Long hair kerala girls-கேரள பெண்களுக்கு மட்டும் கூந்தல் நீளமாக, அடர்த்தியாக வளர்வது ஏன்?

கேரளப் பெண்களுக்கு கூந்தல் ஏன் நீளமாக வளர்கிறது? அதற்கு காரணம் என்ன? தெரிஞ்சுக்கங்க.

Update: 2023-08-17 14:08 GMT

Long hair kerala girls-கேரளப் பெண்களின் அடர்த்தியான கூந்தல் (கோப்பு படம்)

Long hair kerala girls

ஒரு மனிதனின் உடலமைப்பை தீர்மானிப்பதில் ஒருவர் பிறந்த இடம், உணவுப்பழக்கம் போன்றவை இன்றியமையாத காரணிகளாக விளங்குகின்றன. கேரளத்து மக்கள் நிறத்தில் வெண்மையாக, கூந்தல் கருமையாக இருப்பதன் ரகசியங்களில் முக்கிய இடம் பிடிப்பது அவர்கள் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய், மீன் உணவு, கேரளத்தின் நீர், மாசுபடாத சுற்றுச் சூழல் போன்றவைதான்.

அந்த வகையில் கேரளா பெண்களுக்கு நீளமான கூந்தல் இருப்பதன் ரகசியம் தேங்காய் எண்ணெய் மற்றும் உணவில் தேங்காய் பயன்பாடு.


பெண்களின் அழகு பராமரிப்பு, கலாசாரம் மற்றும் பழக்கவழக்கங்கள் போன்றவை ஒவ்வொரு நாட்டிற்கும் பல வேறுபாடுகள் உள்ளன. அதிலும் மலையாள பெண்கள் என்றால் உடனே நினைவுக்கு வருவது அவர்களின் நீளமான கருமையான கூந்தல்தான். மேலும் கேரளப்பெண்களின் அழகான கண்கள், மென்மையான மற்றும் பொலிவான சருமம் போன்றவையும் தனித்தன்மை வாய்ந்தது. இதற்கு அவர்களின் உணவுப்பழக்கமே காரணமாக இருக்கிறது. கேரள பெண்கள் அவர்களது கூந்தலையும் உடலையும் பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர்.

Long hair kerala girls


மலையாள பெண்கள் அழகின் ரகசியங்கள்

மலையாள பெண்கள் எப்போதும் தங்களின் முகத்திற்கு, இரசாயனம் கலந்த க்ரீம்களைப் பயன்படுத்த மாட்டார்கள். மேலும் இவர்கள் இயற்கைப் பொருட்களையே அதிகமாக நாடுவதால், அவர்கள் முகத்தில் இயற்கை அழகு மிளிர்கிறது. முகத்தில் பருக்கள் அல்லது வேறு சரும பிரச்னைகள் இல்லாமல் பளிச்சென்று இருக்கிறது.

மஞ்சள் மகிமை

கேரளப் பெண்களின் சருமம் மென்மையாக இருப்பதற்கு, காரணம், அவர்கள் தினமும் குளிக்கும் போது, மருத்துவ குணங்கள் அதிகம் வாய்ந்த மஞ்சளை தங்களின் உடல் முழுவதும் பூசிக் குளிப்பார்கள். தினமும் கேரளப் பெண்கள் தங்கள் தலைக்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதுடன், தேங்காய் எண்ணெயை தலையில் வைத்து, ஷாம்பு போடாமல் வெறும் தலைக்கு குளிப்பார்கள். இதனால் அவர்களின் முடி பட்டுப்போன்று பொலிவாக இருக்கிறது.

Long hair kerala girls


கடலை மாவு

மலையாள பெண்கள் கடலை மாவு கொண்டு வாரம் ஒருமுறையாவது முகத்திற்கு போடுவார்கள். அதுவும் கடலை மாவை ரோஸ் வாட்டர் பயன்படுத்தி பேஸ்ட் செய்து பயன்படுத்துவார்கள். இதுவும் அவர்களின் சருமம் பிரச்சனையின்றி இருப்பதற்கு காரணமாக உள்ளது.

சீகைக்காய்

கேரளத்து பெண்களின் நீளமான கூந்தலின் முக்கியமான ரகசியம் அவர்கள் ஷாம்புவிற்கு பதிலாக செம்பருத்தி பூவை சீகைக்காயைப் போல அரைத்து தங்களின் கூந்தலுக்கு பயன்படுத்துவார்கள். கேரளப் பெண்களின் கொழுகொழு கன்னங்களுக்கு, தினமும் அவர்கள் இரவில் படுக்கும் போது, சந்தனக்கட்டையை தண்ணீர் ஊற்றி கல்லில் தேய்த்து சந்தனத்தை முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவுவார்கள்.

Long hair kerala girls

பொடுகு போக கறிவேப்பிலை

கேரளத்து பெண்கள் தங்களின் தலையில் பொடுகு வராமல் தடுப்பதற்கு, தினமும் இரவில் படுக்கும் போது ஒரு கையளவு கறிவேப்பிலையை நீரில் ஊற வைத்து, பின் அந்த நீரைக் கொண்டு மறுநாள் காலையில் தங்களின் தலையை கழுவி வருவார்கள்.


மேலும் சில பெண்கள் கருஞ்சீரகம் மாற்று வெந்தயம் கலந்த எண்ணெய்யை பயன்படுத்துகின்றனர்.

கருஞ்சீரகத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. மேலும் புரோட்டீன், வைட்டமின் ஏ, பி, சி, இ, ஒமேகா-3 போன்ற சத்துக்கள் அதிகம் இருப்பதால் முடி வளர்ச்சிக்கு நல்ல ஒரு ஊட்டச்சத்தை அளிப்பதுடன் வேர்கால்களை பலப்படுத்தி முடி வளர்வதை தூண்டச்செய்யும்.

வெந்தயத்தில் இருக்கும் புரோட்டீன், பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ், நிகோடினிக் அமிலம் ஆகியவை முடி உதிர்வைத் தடுத்து முடி வேகமாகவும் அடர்த்தியாகவும் வளரச் செய்யும்.

கருஞ்சீரகம் மற்றும் வெந்தயத்துடன் மூன்று பங்கு தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு பங்கு விளக்கெண்ணெய் கலந்து அடுப்பில் லேசாக சூடேற்ற வேண்டும்.

Long hair kerala girls


அதில் கருஞ்சீரகம் மற்றும் வெந்தயம் தலா 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு சேர்த்து கொதிக்க விடவேண்டும். அப்போது லேசாக நுரை போல பொங்கி வரும். அந்த நுரை பொங்கி தானாக மறையும் வரை தொடர்ந்து கிளறி விட்டுக் கொண்டே இருக்கவேண்டும். பின்னர் அடுப்பில் இருந்து இறக்கிவிடலாம்.

பின்னர் அந்த எண்ணெயை ஆற விட வேண்டும். அதை ஐந்து மணி நேரம் அப்படியே விட்டுவிடுங்கள்.

கருஞ்சீரகம், வெந்தயம் இரண்டும் எண்ணெயில் கலந்து ஊற விடுங்கள். எண்ணெய் ஆறியதும் சீரகம் மற்றும் வெந்தயம் நன்கு ஊறி இருக்கும். அதன் பிறகு எண்ணெயை வடிகட்டி ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த எண்ணெயை தினமும் கூந்தலுக்கு தடவி வரலாம். குறிப்பாக இந்த எண்ணெயை முடியின் வேர்க்கால்களில் படுமாறு தேய்த்து மசாஜ் செய்து தேய்த்து வந்தால் முடி அடர்த்தியாக, கருமையாக, நீளமாக, மிருதுவாக வளரும். 

Tags:    

Similar News