யார் மானத்துக்கு அஞ்சுவார் தெரியுமா..? தெரிஞ்சுக்கங்க..!
அவமானங்கள் என்பது இல்லாதவர்களுக்கு மட்டுமே சொந்தமானது. வசதி படைத்தவர்கள் அவமானங்களை இலகுவாக கடந்துசென்று விடுவார்கள்.;
insult quotes in tamil-அவமானங்களின் மேற்கோள்கள் (கோப்பு படம்)
Insult Quotes in Tamil
நமது நாட்டில் கோடீஸ்வரர்களாக வாழ்ந்த பலர் வங்கிகளில் கடன் வாங்கி குவித்து சம்பாதித்துவிட்டு வெளிநாட்டுக்கு ஓடி தஞ்சமடைந்த பல சம்பவங்களை நாம் நேரில் பார்த்தவர்கள். வங்கியில் விவசாயம் செய்ய கடன் வாங்கி கட்டமுடியாதவர்களை துரத்தி துரத்தி, வீட்டை ஜப்தி செய்கிறேன், விவசாய டிராக்டரை பறிமுதல் செய்கிறேன் என்று ஓடும் வங்கி அதிகாரிகள், கோடி..அல்ல அல்ல ஆயிரம் கோடிகளை ஸ்வாகா செய்த பெரும் கொள்ளையர்களை ஏன் விட்டுவைத்தார்கள்?
Insult Quotes in Tamil
சிறிய கடனை வாங்கிவிட்டு மானத்துக்கு அஞ்சி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட எத்தனை விவசாயிகளை நாம் பார்த்துள்ளோம். கடனுக்கு பயந்து நாடுவிட்டு நாடு ஓடும் பணக்காரர்களுக்கு அவமானங்கள் சாதாரணம். துடைத்துவிட்டு சென்றுவிடுவார்கள். இல்லாத ஏழைக்கு மட்டுமே அவமானங்கள் உறைக்கும்.
இதோ வலிமிகுந்த அவமான மேற்கோள்கள்
அன்பை தருபவர்களை விட
அனுபவத்தை தருபவர்கள் தான்
வாழ்க்கையில் அதிகம்..
சோகங்களும் வலிகளும் அனைவரது வாழ்விலும் உண்டு
அவற்றை மறந்து வாழவேண்டுமே தவிர
மறைத்து வாழக்கூடாது
அன்று உனக்காக சிரித்தவர்கள்,
இன்று உனக்காக அழுதால்..
நீ வாழ்ந்த வாழ்க்கை அர்த்தமானது
Insult Quotes in Tamil
அடுத்தவரை ஈர்ப்பதற்காகவும்!!
அடுத்தவரின் எண்ணங்களுக்காகவுமே
இங்கு பலரின் வாழ்க்கை நகருகிறது !!!
ஆயிரம் ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்காத பாடத்தை
வாழ்க்கை கற்றுக்கொடுக்கும்
அந்த பாடத்தை கற்க மறுத்தால்
வாழ்க்கை கடினமாகும்
இரு பக்கமும் கூர்மையான கத்தியை
கவனமாக பிடிக்க வேண்டும்..
அதுபோல, எந்தப் பக்கமும் சாயக்கூடிய மனிதர்களோடு
கவனமாக பழக வேண்டும்..!
கடலில் கல் எறிந்தால்,
கடலுக்கு வலிப்பதில்லை மாறாக,
கல் தான் காணாமல் போகும்..
அதுபோல, வாழ்வில் விமர்சனங்கள் வந்தால்..
கடலாக இருங்கள், வலிகள் காணாமல் போகும்..
Insult Quotes in Tamil
வாழ்க்கையை வாழும் போதே ரசித்து வாழுங்கள்
ஏனென்றால் எப்போது எதை இழப்போம்
என்பது நமக்கே தெரியாது
வாழ்க்கை என்பது
உனக்காக இடத்தை தேடுவது அல்ல
உனக்கான உலகத்தை உருவாக்குவது
மனமும் கண்ணாடியை போல்தான்
உடையும் வரை யாரையும்
காயப்படுத்துவதில்லை
யாருக்காகவும் காத்திருக்காதே
நீ காத்திருப்பதால்
உன் ஆயுள்
அதிகரிக்கபோவதில்லை
Insult Quotes in Tamil
நம்மை யார் என்று நமக்கே தெரியப்படுத்த
தேவைப்படும் ஒரு கருவி தான்.. அவமானம்.
உங்கள் வாழ்க்கையில்
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா?
யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்
அணை உடைத்த நீர் அழிவையே தரும்
மணம் உடைத்தவார்த்தை
இழிவையே தரும்
வாழ்க்கையில் நீ தடுக்கி விழுந்தால்
தூக்கிவிட யாரும் வர மாட்டார்கள்
ஆனால் நிமிர்ந்து நீ நடந்தால்
தடுக்கிவிட பலரும் இருப்பார்கள்
வாழ்க்கை என்றால்
ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்
Insult Quotes in Tamil
ஆயிரம் ஆசிரியர்கள்
கற்றுக்கொடுக்க முடியாத
வாழ்க்கைப் பாடத்தை
ஒரு சில தோல்விகள்
நமக்கு கற்றுக்கொடுத்துவிடும்
வாழ்க்கையில் வலிகளை
அனுபவித்தவர்கள் காட்டும் வழிகள்
எப்போதும் சிறந்ததாகவே இருக்கும்
இறுதி வரை வாழ்க்கை
இப்படியே இருக்க வேண்டும்
என்ற கவலை சிலருக்கு
வாழ்க்கை இப்படியே இருந்து விடுமோ
என்ற கவலை சிலருக்கு
நேசிக்க யாரும் இல்லை என
யோசிக்க வைக்கிறது வாழ்க்கை
நேசிக்க அன்பு வரும்பொழுது
அதை நினைக்க மறந்துவிடுகிறது
Insult Quotes in Tamil
போராடி வாழ்வதற்கு
வாழ்க்கை ஒன்றும் போர்க்களமல்ல
அது பூ வனம்
ரசித்து வாழ்வோம்
யாரும் அறியாத முகம் அனைவரிடமும் உண்டு
அது தெரியாத வரை
அனைவரும் நல்லவர்களே
இருளான வாழ்க்கை என்று
கவலை கொள்ளாதே
கனவுகள் முளைப்பது
இருளில் தான்
வாழ்க்கை என்னும் நதியின் இருபுறமும்
இருப்பது கரை என்னும் நம்பிக்கை
அதில் பீறிட்டு ஓடுகிறது
விதி என்னும் வேடிக்கை
தனக்கு உண்மையாக இருக்கும்
ஒருவனுக்கு யாருடைய உபதேசமும்
தேவையில்லை
Insult Quotes in Tamil
தளராத இதயம் உள்ளவனுக்கு
இவ்வுலகில் முடியாதது என்று
எதுவும் இல்லை
அன்பை தருபவர்களை விட
அநுபவத்தை தருபவர்கள் தான்
வாழ்க்கையில் அதிகம்
காணாமல் போனவர்களை தேடலாம்
அதில் சிறிதும் தவறு இல்லை
கண்டும் காணாமல் போனவர்களை மட்டும்
உன் வாழ்க்கையில் நீ தேடி விடாதே
வாழ்க்கை என்றுமே அழகானது தான்
உங்கள் மனம் சொல்வதை
மட்டுமே கேட்டால்
வாழ்க்கை வாழ்வதில் இல்லை,
நம் விருப்பத்தில் இருக்கிறது
வெற்றி பெற்றவர்கள் தோல்விக்காக காத்திருக்கிறார்கள்
தோல்வி கண்டவர்கள் வெற்றிக்காக காத்திருக்கிறார்கள்
இதுதான் வாழ்க்கை
Insult Quotes in Tamil
எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று
நீயும் பின்தொடராதே
உனக்கான பாதையை
நீயே தேர்ந்தெடு
நம்மை நாம் கேள்வி கேட்காதவரை
நம் தவறுகளை நாம் உணரபோவதில்லை
நிறைய பேர் செல்வதால்,
அது நல்வழி என்று பொருளல்ல.
ஒருவனின் தெளிவான குறிக்கோளே
வெற்றியின் முதல் ஆரம்பம்
நம்மீது நம்பிக்கை
நமக்கு இருக்கும்
வரை நம் வாழ்க்கை
நம் வசம்
நமக்கு தெரிந்தது மிகவும்
குறைவு என்பதை புரிந்து
கொள்ள பலரை நாம்
கடந்து செல்ல வேண்டும்
Insult Quotes in Tamil
விரும்பியதைப்
பெற காசிருந்தால்
மட்டும் போதாது
பொறுமையும் வேண்டும்
தவறு செய்ய யாரும் பயப்படுவதில்லை
செய்யும் தவறு வெளியே தெரிய கூடாது
என்றே பயப்படுகிறார்கள்
புரிந்து கொள்ளவில்லை
என்றாலும் பரவாயில்லை
எதையும் தவறாகப்
புரிந்து கொள்ளாதீர்கள்
உங்கள் வாழ்க்கையில்
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா?
யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்
Insult Quotes in Tamil
சூழ்நிலை எதுவாயினும்
உன்னை நம்பி வந்தவரை
ஒரு நாளும் ஏமாற்றாதே
விருப்பம் இருந்தால்
ஆயிரம் வழிகள்
விருப்பம் இல்லாவிட்டால்
ஆயிரம் காரணங்கள்
இவை தான்
மனிதனின் எண்ணங்கள்
யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ளாதே
உனக்காக தன்னையே மாற்றிக் கொள்ளும் ஒருவரை
என்றும் கைவிடாதே
உன்னை மதிக்காத
இடத்தில்
பிணமாக கூட
இருக்காதே
வாழ்க்கையில் வெற்றி
அடைய முக்கியமான
மந்திரம் உனது
ரகசியங்களை
யாரிடமும் பகிராதே
Insult Quotes in Tamil
நமக்கு பிடித்ததை தான்
நாம் செய்ய வேண்டுமே தவிர
அது மற்றவர்களுக்கு பிடிக்குமா
என்று யோசிக்க கூடாது
உண்மையும் நேர்மையும்
பயம் கொள்ளாது
மாறாக மரியாதை
தந்து பழகும்
பிடித்ததைப் பறித்துப்
பிடிக்காததை கொடுத்து
சந்தோஷமாக வாழ்
என்று சொல்லி சிரிக்கிறது
வாழ்க்கை
வாழ்க்கையில்
பல வலிகளும் உண்டு
பல வழிகளும் உண்டு
வலியை மறந்து
புது வழியை கண்டுபிடியுங்கள்
வாழ்க்கை சுகமாகும்
விதியை நம்பிக்கொண்டு இருப்பவன்
என்றும் விழிக்க மாட்டான்
தன்நம்பிக்கையோடு இருப்பவன்
என்றும் தோற்க மாட்டான்
Insult Quotes in Tamil
தேவை இல்லாமல் பேசுவதை விட
மெளனமாக இருப்பதே சிறந்தது
நம் மனதை புரிந்துகொள்ளாத ஒருவர்க்கு
நாம் பேசும் வார்த்தைகளும் புரியாது
எல்லா தத்துவங்களும் இளமையிலே வாசிக்கக் கிடைக்கிறது
ஆனால், அதை பின்பற்ற முதுமை வரை போராட வேண்டியிருக்கிறது.
வலிகளை மறக்க வழி கிடைத்தால்
விழி திறந்து அந்த வழியில் செல்
வலிகளால் என்றும் வாழ்க்கை இனிக்காது
சிரிக்கும் போது
வாழ்கையை வாழ
முடியும் ஆனால்
அழும் போது மட்டுமே
வாழ்கையை புரிந்து
கொள்ள முடியும்
குணத்தைப் பற்றி சொல்ல ஆள் இல்லை
குறை சொல்ல ஊரே உள்ளது
நம் பயம்
எதிரிக்கு தைரியம்
நம் அமைதி அவனுக்கு குழப்பம்
குழப்பத்தில் இருப்பவன் எப்போதும் ஜெயித்ததில்லை
Insult Quotes in Tamil
எண்ணங்கள் அழகானால்
எல்லாமே அழகாக மாறும்
வாழ்க்கையில் வென்றவனுக்கும்
தோற்றவனுக்கும் வரலாறு உண்டு
ஆனால் வேடிக்கை மட்டும் பார்த்தவனுக்கு
ஒரு வரி கூட கிடையாது
எனவே, பேசுவதை விட செயலில் காட்டுங்கள்
அதிக வலிகளை கண்ட உள்ளம்
வாழ்க்கையில் நல்ல வழிகாட்டியாக இருக்கும்
உழைத்த காசிற்கு
மட்டும் கையேந்து
மற்ற எதற்கும்
எவரிடமும் கையேந்தாதே
கற்பனை என்ற
போர்வையில்
ஒளிந்திருக்கின்றன
நம் நிறைவேறா
ஆசைகள்
வலிமை உள்ளபோதே
சேமிக்க பழகு
கடைசியில் யாரும்
கொடுத்து உதவமாட்டார்கள்
துணியாத வரை வாழ்க்கை பயங்காட்டும்,
துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்
Insult Quotes in Tamil
என்ன நடந்தது
என்பதை விட
அதை நாம்
எப்படி எடுத்துக்கொள்ளுகிறோம்
என்பதே வாழ்க்கை
தூய எண்ணம்
கொண்டிருங்கள்
ஏனெனில் எண்ணத்தின்
பிரதிபலிப்பே வாழ்க்கை
அலட்சியம் என்பது எவ்வளவு பெரிய தவறு
என்று இழப்பு ஏற்படும் வரை தெரிவதில்லை
உன்னைத் தாழ்த்துபவர்
முன் உயர்ந்து நில்
உன்னை வாழ்த்துபவர்
முன் பணிந்து நில்
வாழ்க்கை என்றுமே அழகானது தான்
உங்கள் மனம் சொல்வதை மட்டுமே கேட்டால்
வலி தாங்கும்
மனமிருந்தாலே போதும்
வாழ்க்கை முழுவதும்
சிரித்து மகிழலாம்
வாழ்வின் அர்த்தமும்
நோக்கமும் மகிழ்ச்சி
ஒன்றுதான்
அதிக வலிகளை
கண்ட உள்ளம்
வாழ்க்கையில் நல்ல
வழிகாட்டியாக இருக்கும்
Insult Quotes in Tamil
தனக்கு வலிக்கும்
வரை மற்றவர்களின்
வலி என்பது நமக்கு
ஒரு தகவலே
வாழ்க்கையை
வாழும் போதே
இரசித்து வாழுங்கள்
சகித்துக்கொண்டு வாழ்வதல்ல வாழ்க்கை
சலிக்காமல் வாழ்வதே வாழ்க்கை
குறைவாய் பேசுதலும்
மௌனமாய் இருப்பதும்
தலைசிறந்த தற்காப்பு
வாழ்வில் வெற்றியும் நிரந்தரம் அல்ல
தோல்வியும் நிரந்தரம் அல்ல
போராட்டம் ஒன்றே நிரந்தரம்
வாழ்க்கையில்
மேடும் இருக்கும்
பள்ளமும் இருக்கும்
நாம் தான் மகிழ்ச்சியாக இருக்க
கற்றுக்கொள்ள வேண்டும்
நாம் உணர்ந்து விரும்பி செய்யும் காரியங்கள் மட்டுமே,
நம் வாழ்க்கையை அழகுபடுத்தும்!
மற்றவருக்கு பயப்படும் படி
வாழ்வதல்ல வாழ்க்கை
மற்றவர்க்கு பயன்படும் படி
வாழ்வதே வாழ்க்கை
Insult Quotes in Tamil
துன்பம் இல்லாத
இன்பமும்
முயற்சி இல்லாத
வெற்றியும் அதிக
நாள் நிலைப்பதில்லை
கொடுத்து வாழ்
கெடுத்து வாழாதே
நீங்கள் தொலைக்காத
ஒன்றை உங்கள் மனம்
தேடிக்கொண்டே இருக்கிறது
அதுதான் நிம்மதி
உங்கள் வாழ்க்கைக்கு
மற்றவர்களின் மூளையை
எஜமானாக்காதீர்கள்
இதுதான் இறுதி பக்கம் என்று
கூற முடியாத ஒரு புதிர் புத்தகம்
தான் வாழ்க்கை
இந்த நிகழ்காலமே
உன் எதிர்காலத்தை மாற்றும்
சக்தி முடிந்ததை எண்ணி
வரும் காலத்தை வீணாக்காதே
வாழ்க்கை வாழ்வதற்கே
தவிர இல்லாததை
கிடைக்காததை நினைத்து
ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல
Insult Quotes in Tamil
நமக்கு முக்கியத்துவம்
இல்லை என்ற பட்சத்தில்
முடிந்தவரை முகம்
காட்டாமல் இருப்பது நல்லது
நீர்க்குமிழியை
போல் வாழ்க்கை
மறைவதற்குள் ரசித்திடுவோம்
விளையாட்டாக எடுத்துக்கொள்ளும் விசயங்களில் தான்
அதிக தோல்விகளை சந்திக்கின்றோம்
ஒருவரை நம்புவதாக
இருந்தால் அவர் சொல்லை
கேட்டு நம்பாதே
அவர் செயலை
பார்த்து பின் நம்பு
உண்மையாக இருப்பவர்கள் தான்
வாழ்க்கையில் அதிகம்
ஏமாற்ற படுகிறார்கள்
வாழ்க்கை வாழ்வதில்
இல்லை நம்
விருப்பத்தில் இருக்கிறது
சில நேரம்
கண்ணீரைத் துடைக்க
யாரையோ நாடுகிறோம்
நம் கைகளை
கட்டிவிட்டு
சந்தோஷங்கள் வெகு
தூரத்தில் தான்
பிரச்சனைகள் மனதை
ஆளும் வரையில்
Insult Quotes in Tamil
செருப்பாக உழைத்தாலும்
சேமித்து வைக்க
பழகுங்கள் வாழ்க்கை
அறுந்தால் தைப்பதற்கு
நிச்சயம் உதவும்
நாம் உணர்ந்து
விரும்பி செய்யும்
காரியங்கள் மட்டுமே நம்
வாழ்க்கையை அழகுபடுத்தும்
தவறுசெய்ய ஆயிரம்
வழிகள் இருந்தாலும்
அறத்துடன் வாழும்
வாழ்க்கையே அழகான
வாழ்க்கை
சொல்லத் தெரியாத வயதில் சத்தமாகவும்
சொல்லத் தெரிந்த வயதில் மௌனமாக
மனதிற்குள்ளும் அழுது கொள்கிறோம்
தோல்வி உறுதி என்றால்
போர்க்களம் போகாதே
சமாதானம் பேசிவிடு
நேரமும் ஆயுதங்களும்
சேமிப்பாகிவிடும்
Insult Quotes in Tamil
நீ நீயாக இரு
பிடித்தவர்கள் நேசிக்கட்டும்
பிடிக்காதவர்கள் யோசிக்கட்டும்
கால் கொண்டு
மட்டும் கடந்துவிட
முடியாத பாதை
வாழ்க்கை
அதிக ஆசை
இல்லாதவர்கள் மட்டும்
தான் அதிக சந்தோசத்துடன்
வாழ்கிறார்கள்
புகழ்ச்சியையும்
இகழ்ச்சியையும்
சரிசமமாக
ஏற்றுக் கொள்
சிரித்து கொண்டே
இரு வலிகள் கூட
விலகி கொள்ளும்
அழைப்பு வரும் வரை
உழைப்பு அவசியம்
பணம் யாருடன் அதிகம்
சேர்கிறதோ அவர்களை
உலகத்துக்கு அதிகமாக
பிடிக்க வைத்து விடுகிறது
ஏக்கர் ஏக்கராக இடம்
வாங்குபவனை பார்த்து
சிரித்தது சுடுகாடு
உன்னைய வாங்க
போவது நான்தான் என்று
Insult Quotes in Tamil
மனம் தான் பிரச்சனை
மனம் தான் தீர்வு
நேர்மறை சிந்தனை
உள்ளவனை விசத்தால்
கூட கொல்ல முடியாது