கடும் வெயிலை எதிர்கொள்வது எப்படி? எளிமையான டிப்ஸ்!

கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், வெளியே செல்லும்போது தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்ல வேண்டும், சர்க்கரை சத்து அதிகளவில் உள்ள பழங்களை எடுத்துக் கொள்ளலாம்;

Update: 2024-04-24 06:42 GMT

கோப்புப்படம் 

கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள நாம் செய்ய வேண்டியவைகள் குறித்து பார்க்கலாம்

வெயில் நேரத்தில் முக்கியமான வேலை இருந்தால் மட்டும் வெளியில் செல்லுங்கள். அதே வேலையை வேறு நேரத்தில் செய்ய முடியும் என்றால், அதிகளவில் வெப்பம் தாக்கும் நேரத்தில் செல்லாதீர்கள். அதனையும் மீறி வெளியில் செல்ல வேண்டி இருந்தால், குடை எடுத்துக் கொண்டு, காட்டன் துணி அணிந்து செல்லலாம். கையில் தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்ல வேண்டும். நீர்ச்சத்து மிகவும் முக்கியமானது.

வெளியில் செல்லும் போது தர்பூசணி, கிர்னி பழம் போன்ற சர்க்கரைச் சத்து அதிகளவில் உள்ள பழங்களை எடுத்துக் கொள்ளலாம்.

வீட்டில் சமைக்கும் உணவு எடுத்துக் கொள்வது நல்லது. வீட்டில் சமைத்த உணவு இல்லாமல் வெளியில் சாப்பிடும் போது, காரம் அதிகம் இல்லாமல் எளிதில் ஜீரணம் ஆவது போல் உள்ள தயிர் சாதம், இட்லி, இடியாப்பம் போன்ற உணவு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆயில் அதிகம் உள்ள உணவை எடுத்துக் கொள்ளக் கூடாது. அதிகம் வறுத்த உணவை எடுத்துக் கொள்ளக் கூடாது. தண்ணீர் சத்து அதிகளவில் உள்ள பழங்களை எடுத்துக் கொள்வது நல்லது. கோடை காலத்தில் ஆல்கஹாலைத் தவிர்ப்பது நல்லது.

நீர்ச்சத்து குறைவதைத் தவிர்க்க மோர், இளநீர் எடுத்துக் கொள்ளலாம். வீட்டிற்கு வந்த பின்னர் குளிர்ந்த நீரில் குளிக்கலாம்.

உடம்பில் சூரிய ஒளி நேரடியாக படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். சரியான தூக்கம் எடுத்துக் கொள்வதுடன், காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

ஏசியில் இருந்தாலும் தண்ணீர் குடிக்க வேண்டும். நல்ல சத்தான உணவை எடுத்துக் கொண்டால் தான் நமது உடலின் தோல் மற்றும் உடல் நலத்தையும் பாதுகாக்க முடியும்

Tags:    

Similar News