நண்பருக்கு வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்து கூறணுமா..?

Comedy Birthday Wishes in Tamil-நண்பர்கள் என்றால் மகிழ்ச்சிக்கும் கொண்டாட்டங்களுக்கு பஞ்சம் இருக்காது. பிறந்த நாளை விநோதமாக்கும் வாழ்த்துகள்.

Update: 2023-06-04 06:17 GMT

Comedy Birthday Wishes in Tamil

Comedy Birthday Wishes in Tamil

பிறந்தநாள் என்பது அனைவருக்கும் குதூகலமான கொண்டாட்டம். அதுவும் இளைஞர்கள் என்றால் நண்பர்கள், நண்பிகள் என இப்போதெல்லாம் பெரிய கொண்டாட்டமாக ஆக்கிவிடுகிறார்கள். பள்ளி அல்லது கல்லூரியின் வகுப்பறைகளிலேயே அதை கொண்டாடுகிறார்கள்.


அதுவும் நண்பர்கள் என்றால் கேலிக்கும் கிண்டலுக்கும் பஞ்சம் இருக்காது. அப்படி கேலியும் கிண்டலுமாக வாழ்த்துக் கூறினால் எப்படிக் கூறலாம் என்று இங்கு ஒரு ஜாலியான பிறந்தநாள் வாழ்த்துக்கள் தரப்பட்டுள்ளன. நீங்களும் இதை உங்கள் நண்பர்களுக்கு வாழ்த்தாக கூறுங்கள். இதோ உங்களுக்கான வாழ்த்துகள்.

நண்பரே.. உங்களுக்கு வயதாகி, நமது நண்பர்கள் எல்லோரும் உங்களை ஒரு மரத்துண்டு என்று தவறாக நினைக்கட்டும். அவ்வளவு காலம் நீண்டு வாழ எனது பிறந்தநாள் வாழ்த்துகள், எனது சிறந்த நண்பரே..!

என் அன்பு நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நண்பரே உன்னைப்போல எனக்கு ஒரு தொந்தரவான நண்பர் வேறு எவரும் இல்லை. ஆனாலும் நீ இல்லாமல் என் வாழ்க்கை சுவாரஸ்யத்தை இழக்கிறது. தொந்தரவு செய்வதற்கு நீ வேண்டும். வாழ்த்துகிறேன் என் தொந்தரவு நண்பா..!.

பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பரே, அடுத்த ஆண்டு பிறந்த நாளுக்கு இன்னும் ஒருமாதம் இருக்கும்போதுதான் உனக்கு கடந்த பிறந்தநாள் வாழ்த்து கூறுகிறேன். இதை தாமதமான பிறந்தநாள் வாழ்த்தாக எண்ணிவிடாதே நண்பா..! . அடுத்த வருடத்திற்கான எனது முதல் வாழ்த்தாக கருது. இதோ எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ..!

உனக்கு வயதாகும்போது நீ மிகவும் அழகாக இருப்பாய் என்ற உணர்வு எனக்கு இருக்கிறது. எனவே, இளமையாக இருக்கும்போது நீ இப்படி இருக்கிறோம் என்று வருத்தப்பட வேண்டாம். எனது பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பா..!

நீ மிகவும் வயதானவராக ஆகும் வரை வாழவேண்டும். உன்னைப் பார்த்த மாத்திரமே இளம் குழந்தைகளும் உனது முன்னாள் காதலர்களும் பயந்து ஓடவேண்டும். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..நண்பா..!

உனக்கு இன்று வாழ்த்து கூறும்போது இந்த உனது பிறப்பு நாளில் எனக்கு எவ்வித செலவும் ஏற்படாத ஒரு அமைதியான நாளை எதிர்பார்க்கிறேன். அதனால் கேக் இருக்கும். ஆனால் இருக்காது. கேண்டில் எரியும். ஆனால் எரியாது. இப்படி இருக்கும் இருக்காது என்பது போல் உனக்கும் நான் பிறந்த நாள் வாழ்த்து கூறுகிறேன்.

உனது பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என்று பெரிய கறபனையோடு ஒரு பெரிய லிஸ்ட் தயார் செய்து வி நண்பா..! நானும் அதை கற்பனையிலேயே சாத்தியப்படுத்துகிறேன். பிறந்தநாள் வாழ்த்துகள், நண்பா..!

உனது பிறந்தநாளில் நான் இரண்டு குறிப்புகளைத் தர விரும்புகிறேன். 1. கடந்த காலத்தை மறந்து விடு. ஏனெனில் அதை நீ மாற்ற முடியாது. 2. நிகழ்காலத்தை மறந்துவிடு. ஏனெனில் நான் உனக்கு வாழ்த்தைத் தவிர வேறு எதையும் தரப்போவதில்லை.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News