சாமி கொடுத்த வரம் பெண் குழந்தை..! பூமிக்கு வந்த புத்தொளி..!

Girl Baby Kavithai in Tamil-என் கைகளுக்குள் வந்தநொடியில் தந்தை என்கிற புது உணர்வு என்னை நெகிழ்ச்சி கொள்ளச்செய்தது. எத்தனை துன்பம் வந்தாலும் அத்தனையையும் உடைத்தெறியும் நம்பிக்கை துளிர்விட்டது.;

Update: 2022-09-26 07:15 GMT

Girl Baby Kavithai in Tamil

Girl Baby Kavithai in Tamil-ஆண்டு தோறும் இந்தியாவில் 2009 ஆண்டு முதல் ஜனவரி 24ம் தேதி அன்று தேசிய பெண் குழந்தை நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பெண் குழதைகள் தினம் கொண்டாடுவதன் மூலம் பாலின சமநிலை, சமவேலைக்கு சமஊதியம் போன்ற கருத்துக்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இது பெரிதும் உதவும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திமோடி தான் தத்தெடுத்த ஜெயபூர் கிராமத்தில் நாட்டு மக்களுக்கு சொன்ன வேண்டுகோள் "பெண் குழந்தை பிறந்த நாளை எல்லோரும் கொண்டாடுகிறோம். நமது மகள்களின் பிறப்பையும் நாம் சமமான பெருமிதத்துடன் கொண்டாடுவோம். உங்கள் பெண்குழந்தை பிறந்தநாள் விழாவை கொண்டாடும் நேரத்தில் அந்த பெண்குழந்தைக்காக 5 மரக்கன்றுகளை நடுங்கள்" என்றார்.

குழந்தை என்பது , புது மொட்டு. அழகிய பட்டாம் பூச்சி..புதிதாய் பிறந்த தொப்புள்கொடி பந்தம்.தந்தை,தாய் என்ற பட்டம் தந்த பல்கலைக்கழகம். உறவின் புது அனுபவம். தந்தைக்கு கிடைத்த தேவதை. தந்தை கொண்டாடும் குலசாமி. பெண்குழந்தை என்றால் தந்தைக்கு தனது தாய் இன்னொரு முறை பிறந்துவிட்ட மகிழ்ச்சியடைவார்.

  • பூமிக்கு வந்த புதிய தேவதை..உயிருள்ள பொம்மை..தந்தையான என்னை உயிர்ப்பித்த உயிர்..!
  • இறைவனின் இரண்டு பொம்மைகளால் உருவாக்கப்பட்ட புதிய பொம்மை நீ..!
  • 'அப்பா' என்று எப்போது அழைப்பாய் என்று எதிர்காலத்தை நிகழ்காலத்துக்கு இழுத்துவைக்க எண்ணம் .எழுகிறது,இயலாது என்று அறிந்தும்..
  • உன்னைக் கொஞ்சுகிறேன் என்று உன் அம்மா என்மீது கோபத்தில் இருக்கிறாள்..
  •  'நீயே ஒரு கவிதை..உனக்கொரு கவிதைவேண்டுமா?'..என்று பேசிக்கொள்கின்றன...எழுத்துகள்..
  • கடவுளை நான் நேரில் கண்டதில்லை.. குழந்தையும் தெய்வமும் ஒன்று என்றுள்ளனரே..என் தெய்வம் என் வீட்டில்.
  • குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பது நூற்றுக்கு நூறு சரி என்பேன்.. தெய்வமும் கோவிலின் கருவறையில்..என் குழந்தையும்..தாயின் கருவறையில்..
  • தத்தி நடக்கும்போது வாத்துக்குஞ்சு போல ஒரு முறையும்..மான் குட்டி போல ஒருமுறையும்..முயலின் உருவாய் ஒருமுறையும் மாறி மாறி தெரிகிறாய்..
  • எத்தனை துன்பங்கள் வெளியே சூழ்ந்தபோதும்..உன்னைப்பார்த்த ஒரு நொடியில் அத்தனையும் விடைபெற்றுக்கொள்கின்றன..
  • அர்த்தம் புரியா மொழி பேசி, தத்தித் தத்தி நடந்து, சிரிப்பால் அன்பைப் பொழிந்து, தாலாட்டில் தான் மயங்கி, பிடிவாத குணம் கொண்டு, குறும்பு பல செய்தாலும்,நீ எங்கள் செல்லம்..!
  • உன் புன்னகையைப் போல் போதையை, கண்டதில்லை இவ் உலகில்..
  • இறைவன் மனிதனுக்கு கொடுத்த ரசனைமிகு வரம், குழந்தைகள்..
  • வேதனைத்தாங்கிய பெற்றோர் உள்ளங்களுக்கு விலைமதிப்பில்லா மனநல மருத்துவர்கள் - மழலைகள்
  • உன் ஒவ்வொரு தத்தை நடையிலும் தட்டுத்தடுமாறுவது என் நெஞ்சமும் தான்...
  • தினந்தோறும் உதிக்கும் சூரியன் கூட தோற்றுப்போகும், உந்தன் கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பின் முன்னால்..
  • எதையோ இழந்தோம் என்று வாழ்ந்திருந்த நமக்கு, இன்று "எதையும் இழக்க தயார் உனக்காக" என்று உணர வைத்தது நம் குழந்தை..
  • கள்ளம் கபடம் இல்லாத உன் சிரிப்பில், என்னை உன் மனச் சிறையில் அடைத்துவிட்ட கள்ளி நீ..
  • உனது மழலை அழகின் முன்னே தலைகுனிந்து நின்றது, இயற்கையின் அழகு..
  • கடவுள் அறியா மொழி, மழலையின் அழுகை..
  • கொஞ்சி கொஞ்சி நீ பேசகையில், கொஞ்சம் குழம்பித்தான் போகிறது என் நெஞ்சம்! உன் தத்தை மொழியில் தமிழின் அழகு கூடிடுதே..
  • காலையில் உனது புன்னகை மனதிற்கு மகிழ்ச்சி தரும் டானிக் ..
  • அறிவாய் ஆறுதல் கூற முடியாத போதும், அழகால் கவலைகளை மறக்கச் செய்பவர்கள் தான் மழலைகள்..
  • உன் குறும்புச் சிரிப்பு, குதூகலப் பார்வை, மழலை மொழி பேசும் மரகதக் கண்கள் - அவை
  • மூடி விரியும் முல்லை மலர்கள் உன் கொவ்வை இதழ்கள் அதி தேன் வடியும் எச்சில் சாறுகள் ஆகா... எத்தனை அழகு..?! ஆயுள் ஒன்று போதவில்லையே உன் அழகை ரசிப்பதற்கு..... எத்தனைப்பிறவி எடுத்தாலும் உன் மீதான ரசனை தீராதே..!
  • உன் பிஞ்சு கால்கள் நோகாமல் என் நெஞ்சிலே தடம் பதித்து கொஞ்சி நடை பழகு..உன் எச்சி தோய்ந்த
  • அஞ்சு விரல்களால் என் நெஞ்சிலே அகரம் எழுது.. உன் தீராத குறும்பால் எனை தினம் தினம் தொல்லைப்படுத்து என் ஆறாத காயங்களும் அதனால் ஆறிப் போகும்..
  • உன் குறும்புச் சிரிப்பு குதூகலப் பார்வை மழலை மொழி பேசும் மரகதக் கண்கள் - அவை மூடி விரியும் முல்லை மலர்கள் உன் கொவ்வை இதழ்கள் மரகத முத்துக்கள்..
  • என் வீட்டு மகாலக்ஷ்மி, எனக்குப்பிறந்த பெண் குழந்தை..
  • பூக்களின் அழகுக்கு எதிரி, நிலவுக்கு சொந்தக்காரி நிறத்திலே, குறும்புதனத்தின் தங்கை குணத்திலே, வாய் ஜால கில்லாடி பேச்சிலே, பாசமிகு தேவதை எங்கள் இதயத்திலே...                                                                                                                                                                                                                                                                                                                                           


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News