Happy Birthday Quotes in Tamil-பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா?

பிறந்தநாள் என்பது ஒருவரின் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். மேலும் ஒரு மகிழ்ச்சியான பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது இனிமையான தருணமாகும்.;

Update: 2023-12-21 11:57 GMT

happy birthday quotes in tamil-பிறந்தநாள் வாழ்த்து (கோப்பு படம்)

Happy Birthday Quotes in Tamil

பிறந்தநாள் என்பது ஒருவரின் மிக முக்கியமான நாட்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது அவரின் வயதைக் குறிப்பது மட்டுமல்லாமல், பிறந்தநாள் அவரது முதிர்ச்சியையும் அனுபவத்தையும் குறிக்கிறது. நம்மில் பெரும்பாலோர் பிறந்தநாளைக் கொண்டாடுவதில் மகிழ்ச்சியாக இருந்தாலும், அது குழந்தைகளுக்கு மிகவும் முக்கியமானது. அதனால் பிறந்தநாளில் வாழ்த்துவோம்.

Happy Birthday Quotes in Tamil


மகிழ்வான தருணங்கள் மலரட்டும் இனிமையாக.. நெகிழ்வான நேசங்கள் நிகழட்டும் இளமையாக

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

பிறப்பின் நகர்வு அற்புதமானது. ஒவ்வொரு முறை வரும் போதும்

மிகவும் அழகாகிறது. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

உங்கள் பிறந்த நாள் கேக்கைப் போல இனிமையானது என்று நம்புகிறேன்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.


அனைத்து குறைகளும் இன்று நிறைகளாகி போயின நீ பிறந்த போது.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

Happy Birthday Quotes in Tamil

உங்கள் பிறந்தநாளைப் போல்

வாழ்வில் ஒவ்வொரு நாளும் இனிமையாக அமைந்திட

எனது மனமார்ந்த வாழ்த்துகள்.


உண்மையான அன்புக்கு முகங்கள் தேவை இல்லை. முகவரியும் தேவை இல்லை.

நம்மை நினைக்கும் உண்மையான நினைவுகள் போதும்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.


நீண்ட நீண்ட காலம் நீ நீண்டு வாழ வேண்டும்

வானம் தொடும் தூரம் நீ வளர்ந்து வாழ வேண்டும்

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.


என்றும் ஆரோக்கியத்தோடும் நிறைவான தன்னம்பிகையோடும்

உன் வாழ்க்கையை வெல்ல இந்த பிறந்தநாளில் வாழ்த்தும்

உன் நண்பன்.

Happy Birthday Quotes in Tamil

உன் உதடுகள் புன்னகையால் மலரட்டும். உன் உள்ளம் அன்பால் நிறையட்டும்

உன் கனவுகள் விண்ணை தொடட்டும்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

உன் பிறந்தநாளை பார்த்து மற்ற நாட்கள் எல்லாம் பொறாமைப்படுகிறது.

உன் பிறந்தநாளில் பிறந்திருக்கிலாம் என்று.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

பூவின் இதழ் போல் உன் புன்னகை மலர இந்த பூந்தோட்டத்திற்கு

எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

வண்ண வண்ண உன் கனவுகளை சுவைக்கட்டும் உன் பிறந்தநாள்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.


இன்று முதல் உங்கள் ஆசைகள் எல்லாம்

நிறைவேற உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

அன்பெனும் குடைபிடித்து அகிலமே உனை காத்திடவே

உனை சுற்றி உள்ள நட்பு வட்டங்கள் பெருக வாழ்த்துகள்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

Happy Birthday Quotes in Tamil

வருங்கால நாட்களை எல்லாம் சிறப்பாக அமைக்கட்டும்

உன் பிறந்தநாள்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

அன்பு நிலைப்பெற ஆசை நிறைவேற இன்பம் நிறைந்திட.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

உண்மையான அன்பை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது.

அதை உணர்வுகளால் மட்டுமே வெளிப்படுத்த முடியும்.

மகிழ்ச்சி பொங்க இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

நீ முதல்முறை பிறந்தபோது அழுதாய். பிறகு ஒவ்வொரு முறையும் அந்நாள் வரும்போது

மகிழ்ச்சியாய் கொண்டாடுகிறாய்.

என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்


உடலாலும் உயிராலும் சேர்ந்த உருவமான நீ, என் மனதில் நீங்காத சிற்பமானாய்

என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

Happy Birthday Quotes in Tamil

புது நாள், புது வருடம், புது அனுபவம் இவையெல்லாம் இன்னும்

சிறப்பாக அமையட்டும்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

நல்ல உடல் ஆரோக்கியத்தோடும் முகம் முழுவதும் புன்னகையோடும்

மகிழ்ச்சி நிறைந்த மனதோடும் என்றும் இன்பம் பெருக்கெடுக்க

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

வந்த கஷ்டங்கள் எல்லாம் பனி போல தூர விலகி மகிழ்ச்சி என்ற ஒன்றின்

ஒளிவீசி தித்திக்கும். எதிர்காலம் சிறப்பாக அமைய

உன் பிறந்த நாளில் மனதார வாழ்த்துகிறேன்.

வருடத்தில் பல வண்ணங்கள் மலரும் விடியலில் பிறந்தாயோ

காற்றால் மலர்களை உதிர்த்து மழைத்துளியில்

வெண்பகலை அழைத்து இதயத்தால் உன்னை வாழ்த்துகிறேன்

Happy Birthday Quotes in Tamil

உனக்கு வாழ்த்து சொல்ல புதிதாய் பிறந்தது நீயா இல்லை நானா?

உன்னை வாழ்த்த புதிதாய் யோசித்து, யோசித்து

நானே புதியதாய் மாறிப்போனேன்.

யோசித்து யோசித்தும் பிறக்கவில்லை கவிதை?

புதியதாய் இன்று பிறந்த நீயே கவிதைதானே எனக்கு. 

Tags:    

Similar News