Kovam Quotes in Tamil-கோபம் என்பது தீயினும் கெடுதியானது..!
கோபம் கொள்வது அளவோடு இருக்கவேண்டும். கோபம் அதிகமானால் உடல் ஆரோக்யம் கெடும். பல்வேறு உபாதைகளுக்கு வழிவகுக்கும்.;
Kovam Quotes in Tamil
கோபம் என்பது ஒரு கொதிநீர் போன்றது. அது கோபம் கொள்பவரையும் புண்ணாக்கும். யார் மீது கோபம் கொள்ளப்பட்டதொ அவர்களையும் புண்ணாக்கும். அது தீயினும் கொடியது. தீயினால் ஏற்பட்ட புண் ஆறிப்போகும். ஆனால் மனதால் கீறப்பட்ட புண் உள்ளிருந்து வருந்தச் செய்யும்.
அதனால் கோபம் கொள்வதை தவிர்ப்பது நல்லது. கோபம் உடல்ரீதியிலான பிரச்னைகளையும் ஏற்படுத்தும். கோபம் கொள்வதால் உடல் வெப்பம் அதிகரிக்கும். அதனால் இரத்த அழுத்தம் அதிகமாகலாம். அதனால் மனதை இலகுவாக வைத்துக்கொள்ளவேண்டும்.
அதற்கு நல்ல நூல்களை வாசிக்கலாம். காற்றில் ஆழ்ந்த சுவாசம் எடுத்து யோகா போன்ற மூச்சுப் பயிற்சிகளை செய்யலாம். காலாற நடக்கலாம். இயற்கையை ரசிக்கலாம். இப்படி மனதை இலகுவாக்க பல வழிகள் உள்ளன.
இதோ உங்களுக்காக கோபத்தின் மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன. படித்து கோபத்தை குறைத்துக்கொள்ளுங்கள்.
கோபப்படுபவர்களுக்கு
ரோசமும் அதிகம்.
பாசமும் அதிகம், ஆனால்
வேசம் கிடையவே கிடையாது.
அதீத அக்கறையின் வெளிப்பாடெல்லாம்
சில நேரம் அளவுக்கு மீறிய கோபத்தை
கொண்டுவந்துவிடும்.
அன்பை பெற்றுக்கொள்ள
விரும்பும் மனங்கள்
கோபத்தையும் அனுசரித்து
செல்ல கற்றுக்கொள்ள வேண்டும்.
சில நேரங்களில் கோபம் கூட
ரசிக்கும் பட்டியலில் முதலிடம்
பிடித்து விடுகிறது பிடித்தவர்கள் படும்போது.
Kovam Quotes in Tamil
கோபத்தில் ஒரு முடிவும் எடுக்காதே.
முடிவு எடுக்கும் முன்னே
பல தடவை யோசி பிறகு எந்த
கடினமான செயலும் உனக்குத் தூசி.
கோபம் எனும் இருட்டில்
விழுந்து விடாதே பிறகு
பாசம் எனும் பகல்
கண்ணனுக்குத் தெரியாது.
கோபத்தில் கூட இழக்காத
நிதானமும் கொட்டாத
வார்த்தைகளும் வருமுன்
காக்கும் மருந்துகள் தான்.
கோபம் என்பது அடக்கப்பட
வேண்டியது அல்ல..
கடக்கப்பட வேண்டியது.
ஆணின் கோபம் அதிகமாக
இருந்தாலும் அது அவனுக்கு
பிடித்த பெண்ணிடம்
தோற்று போகும்.
Kovam Quotes in Tamil
பேசவும் மாட்டாள்.. பேசாமல்
இருக்கவும் விட மாட்டாள்..
பெண்ணின் கோபம் என்றும்
வினோதம்.
எத்தனை கோபம் இருந்தாலும்
என்னவளின் ஒரு பார்வை போதும்..
கோபம் என்ற வார்த்தை
காணாமல் போகும்
நேர்மையாக இருப்பவர்களுக்கு
கோபம் அதிகமாக வரும்..
காரணம் ஏமாற்றங்களை
தாங்கும் சக்தி அவர்களுக்கு
இருப்பதில்லை.
கோபம் எனும் இருட்டில்
விழுந்து விடாதே.. பிறகு
பாசம் எனும் பகல்
கண்ணனுக்கு தெரியாது.
கோபம் வருவதற்கு தகுதியே
உரிமை தான்.. உரிமை
இருந்தா தான் கோபமும்
செல்லுபடியாகும்.. அன்பு
இருந்தா தான் அந்த கோபமும்
மதிக்கப்படும்.
Kovam Quotes in Tamil
உன் கோபம் காற்று மோதியதும்
உதிர்ந்திடும் இலையை போல..
என் கவிதையை பார்த்ததும்
மறைந்து போய்விடும்.
வராத போது வரும் கோபம்..
நீ வரும் போது வராததால்..
கோபம் கோபமாய் வரும்
இந்த கோபத்தின் மீது.
உள்ளே அடக்கி வைத்து
அதி வன்மத்தோடு வெளியேறும்
உச்ச கட்ட கோபம்.
கோபத்திற்கு விளக்கம்
கேட்காமல்.. அதை புறக்கணித்து
அரவணைக்கும் உறவு..
ஒரு ஈடு இணையற்ற
வரம் தான்.
உன் மீதுள்ள கோபங்களை
எல்லாம் முற்றாக அழித்து
விட்டேன்.. என் கண்ணீர்த்
துளிகளைக் கொண்டு.
Kovam Quotes in Tamil
கோபத்தில் கூட இழக்காத
நிதானமும் கொட்டாத
வார்த்தைகளும் வருமுன்
காக்கும் மருந்துகள் தான்.
ஒவ்வொரு முறை
சமாதானத்திற்கு பிறகும்..
விழுங்கப்படுகிறது சில
நியாயம் கிடைக்காத
கோபங்கள்.
கோபம் என்பது அடக்கப்பட
வேண்டியது அல்ல..
கடக்கப்பட வேண்டியது.
எல்லா சூழ்நிலைக்கும்
பொருந்தக்கூடிய ஒன்று
அமைதி.. எந்த சூழ்நிலைக்கும்
பொருந்தாத ஒன்று கோபம்.
உண்மை இருக்கும் இடத்தில்
பிடிவாதம் இருக்கும்..
நேர்மை இருக்கும் இடத்தில்
நல்ல நடத்தை இருக்கும்..
அதித அன்பு இருக்கும்
இடத்தில் கோபம் இருக்கும்.
உன் கோபம் கூட ஒருவகையான
அன்பு தான் நீ வரும் வரை
உனக்காக காத்திருப்பேன்.
ஆணின் கோபம் அதிகமாக
இருந்தாலும் அது அவனுக்கு
பிடித்த பெண்ணிடம்
தோற்று போகும்.
Kovam Quotes in Tamil
எப்போது ஒருவர் மீது
நீ அதிகம் கோபம் கொள்கிறாயா..
அப்பொழுதே புரிந்து கொள்..
நீ அவர்கள் மீது உயிராய்
இருக்கிறாய் என்று.
என் கோபம் உன்னை
எரித்து விடுகிறது..
உன் அன்பு என்னை
அணைத்துக் கொள்கிறது.
ஒருவரின் கோபம் குறைய
இன்னொருவரின் மௌனம்
அவசியமாகிறது.. அதே
மௌனம் சில சமயங்களில்
கோபத்திற்கு வித்திடுகிறது..
சொல் மட்டுமல்ல.. மௌனம்
கூட வாள் போன்றது அதை கையாள
தெரிந்து கொள்ளலாமே.
கோபம் இருந்தால் திட்டி விடு..
ஆத்திரம் இருந்தால் அடித்து விடு..
உன் மனதை காயப்படுத்தி
இருந்தால் மன்னித்து விடு..
உன் மௌனத்தை விட்டு விடு..
என்னிடம் பேசி விடு.
பேசவும் மாட்டாள்.. பேசாமல்
இருக்கவும் விட மாட்டாள்..
பெண்ணின் கோபம் என்றும்
வினோதம்.
Kovam Quotes in Tamil
கோபம் மனதில் இருக்க கூடாது..
வார்த்தையில் தான் இருக்க
வேண்டும்.. அன்பு வார்த்தையில்
மட்டும் இருக்க கூடாது.. மனதிலும்
இருக்க வேண்டும்.
எத்தனை கோபம் இருந்தாலும்
என்னவளின் ஒரு பார்வை போதும்..
கோபம் என்ற வார்த்தை
காணாமல் போகும்.