வலி வந்தால் மட்டுமே வேதனை புரிகிறது..! உங்களுக்கு எப்படி..?
Heart Pain Quotes in Tamil-வலி என்பது விதியின் வழியல்ல. அது நம்மால் ஏற்படுத்தப்பட்டதே. அன்புக்கு ஆசைப்பட்டு பிரிவு எனும் கோடரியை காலில் போட்டுக்கொண்டதுபோல நமக்கு நாமே ஏற்படுத்திக்கொண்டது.;
Heart Pain Quotes in Tamil-கவலை என்பது தானே வருவதில்லை. அது நாமே உருவாக்கிக்கொள்வதே. எல்லோருமே மகிழ்ச்சியாக மட்டுமே வாழ நினைப்பார்கள். கவலையை யாரும் தேடிப்போய் அறுவடை செய்வதில்லை. அது பிறரால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம். அல்லது ஒருவர் செய்த தவறுகளால் ஏற்பட்ட கவலையாக இருக்கலாம். காதலில் தோல்வி கண்டவர்கள், வேண்டிய அல்லது நேசித்த உறவுகளை பிரியும்போது அல்லது அந்த உறவுகளை இழக்கும்போது கவலைகள் வருவது இயல்பு. அது அவர்களை நோகச் செய்யும், துன்புறுத்தும்.,வேதனைப்படவைக்கும். நமது வாசகர்களுக்காக வலி எவ்வளவு மோசமானது என்பதை விளக்கும் வலி மிகுந்த மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன.
மரணத்தை காட்டிலும் கொடுமையானது மனக்கவலை. அது ஆளையே கொல்லும்.
மரணம் ஒருமுறை தான் கொல்லும்..மனக்கவலை நொடிக்கு நொடி கொல்லும்..!
சிலரின் மௌனம் திமிரல்ல அவர்களுக்குள் இருக்கும் வலி…!
பழகிய மிருகங்களிடம் இருக்கும் பாசம் கூட,பழகிய மனிதர்களிடம் இருப்பதில்லை…! மனிதர்களைவிட விலங்குகள் பாசம் வைக்கிறன்றன..!
ஒருதுளி அன்பை கொடுத்து, நூறுதுளி கண்ணீரை விலை கேட்பதுதான் இந்த வாழ்க்கை…! அது பாசத்துக்கும், அன்புக்கும் கொடுத்த விலை..!
காயங்களின்றி காலம் எதையும் கற்றுக்கொடுப்பதில்லை…! காயங்கள் பாடங்களைக் கற்றுத்தரும் ஆசான்..!
உயிரோடு இருக்கிறேன். ஆனால் உடைந்து இருக்கிறேன். என்னவென்றே தெரியாத பல காரணங்களால்…! எதையோ இழந்ததின் வலி என்று என் மனம் சொல்கிறது. அன்பென்று சொல்லிக்கொண்டு என்னை ஏமாற்றிய துரோகத்தின் வலியால் வந்த வேதனை வடுக்கள்..!
ஏ..விதியே..ஒருநாளாவது என்னை நீ நிம்மதியாக உறங்க வை. அது என் மரணமாக இருந்தாலும் கூட பரவாயில்லை…!
நான் நேசிக்கும் ஒரு உறவும் எனக்கு நிரந்தரமில்லை என்பது கடவுளால் அளிக்கப்பட்ட சாபம் போல…! ஒரு உறவு கூட என்னைப் புரிந்துகொள்ளவில்லை..!
நானே வறுமையில் வாழ்கிறேன். ஆனால், வறுமையோ என்னிடம் வசதியாய் வாழ்கிறது…!
ஏமாற்றம் ஒன்றும் எனக்கு புதிதல்ல. நான் ஏமாறும் விதம்தான் எனக்குப் புதிது. சிலநேரம் அன்பால், சில நேரம் துரோகத்தால், சிலநேரம் நம்பிக்கையால்…!
நேசிப்பவர்கள் எல்லாம் நம்மோடு நிலைத்துவிட்டால் நினைவின் மொழியும், பிரிவின் வலியும் தெரியாமல் போய்விடும்…! பிரிவின் துயரை அறியத்தான் வலி என்பது கடவுளின் ஏற்பாடோ..?
என்ன நடந்தாலும் உன்னிடம் சொல்லியே பழகிவிட்டேன். நீ பிரிந்து போனதை நான் யாரிடம் சொல்ல?
என் இதயமும் உணர்வற்ற நிலையில் உன் நினைவால்..என் உயிர் மட்டும், வாழுதடி…!
மறக்கத்தான் நினைக்கிறேன் உன்னை,ஆனால் முடியவில்லை.. நீ என்னை மறந்து விட்ட போதிலும் கூட..!
நீ அளித்த அன்பளிப்புகளிலேயே அற்புதமான அன்பளிப்பு இந்த வேதனைதான்…
பொய்யாக நேசிப்பவர்கள் கூட சந்தோசமாக இருக்கின்றனர்...! அப்படி பொய்யாகவே என்னை நேசிப்பதாக நடித்திருக்கலாமே..! நான் சிறிது காலமாவது நிம்மதியாக இருந்திருப்பேன்..!
உண்மையாக நேசிப்பவர்கள் தான் அதிகம் காயப்படுகின்றனர்..! அது உண்மைக்கு கிடைக்கும் தண்டனை..!
எங்கு சென்றாலும் தொடரும் நிலவாய் என்னை எப்போதும் பின் தொடர்கிறது உன் நினைவுகள்…!
மறக்க நினைக்கும் நீயும் , மறக்க முடியாமல் நானும்...! தடுமாறித்தான் நிற்கிறேன் மறக்கமுடியாமலேயே..!
விடைபெறாத என் வார்த்தைகளால்..விடுபட்டு நிற்கிறது என் காதல் உந்தன் முன்…! இடைப்பட்ட காலங்களில் நான் என்ன தவறு செய்தேன், உன்னை நேசித்ததைத்தவிர..!
கனவு கலைந்தாலும் காட்சிகள் கண்ணில், காதல் தொலைந்தாலும் நினைவுகள் நெஞ்சில்…!
அளவில்லாமல் சிரிக்க வைத்தவர்கள், ஒருநாள் அழவும் வைப்பார்கள்..! அது அவர்களுக்கு கை வந்த கலை. போலும்..!
வாழ்க்கையில் மிகப்பெரிய கொடுமை நாமாகவே கற்பனை செய்து..இன்னொருவரின் மேல் அளவு கடந்த அன்பு வைப்பது…!
உடலுக்கு உயிர் கூட சுமைதான். நாம் உயிராக நினைக்கும் ஒரு உயிர் நம்மை மறந்து சென்றால்…!
ஒரு நாள் நீ நானாக வேண்டும்…! நான் நீயாக வேண்டும்..! அன்று உனக்குப் புரியும் நான் பட்ட வேதனை..!
நேற்றுவரை முக்கியமாக இருந்த நாம் நாளை யாரோவாக உணரப்படுவோம் என்று அறிந்த நொடி அமைதியாக விலகிவிடுவது நல்லது..!
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2