Life Success Motivational Quotes in Tamil-நம்பிக்கையும் முயற்சியும் வெற்றிக்கான கதவு..!

வாழ்க்கையில் வெற்றி வேண்டுமென்றால் நம்பிக்கையை விதையுங்கள். முயற்சியை முதலீடு செய்யுங்கள். அறுவடைக்குத் தயாராகுங்கள்.;

Update: 2023-11-21 05:23 GMT

Life Success Motivational Quotes in Tamil

வாழ்க்கையில் நம்பிக்கை என்பது இல்லையென்றால் எதையும் சாதிக்கமுடியாது. பணம் என்பது இரண்டாம் பட்சமே. ஆனால் நம்பிக்கை ஒன்றே மனிதரின் முதல் முதலீடு. நம்பிக்கைக்கு அடுத்து நாம் என்ன செய்யவேண்டும் என்பதை தீர்மானிப்பது.

அந்த தீர்மானத்திற்கு ஏற்ப இலக்குகளை நிர்ணயிப்பது. பின்னர் அந்த இலக்குகளை நோக்கி பயணிப்பது. இப்படி வெற்றிக்கான படிகள் ஒவ்வொன்றிலும் நிதானித்து, உறுதியுடன் கால்வைத்து பயணிக்கவேண்டும். அதுவே வெற்றிக்கான பாதையாகும். 


Life Success Motivational Quotes in Tamil

தோல்விகள் வருவது இயல்புதான். அதற்காக முயற்சிகளை கைவிடுவது உழைக்காமல் அறுவடை செய்ய நினைக்கும் மனப்பான்மையாகும். தோல்விகள் நமக்கு பாடமாகவேண்டும். தோல்விக்கான காரங்களை ஆராய்ந்து அதனடிப்படையில் அடுத்த முயற்சியில் இறங்கிவிடவேண்டும். விழுவது கூட எழுவதற்குத்தான்.

வெற்றிக்கான சில மேற்கோள்கள் இங்கு தரப்பட்டுள்ளன. உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற எங்கள் வாழ்த்துகள்.

காலம் எப்போதும் உனக்கானதாக இருக்காது

காலம் அமையும் போதே உன் கடமையை

செய்து முடித்து விடு. காலத்தால் நிச்சயம்

நீ ஒருநாள் தூக்கி வீசப்படுவாய்.

வானத்தை பாருங்கள் நாம் தனித்து இல்லை

இந்த பிரபஞ்சம் முழுவதும் நம்மிடம் நட்பாக உள்ளது.

கனவு காண்பவர்களுக்கு உழைப்பவர்களுக்கு

மட்டுமே சிறந்தவற்றை வழங்குகிறது.

எதையாவது ரொம்ப ஆசை படும்போது

ஆடை இப்பொது வைத்திருப்பவர்

சந்தோஷமாகத்தான் இருக்கிறாரா என்று

நிச்சயப்படுத்தி கொள்ளுங்கள்.


Life Success Motivational Quotes in Tamil

வெற்றி என்னும் வேட்கை

உன்னுள் இருக்கும் வரை

தோல்வி என்னும் தடைகள்

உன் கண் முன்னே காணப்படுவது இல்லை.

வெற்றி என்பது மிகவும் எளிதானதே

என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய்

செய்வதை விரும்பி செய்

செய்வதை நம்பிக்கையோடு செய்.

உன் உயர்ந்த கனவுகளை அடைய

எண்ணம் என்ற ஒன்றிற்கு உயிர் கொடுப்பாயானால்

ஒரு நாள் உன் கனவு நிஜமாகும்.

பணிந்து போவதால்

கோழை என்று எண்ணிவிடாதே

என் பலத்தை காண்பிக்க

நீ தகுதியானவன்

இல்லை என்று அர்த்தம்.

Life Success Motivational Quotes in Tamil

என்ன நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்

இன்பம் துன்பம் எது வந்தாலும்

மனம் அமைதியா மட்டும் இழந்து விடாதே.


கற்று கொள்ள முயற்சிப்பதும்

கற்று கொண்டதை தொடர்ந்து

செயலாக மாற்றுவதும் தான்

வெற்றியின் ரகசியம்.

ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும்

ஒரு எதிர்பார்ப்பு ஆனால்

ஒவ்வொரு நாளின் முடிவிலும்

ஒரு அனுபவம்.

ஒருவன் தன் வாழ்வில்

விழாமலே வாழ்ந்தான் என்பது

வெற்றி இல்லை.

வீழ்ந்த போதெல்லாம் எழுந்தான்

என்பதே வெற்றி.

Life Success Motivational Quotes in Tamil

தோல்வி என்பது கடினமானது தான்

ஆனால் எதையும் முயற்சிக்காமல் இருப்பது

தோல்வியை விட மோசமானது.

கலங்கிய நீரும்

குழம்பிய மனமும்

ஒரு நாள் தெளிந்தே தீரும்

கவலை வேண்டாம்.

இதுவும் கடந்து போகும்.

அடுத்தவன் பாதையை

பின் பற்றாதே ஏனெனில்

அது அவனுடைய பாதை

உன் பாதையை கண்டுபிடி.


எதையும் தாங்கும் மனவலிமை

ஒன்று இருந்தால் தோல்விகளை

துவைத்து காயப்பட்டு விடலாம்.

இந்த உலகமே

உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்றால்

நீ யாரையும் திரும்பி பார்க்காதே.

Life Success Motivational Quotes in Tamil

ஆயிரம் பேரை கூட

எதிர்த்து நில் ஆனால்

எப்போதும் ஒருவரைக்கூட

எதிர்பார்த்து நிற்காதே.

அவரை போல இவரை போல

அல்லாமல் உன்னைப்போல் வாழ்ந்து காட்டு.

தனித்து விட்டால் தான் தெரியும்

நம் பலமும் பலவீனமும் நமக்கு தெரியும்.

தளராத இதயம் உள்ளவனுக்கு

இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை.

கடினமான பாதைகள்

எப்போதும் மகிழ்ச்சியான

இலக்கையே சென்றடையும்.


Life Success Motivational Quotes in Tamil

தோல்வி பட்ட உனக்கு

மட்டும் தானே தெரியும்

வெற்றியின் அருமை!

தன்னம்பிக்கை ஒன்றை

மட்டும் நினைவில் வைத்து

உன் வெற்றிக்காக வரிந்து கட்டு.

ஒரு விஷயத்தை

உன்னால் கனவு காண முடியுமானால்

அதனை உன்னால் செய்யவும் முடியும்.

வெற்றிக்கும்,தோல்விக்கும்

சிறிய வித்யாசம் தான்

உன் கடமையய் செய்தால் வெற்றி

கடமைக்கு செய்தால் தோல்வி.

சிக்கல்களை எதிர்கொள்ளு போது

கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.

எந்த ஒரு செயலையும்

ஆர்வம் குறையாமல்

நம்பிக்கையுடன் ஆரம்பியுங்கள்

வெற்றி தானாகவே நம்மை தேடி வரும்.

நம்பிக்கை உள்ள மனிதனுக்கு

எப்போதும் ரோஜா மட்டும் தான்

கண்ணில் படும் முட்கள் இல்லை


Life Success Motivational Quotes in Tamil

சிந்திக்க தெரிந்தவனுக்கு

ஆலோசனை தேவை இல்லை

துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு

வாழ்க்கையில் தோல்வியே இல்லை.

அதிகாலை நீ நினைத்த

நேரத்தில் எழுந்து விட்டாலே

தோல்விகள் உன்னை விட்டு

ஒதுங்கி கொள்ளும்!

ஆண்டவன் சோதிப்பது

உன்னை மட்டும் இல்லை

உன்னை போல சாதிக்க துடிக்கும்

புத்திசாலிகளை மட்டும்!

எல்லோரையும் திருப்திப்பட வைக்க

நினைப்பவனால் வாழ்க்கையில்

வெற்றி பெற முடியாது!

Life Success Motivational Quotes in Tamil

உன் மீது

உனக்கே நம்பிக்கை இல்லை என்றால்

கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை.

தோல்வி அடைந்தவன்

மாற்ற வேண்டியது

வழிகளைத்தான்

இலக்கை அல்ல.


யானையால்,

தும்பிக்கை இல்லமால் வாழ முடியாது

மனிதனால்,

நம்பிக்கை இல்லாமல் வாழ முடியாது.

உலகம் உன்னை அறிவதை விட

உன்னை உலகிற்கு அறிமுகம் செய்துகொள்.

திறமைகள் எல்லோரிடமும் இருக்கிறது

ஆனால் அதை செயல்படுத்தும் விதத்தில் தான்

உனக்கான இடம் தோல்வியா வெற்றியா என்பது அமைகிறது.

Life Success Motivational Quotes in Tamil

நீங்கள் தூங்கும் போது பணம் சம்பாதிக்க

ஒரு வழியை கண்டு பிடிக்கவில்லை என்றால்

நீங்கள் இறக்கும் வரை உழைத்து கொண்டே இருக்க வேண்டியிருக்கும்

மற்றவர்களின் எண்ணங்கள்

ஒரு போதும் என்னை வீழ்த்தியதில்லை

காரணம் என் மனா வலிமைக்கு பலம் அதிகம்.succe

முடியாது என்பது சோம்பேறிகளின் வீண் வார்த்தை

இந்த உலகில் முடியாது என்பது எதுவுமே இல்லை.

நீ முடியாது என்று சொல்வதை

எவனாவது ஒருவன் கண்டிப்பாக

பிற்காலத்தில் செய்து முடிப்பான்.

Tags:    

Similar News