உங்க வீட்டில் பேபி இருக்கா..? அப்ப உங்களுக்கு இது தெரியணும்
உங்க வீட்டு பேபிக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துங்க.
1. தேங்காய் எண்ணெயை குழந்தையின் உதட்டில் தடவ வெடிப்புகள் நீங்கும். வறண்ட உதடு சரியாகும். ஒரு விரலால் எண்ணெயைத் தொட்டு குழந்தையின் உதட்டில் தடவி மென்மையாக மசாஜ் செய்யுங்கள்.
2. குழந்தையின் சருமத்தில் கொசுக்கடி போன்ற காயங்கள் இருந்தால், அதன் மீது தேங்காய் எண்ணெய் தடவி வர விரைவில் குணமாகும்.
3. தலைக்கு குளிக்க வைக்கும் முன் தேங்காய் எண்ணெய் தடவி 3-5 நிமிடங்கள் மசாஜ் செய்து குளிக்க வைத்தால், குழந்தையின் தலையில் ரத்த ஓட்டம் அதிகமாகி முடி நன்றாக வளரும்.
4. குழந்தையின் தலையில் பொடுகு போல தெரியும். ஆனால், அவை பொடுகல்ல. குழந்தையின் வறண்ட மண்டைத்தோல். இதற்கு குழந்தையின் தலையில் தேங்காய் எண்ணெய் தடவி 20 நிமிடங்கள் கழித்து, இளஞ்சூடான தண்ணீரில் கழுவினால் சரியாகும்.
5. குழந்தையின் சருமத்துக்கு ஊட்டச்சத்துக்களை தேங்காய் எண்ணெய் கொடுக்கவல்லது. குழந்தையின் பேபி மசாஜ் எண்ணெயாக பயன்படுத்தி வந்தாலே குழந்தையின் சருமம் மென்மையாகும்.