குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்கிறீங்களா..? இதை படீங்க..!
குழந்தைகளின் உரிமைகள் மற்றும் நலன்களை உறுதிப்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளில் ஜூன் 1 அன்று சர்வதேச குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
International Children's Day 2024 in Tamil,Effects of Cellphone Usage
சர்வதேச குழந்தைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
1925ம் ஆண்டுதான் முதன்முதலாக சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது. ஜெனிவாவில் நடந்த குழந்தைகள் நலன் குறித்த உலக மாநாட்டின் போது சர்வதேச குழந்தைகள் தினம் அனுசரிப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டது. நவம்பர் 4ம் தேதி, 1949ம் ஆண்டில், மாஸ்கோவில் உள்ள பெண்கள் சர்வதேச ஜனநாயகக் கூட்டமைப்பு ஜூன் 1 ஆம் தேதியை குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச தினமாக அறிவிக்கப்பட்டது.
International Children's Day 2024 in Tamil,
1950 முதல், பல கம்யூனிஸ்ட் மற்றும் பிந்தைய கம்யூனிஸ்ட் நாடுகளில் ஜூன் 1ம் தேதி அன்று குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை குழந்தைகள் தினம் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த தினமான நவம்பர் 14ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
குழந்தைகள் தினத்தில் குழந்தைகளின் நலன்களை நாம் பெரிதும் சிந்திக்கவேண்டும். அவர்களின் ஆரோக்யம் மிகவும் முக்கியம் ஆகும். அந்த வகையில் இந்த பதிவில் குழந்தைகள் தினத்தை கொண்டாடுவது பற்றி மட்டுமே நாம் பேசாமல் அவர்களின் எதிர்கால நலன்குறித்தும் பேசுகிறோம்.
குழந்தைகள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளைப் பார்க்கலாம் வாங்க.
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த இன்றைய காலகட்டத்தில் செல்போன் நமக்கு உற்றவர் போலாகிவிட்டது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை செல்போனில் அதிக நேரம் செலவிடுகிறோம்.
பணப் பரிமாற்றம் முதல் ஷாப்பிங் வரை அனைத்து சேவைகளும் செல்போனிலேயே முடிந்துவிடுகிறது. இப்படி பல நன்மைகள் இருந்தாலும் இன்னொருபக்கம் உடல் உழைப்பு இல்லாமல் சோம்பேறியாக்கிவிடுகிறது இந்த செல்போன். இன்னும் பலர் செல்போனுக்கு அடிமை ஆகும் நிலையம் உள்ளது.
International Children's Day 2024 in Tamil,
கொரோனா காலம் தொடங்கியதில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் கிளாஸ் என்று செல்போன் பயன்பாட்டு பழக்கம் தொடங்கிவிட்டது. குழந்தைகள் செல்போனுக்கு அடிமையாவது ஏன்? அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன போன்றவைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு செல்போனை ஏன் தரக்கூடாது?
செல்போனை பெரியவர்களும் அதிகமாக பயன்படுத்தக்கூடாது. இதில் கொடுமை என்னவெனில் பிறந்த குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்கும் சில பெற்றோர் செல்போனை கொடுக்கிறார்கள். இந்த பழக்கத்தை பெற்றோரே ஏற்படுத்துகின்றனர். பின்னர் பாதிப்பு ஏற்பட்டவுடன் கண்ணீர் சிந்துவதும் அவர்களே.
International Children's Day 2024 in Tamil,
குழந்தைகள் மூளை இருமடங்கு வேகம்
செல்போனில் இருந்து வெளிவரும் மின்காந்த கதிர்வீச்சுகள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது என்பதை பல மருத்துவ ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. செல்போன் ஸ்கிரீன்களில் இருந்து உமிழப்படும் புற ஊதாக் கதிர்கள் மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும். குறிப்பாக குழந்தைகளுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துவன. காரணம் குழந்தைகளின் மூளை பெரியவர்களின் மூளையை விட இரண்டு மடங்கு கதிர்வீச்சுகளை உறிஞ்சம் சக்தி கொண்டது என்றும் அறிவியல் ரீதியாக கூறப்படுகிறது.
ஏற்படும் பக்க விளைவுகள்
குழந்தைகள் மீது புற ஊதாக் கதிர்கள் தாக்கும் போது குழந்தைகளின் கண்கள் பாதிப்படையும் வாய்ப்புகள் உள்ளன. இது தூக்கமின்மையை ஏற்படுத்தும். குழந்தைகளின் மூளை செயல்பாடு பெருமளவில் பாதிக்கப்படும். அறிவுத்திறனில் குறைபாடுகள் ஏற்படும். அவர்களின் நடத்தை பாதிக்கப்படலாம்.
இவ்வளவு பாதிப்புகள் உள்ள செல்போனை சில பெற்றோர் சாதாரணமாக குழந்தைகளுக்குக்கொடுப்பது ஏற்புடையது அல்ல என்பதை பெற்றோர் முழுமையாக உணரவேண்டும். ஏதோ அந்த காலத்தில் குழந்தையின் அழுகையை நிறுத்த பொம்மை போன்ற விளையாட்டுப்பொருட்கள் பயன்பட்டன.
இப்போது குழந்தையின் அழுகையை நிறுத்த செல்போன் பயன்படுகிறது. இது பெருமைக்குரிய விஷயம் அல்ல. நாமே நம் குழந்தையின் உயிரோடு விளையாகிறோம் என்பது பொருளாகும்.
International Children's Day 2024 in Tamil,
குழந்தைகள் அடிக்க நேரம் செல்போனையே பார்த்துக்கொண்டிருப்பதால் குழந்தைகளுக் குறைபாடு அல்லது பேச்சு தாமதம் ஏற்படலாம். மனநல குறைபாடு, குழப்பம் மற்றும் சிந்தனை தடைபடுதல் போன்ற ஆரோக்ய குறைகள் ஏற்படலாம். மேலும் குழந்தைகள் ஓடியாடி விளையாடாமல் செல்போனை பார்த்துக்கொண்டு ஒரே இடத்தில் இருப்பதால் உடற் செயல்பாடு குறைந்து உடல் பருமன் ஏற்படுவதுடன் எலும்பு ஆரோக்யம் பெரிதும் பாதிக்கப்படும்.
இன்றைய தொழில்நுட்பம் வளர்ந்த காலகட்டத்தில் செல்போனில் ஏராளமான தீமைகள் இருப்பதை நாம் எரிந்து இருந்தாலும் கூட செல்போன் பயன்பாடு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. குழந்தைகளிடம் இருந்து இதை தவிர்ப்பதற்கு மிக குறைந்த நேரம் கொடுக்கலாம். இதுகூட தவிர்க்கமுடியாத சூழலில் மட்டுமே செய்யலாம்.
செல் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் 10 தீய விளைவுகள்
- கதிர்வீச்சு தாக்கம்
- குறைபாடான அறிவாற்றல் செயல்பாடு.
- தூக்க தொந்தரவுகள்.
- அதிகரித்த மன அழுத்த நிலைகள்.
- கண் சோர்வு மற்றும் பார்வை பிரச்சனைகள்.
- கழுத்து மற்றும் முதுகு வலி.
- விபத்துகள் ஏற்படும் ஆபத்து அதிகரிப்பு
- சமூக திறன்கள் குறையும்.
- போதை (அடிமை ஆகுதல்)
- கல்வியில் மோசமான செயல்திறன்
இயற்கையான இடங்களில் நேரத்தை செலவிடுங்கள்
அதாவது செல்போன் மடிக்கணினி போன்றவைகளை ஒரு நாளில் ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் மட்டுமே உபயோகிக்க கொடுக்கலாம். ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக குழந்தைகளுடன் அருகில் உள்ள பூங்கா அல்லது பீச்சுக்கு அழைத்துச் செல்லலாம்.
அப்போது நமது நண்பர்களின் குடும்பத்தையும் அழைத்துச் சென்றால் எல்லா குழந்தைகளும் சேர்ந்து விளையாடுவார்கள். அந்த விளையாட்டு மன மகிழ்ச்சியை ஏற்படுத்துவதுடன் உடல் ஆரோக்கியத்தையும் தரும்.