சைக்கிள் ஓட்டினா இவ்ளோ நன்மைகளா..? அட..வாங்கப்பா சைக்கிள் ஓட்டுவோம்..!
சைக்கிள் ஓட்டுவது இப்போது தனி பயிற்சியாகிவிட்டது. ஆனால் ஒரு காலத்தில் சைக்கிள் மட்டுமே பிரதான போக்குவரத்து வாகனம்.;
Health Benefits of Cycling
சாலைகளற்ற கிராமங்கள்
1970ம் ஆண்டுகளுக்கு முன்னர் வரை தமிழக கிராமங்களுக்குச் செல்ல ஒழுங்கான பாதைகள் கிடையாது. எல்லாம் மண் சாலைகள்தான். அந்த சாலைகளில் மாட்டுவண்டி அல்லது சைக்கிள் மட்டுமே செல்லும். அன்று சுற்றுவட்டாரத்தில் உள்ள எந்த ஊருக்குச் சென்றாலும் சைக்கிள் மட்டுமே பிரதான போக்குவரத்துச் சாதனம்.
Health Benefits of Cycling
கன்னியரைக் கவர
அந்த காலத்து இளைஞர்கள் கன்னிப்பெண்களை கவர்வதற்காகவே அவர்களது சைக்கிளை அழகுப்படுத்தி வைப்பார்கள். டைனமோ வைப்பது, சைக்கிள் போக்ஸ் கம்பிகளில் கலர் கலராக பாசிகள் போன்ற பிளாஸ்டிக் வளையங்களை மாட்டி விடுதல், ஹேண்டில் பாரின் இரு புறங்களிலும் குஞ்சம் போல பறக்கவிடுதல் என்று பல மெனக்கெடல் இருக்கும்.
பக்கத்து ஊரில் திருவிழா என்றால் அந்த ஊர் பெண்டுபிள்ளைகளை பார்ப்பதற்காகவே மைனர் கணக்காக இளைஞர்கள் சைக்கிளில் கிளம்பிவிடுவார்கள். அப்படிப்போய் திருமணம் செய்து கொண்ட கதைகளும் உள்ளன. அப்படி சைக்கிள் சைக்கிள் என்று வாழ்ந்த சமூகம் இன்று நூறு அடி தூரம் செல்வதற்கே பைக்கில் செல்கிறது.
Health Benefits of Cycling
அறிவியல் கண்டுபிடிப்புகளால் பல நன்மைகளை இழந்துள்ள நாம் இன்று மீண்டும் சைக்கிள் ஓட்ட தொடங்கியுள்ளோம். அது கூட ஹெல்த் டிப்ஸ் போல ஆகிவிட்டது. சைக்கிள் ஓட்டினால் இவ்ளோ நன்மைகள் இருக்கு என்று யாராவது கூவிக்கூவி சொல்லவேண்டியுள்ளது.
சூழலுக்கு நண்பன்
சைக்கிள் ஓட்டும்போது உடலின் பல உறுப்புகளுக்கு ஆரோக்யம் கிடைக்கிறது. மனது அமைதி பெறுகிறது. சர்க்கரை நோய், இருதய நோய், உடல் பருமன் போன்ற பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கிறது. குறிப்பாக சைக்கிள் ஓட்டினால் பொருளாதாரம் மிச்சமாவதுடன் சுற்றுச்சூழல் கேடாவதில்லை.
சைக்கிள் என்பது நமது உடலையும் பேணிக்காப்பதுடன் இந்த பூமியையும் காக்கிறது. சைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கும் நமிங்க்ள் குறித்து விரிவாகப் பார்க்கலாம் வாங்க.
Health Benefits of Cycling
தினமும் ஒரு அரை மணி நேரம் சைக்கிள் ஒட்டுனீங்கன்னா போதும்ங்க. மூளைக்கு இரத்தம் சீராக பாய்ந்து மூளை செயல்பாடுகளை ஒழுங்குஒப்படுத்துகிறது. இதனால் உடலுக்கு சுறுசுறுப்பு உண்டாகி மனம் புத்துணர்வு பெறுகிறது.
சைக்கிள் ஓட்டும்போது கால் தசைகள், எலும்பு பகுதிகள், முதுகுத் தண்டுவடம், இடுப்பு பகுதிகள் ஆகியவை வலிமை பெறுகின்றன.
கண்டதையும் நினைத்து நமக்கு உண்டான மனச்சோர்வு மற்றும் மனஅழுத்தம் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் சைக்கிள் ஓட்டும்போது மன அமைதி கிடைக்கிறது. ஆகவே மனச்சோர்வு மற்றும் மன அழுத்தம் உள்ளவர்களுக்கு சைக்கிள் ஓட்டுவது சிறந்த தீர்வாக இருக்கும்.
சைக்கிள் ஓட்டும்போது நமது உடல் அசைவுகளில் உடலில் இருந்து வியர்வை வெளியேறும். அவ்வாறு வியர்வை வெளியேறும்போது உடலின் கொழுப்புகளை கரைத்துவிடுகிறது. அப்படின்னா உடம்பும் குறையும்.
Health Benefits of Cycling
சைக்கிள் ஓட்டுவதால் கொழுப்பு குறைகிறது. கொழுப்பு குறைவதன் மூலமாக உடல் எடை கணிசமாக குறைக்கப்படுகிறது.மேலும் இது புற்றுநோய் வருவதையும் தடுக்கிறது.
காலை நேரங்களில் நாம் எழுந்ததும் சைக்கிள் ஓட்டுவதால் இரத்தஅழுத்தம் தொடர்பான எந்த நோய்களும் நம் உடலைத் தாக்காது. கிட்ட வரவே அஞ்சி ஓடிவிடும்.
சைக்கிள் ஓட்டுவதால் இதயத் துடிப்பு சீராக செயல்படும். அவ்வாறு இதயத்தின் சீரான இயக்கத்தால் இதய அடைப்பு பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகளே இல்லாமல் போகும்.இதனால் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளும் இல்லாமல்போகும்.
சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் தினமும் சைக்கிள் ஓட்டுவதால் அது ஒரு சிறந்த உடற்பயிற்சியாக அமைகிறது. அதனால் சர்க்கரை மற்றும் கலோரி அளவுகள் கட்டுக்குள் இருக்கும்.
Health Benefits of Cycling
தினமும் சைக்கிள் ஓட்டும்போது நமது கால் பெடலை மிதிக்கிறது. அவ்வாறு பெடலை மிதிக்கும் நமது உடலின் இரண்டாம் இதயம் என்று அழைக்கப்படும் கெண்டைக்கால் தசை பலம்பெறுகிறது. அதனால் உடலின் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. அதனால் இதயத்தின் ஆயுள் காலம் நீட்டிக்கப்படுகிறது.
நாம் சைக்கிள் ஒட்டிச்செல்லும்போது இயற்கையான இடங்களில் பயணிப்போம். அவ்வாறு இயற்கையோடு பயணிப்பதால் மனம் இலகு பெறுகிறது. அதனால் மனம் அமைதியடைகிறது. மன அமைதியடைவதால் புத்துணர்ச்சி உண்டாக்கும் டோபர்மைன் ஹார்மோன் சுரப்பை அதிகமாக்கி கார்டிசால் சுரப்பைக் கட்டுப்படுத்தி நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு வகை செய்கிறது.
சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் தினமும் சைக்கிள் ஓட்டுவதால் இன்சுலின் சுரப்பியின் சுரத்தல் பணிகளை மேம்படுத்தி சீராக்குகிறது.
பருமன் அதிகம் உள்ளவர்கள் சைக்கிள் ஓட்டும்பொழுது கை, கால், வயிற்றுப்பகுதி மற்றும் இடுப்பு போன்ற பகுதிகளில் இருக்கும் தேவையில்லாத கொழுப்பு குறைந்து உடல் அழகுபெறும்.வலிமையையும் பெறும்.
Health Benefits of Cycling
சைக்கிள் ஓட்டுவதால் சுவாச உறுப்புகள் பலம் பெறுகின்றன. சைக்கிள் ஓட்டும் பொழுது நுரையீரலின் இயக்கம் அதிகரிக்கிறது. இதனால் சுவாசிக்கும் திறனும் அதிகரிக்கிறது.
சைக்கிள் ஓட்டினால் மூட்டுத் தேய்மானம், மூட்டுவலி போன்ற பிரச்சனைகள் தூர ஓடும். சைக்கிள் ஓட்டும் பயிற்சி ஒரு மருந்தாக இருந்து மூட்டு வலி, மூட்டுத் தேய்மானம் போன்றவைகளை விரட்டி அடிக்கிறது.
அழகான வலிமையான ஒரு ஆணாக இருக்க விரும்புபவர்களுக்கு சைக்கிள் ஒரு வரப்பிரசாதம். ஆண்கள் சைக்கிள் ஓட்டும்போது எலும்புகள் வலுப்பெறும் சிறந்த உடல் பயிற்சியாக சைக்கிள் ஓட்டம் இருக்கிறது.
தினமும் சைக்கிள் ஓட்டுவதால் வியர்வை வெளியேறும். வியர்வை மூலமாக சில கழிவுகள் வெளியிறிவிடு. அதேபோல சைக்கிள் ஓட்டுவதால் இரத்த ஓட்டம் சீராகி உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது. இதனால் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கச்செய்கிறது.
பெண்கள் சைக்கிள் ஓட்டுவதால் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய், கர்ப்பபை புற்றுநோய் போன்ற பிரச்சனைகளுக்கான வாய்ப்புகளை கணிசமாக குறைக்கிறது.
Health Benefits of Cycling
குழந்தை பெற்றெடுத்த பெண்களுக்கு ஏற்படக்கூடிய சிறுநீர் கசிவு பிரச்சனையை தீர்ப்பதற்கு சைக்கிள் ஓட்டும் பயிற்சி ஒரு நல்ல தீர்வாக அமைகிறது.
சைக்கிள் ஓட்டுவதால் மூச்சுவிடுவது சீராகி இதயத்துக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதன் மூலமாக ஒரு மனிதனின் ஆயுள் அதிகமாகிறது.
வளர்கின்ற சிறுவர்கள் சிறுமிகள் சைக்கிள் ஓட்டுவதால் அவர்களின் வளர்ச்சி அதிகரிப்பதோடு, பசி எடுக்கவும் உதவிபுரிகிறது. பொதுவாக வளர்ச்சி குறைந்தவர்கள் கூட சைக்கிள் ஓட்டுவதால் கால் தசையின் வளர்ச்சி அதிகரிக்க துணைபுரிந்து அவர்கள் வளர்வதற்கும் உதவியாக இருக்கும்.