விலையோ குறைவு..! பலனோ பெரிது ..! அட..நம்ம திராட்சையில் தாங்க..!

Grapes Benefits in Tamil-இன்றைய நாட்களில் திராட்சையை வாகனங்களில் வைத்து ஊர் முழுவதும் சுற்றி வந்து விற்பனை செய்கிறார்கள். வாங்கி சாப்பிடுங்க.. ஆரோக்யமா .வாழுங்க.!

Update: 2023-06-05 07:38 GMT

Grapes Benefits in Tamil

Grapes Benefits in Tamil

திராட்சையில் பல வகைகள் உள்ளன. பன்னீர் திராட்சை, பச்சை திராட்சை, சிவப்பு திராட்சை என பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு திராட்சைக்கு சுவைகளில் சிறிய மாற்றங்கள் இருந்தாலும் அதில் அடங்கியுள்ள சத்துகள் ஒன்றுதான். அதேபோல மற்ற பழங்களைப்போல இது விலை அதிகமானது அல்ல. சாதாரண மக்களும் வாங்கி சுவைக்கும் பழமாக திராட்சை இருக்கிறது.

திராட்சை பழங்களின் ஏராளமான உடல் ஆரோக்ய நன்மைகள் சேர்ந்துள்ளன. அதனால், நீங்கள் சாப்பிடும் பழ வகைகளில் திராட்சையும் இருக்கட்டும். திராட்சையில் பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளன.

மேலும் வைட்டமின் K, வைட்டமின் C மற்றும் வைட்டமின் B9 போன்ற சத்துகளும் ஏராளமாக உள்ளன. திராட்சையை எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். எந்த நேரத்தில் உங்களுக்கு பசி எடுத்தாலும் முதல் தேர்வாக திராட்சைக்கு இடம் கொடுங்கள். அவ்வளவு ஆரோக்யமான பழமாகும்.

திராட்சையின் முக்கிய நன்மைகள் :

நோய் எதிர்ப்பு சக்தி

திராட்சையில் நீர்ச்சத்து உள்ளது. இது தவிர விட்டமின் பி, துத்தநாகம், காப்பர், இரும்புச்சத்து போன்றவை உள்ளன. நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த இந்த சத்துகள் உதவியாக இருக்கின்றன.

சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும்

வெப்ப மண்டல பகுதியில் வாழும் நமக்கு சிறுநீரக கல் உருவாகும் சாத்தியம் அதிகம். ஆனால், திராட்சைப் பழங்களை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கல் உருவாவது தடுக்கப்படும். பொதுவாக வெப்ப மண்டலத்தில் வசிப்பவர்கள் தண்ணீர் போதுமான அளவு குடிக்காவிட்டால் சிறுநீரக கற்கள் உருவாகின்றன. ஆனால், அடிக்கடி திராட்சை சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் வராது.

எடையை குறைக்கும்

உடல் எடை கூடிவிட்டதே என்று கவலைப்படுபவர்கள் திராட்சைப் பழத்தை சாப்பிடலாம். ஏனென்றல் இதில் கலோரிகள் மிகக் குறைவு. ஆனால், ஊட்டச்சத்துக்கள் அதிகம். திராட்சையை உண்பதால் ஒரு முழுமையான உணவு உட்கொண்ட திருத்தி ஏற்படும். அதனால் குறைவான உணவு மட்டுமே ஈடுபடும். இதன் மூலமாக உடல் எடையைக் குறைக்க முடியும்.

கோடை தாகத்துக்கு

வெயில் காலங்களில் எவ்வளவு தான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அத்தகைய சூழலில் இனிப்பும், நீர்ச்சத்தும் கொண்ட திராட்சை பழங்களை சாப்பிட்டால் தாகம் கட்டுக்குள் வரும். தற்போதைய ரெடிமேட் பானங்களை தவிர்த்து ஆரோக்யமான திராட்சையை உட்கொள்வது ஆரோக்யம் மேம்படுவதுடன், நமது தாகமும் அடங்கும்.

சரும பாதுகாப்பு

வெயில் உச்சமாக வீசும்போது சருமம் பாதிக்கப்படுமே என்று கவலை கொள்பவர்கள் அதிகம். அதிலும் குறிப்பாக பெண்கள் வெயிலில் முகம் கருத்துப் போகுமே என்று கவலை கொள்வார்கள். ஆனால், தொடர்ந்து திராட்சைப்பழம் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள வைட்டமின் "சி" சத்து நமது சருமத்திற்கு பாதுகாப்புத் தரும்.

பசி அடங்கும்

நீண்ட தூரம் பயணம் போகும்போது தவிர்க்க முடியாமல் சரியான நேரத்துக்கு சாப்பிட முடியாமல் போகலாம். அந்த நேரங்களில் திராட்சை மிக பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் திராட்சை பசியைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து நீண்ட நேரம் பசி எடுக்காமல் கட்டுக்குள் வைத்திருக்கும் சக்தி கொண்டது. அதனால்தான் உடல் எடையை குறைக்க விரும்புபவர் திராட்சை சாப்பிடலாம்.

புற்று நோயைத் தடுக்கும்

இன்றைய வாழ்வியல் முறைகளால் புற்றுநோய் பாதிப்பு என்பது சாதரணமாக நிறைய பேருக்கு வந்துவிடுகிறது. திராட்சையில் உள்ள லிமோனேன் என்ற சத்து புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் கொண்டது. அதனால், திராட்சையை கட்டாயம் நீங்கள் தினசரி எடுத்துக் கொள்ளலாம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News