Health benefits of horse gram in tamil-கொள்ளு சாப்பிட்டால் என்ன நன்மை கிடைக்கும்..? தெரிஞ்சுக்கங்க..!
கொள்ளுப் பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறி விடும்.;
Health benefits of horse gram in tamil
கொழுப்பை குறைக்கும்
இளைத்தவனுக்கு எள்ளு; கொழுத்தவனுக்கு கொள்ளு என்ற ஒரு சொலவடை தமிழகத்தில் உள்ளது. அது நூற்றுக்கு நூறு உண்மை. நம் முன்னோர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் அல்ல. அறிவியல் படிக்காத அந்த காலத்திலேயே எந்த உணவில் என்ன சத்து இருக்கிறது? அதை எதற்கு சாப்பிடலாம் என்பதெல்லாம் துல்லியமாக அறிந்திருந்த படிக்காத அறிவியல் மேதைகள்.
உடலில் சேரும் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுக்கு உண்டு. மேலும் இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது. கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம்.கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும். வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல், கண்ணில் ஏற்படும் நோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும்.
வெள்ளைப்போக்கை கட்டுப்படுத்தும்
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும். பிரசவ அழுக்கை வெளியேற்றும். கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும். எலும்புக்கும், நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளுப் பருப்பு என்பதால் அதனைக் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும் முன்னோர்கள் அளித்தனர். குதிரைகள் பல மைல் தூரம் ஓடும் சக்தியை பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே. கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு - ஊளைச் சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது.
சளிக்கு கொள்ளு சூப்
குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து குடுத்துப்பாருங்கள். சளி காணாமல் போயிவிடும் என்கிறார்கள். அப்படி ஒரு அருமையான மருத்துவ குணம் இந்த கொள்ளுக்கு உண்டு. உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அருந்தலாமாம்.
Health benefits of horse gram in tamil
எடையைக் குறைக்கும்
சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும். அதை விட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊறவைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள். இது நிச்சயம் எடையை குறைக்கும் என்கிறார்கள்.
கொள்ளு ரசம்
கொள்ளை அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டால், ரசம் வைக்கும் போது சிறிது பயன்படுத்தலாம். சிலருக்கு வாயுக்களின் சீற்றத்தால் எப்போதும் வயிறு மந்தமாகவே இருக்கும். அவர்கள் கொள்ளுவை அரிசியுடன் சேர்த்து கஞ்சியாகவோ, கொள்ளுவை வறுத்து துவையலாகவோ அல்லது ரசம் செய்தோ சாப்பிட்டு வந்தால் நன்கு பசி உண்டாகும்.
கொள்ளு ரசம் உடலை வலுவாக்கும். மாதவிலக்கை சீர்படுத்தும். கை கால் மூட்டு வலி, இடுப்பு வலியைப் போக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். ஆண்மை சக்தியைப் பெருக்கும்.
‘இளைத்தவனுக்கு எள்ளு’ ‘கொழுத்தவனுக்கு கொள்ளு’ என்ற பழமொழிக்கேற்ப உடல் எடையை குறைப்பதில் அதிக சக்தி கொள்ளுவில் உள்ளது. இதில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. இதனை ரசமாக வைத்து உண்பது மிகுந்த நன்மை என்று சித்த மருத்துவத்தில் சொல்லப்படுகிறது.