரித்து எழுதுவதெல்லாம் பழைய கதையாகிப்போய் விட்டன.
கண்ணும் கண்ணும் பேசிக்கொள்ளும் காதல் காணமுடியாத நேரங்களில் வார்த்தைகளால் வர்ணித்து, உணர்வுக்குழம்புகளை, துணியை காணமுடியாத வலிகளை சொற்களின் சோகங்களால் சொல்லிவிடுவார்கள். அதில் எண்ணற்ற வர்ணிப்புகள், ஏக்கங்கள்,அழகு குறிப்புகள், அணி இலக்கணம், உவமைகள், தத்துவங்கள் என எண்ணிலடங்கா சமாச்சாரங்கள் இருக்கும்.
அது காதல் செய்பவர்களால் மட்டுமே வெளிப்படுத்தப்படும் உணர்வு கொதிப்புகள். ஒரு கவிக்குரிய சிந்தனை பிறக்கும். இழப்புகள், பிரிவுகள் உயிரைத் திரிக்கும். அவ்வாறு திரிக்கும்போது உயிரின் ஜீவனும் பிழியப்படும். அந்த ஜீவனில் பிறப்பதே கவிதைகளும், கடிதங்களும்.
காதலுடன் ஒரு கடிதம்.....
Best Love Letter in Tamil
அன்பே, என் அன்புக்கு ஈடாக இந்த பிரபஞ்சத்தைக் கூட ஒப்பிடமுடியாது. எம் காதலின் அடையாளத்துக்கு ஒற்றை இளநி சாட்சிக்கூறும். எம் கால்கள் நனைத்த அலைகள் சொல்லும்.உன் காலடித்தடத்தைக் கூட என் விழிக்கேமரா படம்பிடித்து வைத்துள்ளது. ஓராயிரம் பாதச் சுவடுகள் இருப்பினும், உன் பாதச் சுவடை சரியாக கண்டுபிடிப்பேன். நீ என் உயிருக்குள் பதிந்துபோன ஓவியம்.
தென்றல் உன்னைத் தீண்டும்போது கூட எனக்கு கோபம் வருகிறது. என்னவளை(னை)த் தீண்டாதே என்று முரண்டுபிடிக்கிறது. உன் முகம் பார்த்த நொடியதில் என் கால்களில் முட்கள் குத்தி குருதியில் நனைந்தபோதும் எனக்கு வலி தெரியவில்லை.
நீயே என் சுவாசமாக இருப்பதால் உன் சுவாசத்தின் வாசனை எனக்குள் உணர்கிறேன். அது உனக்கான சிறப்பு வாசனை. நான் மட்டுமே உணரும் பெ(ஆ)ண்வாசனை. பாடல்களின் அர்த்தங்கள் தெரியாது, வெறும் வார்த்தைகளாக பாடல்களைக் கேட்ட எனக்கு, உன்னை சந்தித்தப் பின்தான் பாடல்களின் வரிகளை ரசிக்கத் தொடங்கியுள்ளேன்.
காதல் ஒரு தத்துவப்புத்தகம்.ஆமாம், அது எனக்கு அன்பு, கருணை, இரக்கம், பணிவு, விட்டுக்கொடுத்தல், சமாதானம், அமைதி, சமத்துவம், மரியாதை செய்தல் என பல வாழ்வின் விழுமியங்களை கற்றுக்கொடுத்துள்ளது. எனில் காதல் ஒரு தத்துவஞானி. காதல் ஒரு ஆசான். காதல் ஒரு வழிகாட்டி.
எனக்கென ஒரு இயல்பு இருந்தது. ஆனால், காதலுக்குப்பின்னே என்னைத் தொலைத்தேன். உன்னில் இணைந்ததால் உன்னில் பாதியானேன். உன் இயல்பின் பெரும்பான்மை எனதானது. ஆமாம், என்னையே உன்னில் தொலைத்தேன். நீ பாதி ; நான் பாதி.
காலம் ஓடுகிறதோ இல்லையோ என் காதல் உன்னையே சுற்றிவருகிறது, கடிகாரத்தின் முள் போல. ஆமாம், உன் நினைவில்லாத நேரமில்லை எனக்குள். காலங்கள் என்னை இட்டுச் செல்லும் தூரம் வரை உன்னுடனான பயணமும் தொடர்கிறது.
இப்படிக்கு,
உன்னுயிரில் கலந்த ஜீவன்.
Best Love Letter in Tamil
காதல் இல்லாத வாழ்க்கை நரகத்தில் வாழ்வதற்கு ஒப்பாகும். காதல், உயிரினங்களுக்கே உரித்தான ஒன்று. ஆண்.பெண் என்ற பாலினப்பாகுபாடு இல்லாத ஒரு உலகு இருந்தால் எப்படி இருக்கும்? கற்பனை செய்து பார்க்கமுடியவில்லை. இந்த உலகின் இயக்கமே ஆண் ,பெண் உயிர் தழுவலில்தான் அடங்கியிருக்கிறது.
இந்த உலக இயக்கத்தின் கோட்பாடுகளே நம் கோவில்களின் கோபுரங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. உயிரினங்களின் நீட்சிக்கு, ஆண்,பெண் என்பது அடிப்படைத் தத்துவம். காதல் செய்யுங்கள்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2