மூழ்காத ஷிப்.. பிரெண்ட்ஷிப்..! நட்பின் அடையாளம் எதுங்க..? வாங்க பார்க்கலாம்..!
Friends Fight Quotes in Tamil-வருமானம் இல்லாத நாட்களில் கவலைகள் மறந்து சிரிக்கமுடிந்தது என்றால் அது நட்பால் மட்டுமே சாத்தியமானது.;
Friends Fight Quotes in Tamil-நாம் காதலில் வெற்றி பெறுவதற்கும், தோல்வியடைந்தால் தோள் கொடுப்பதற்கும் தயாராக இருப்பவனே நண்பன். நல்ல நண்பர்கள் கிடைப்பது அரிது. வாழ்க்கை முழுவதும் நண்பர்களாய் தொடர்வது அதனிலும் அரிது. நட்பு எதிர்பார்ப்புகள் அற்றது. நாம் அழுதால் அழுகும், நாம் சிரித்தால் சிரிக்கும். அப்படியான நட்பின் உன்னதத்தை விளக்கும் மேற்கோள்கள்.
- ஒரு விசுவாசமான நண்பன் பத்தாயிரம் உறவினர்களுக்கு சமம்.
- நட்பு என்பது நீங்கள் யாரை நீண்ட காலமாக அறிந்திருக்கிறீர்கள் என்பதைப் பற்றியது அல்ல. அது உங்கள் வாழ்க்கையில் நுழைந்து, "நான் உங்களுக்காக இங்கே இருக்கிறேன்" என்று கூறி, அதை நிரூபிப்பது பற்றியது.
- நீ நூறு வருடம் வாழ விரும்பினால், நான் நூறு வருடத்தில் ஒரு நாள் குறைவாக வாழ விரும்புகிறேன். அப்போது தான், நீ இல்லாத ஒரு நாள் கூட என் வாழ்வில் இருக்காது.
- உலகில் உள்ள அனைவரும் உன்னை விட்டு விலகும் போதும், உன்னுடன் இருப்பவனே உண்மையான நண்பன்.
- உங்களை நீங்களே உயர்த்திக் கொள்ள உங்களை கட்டாயப்படுத்தும் நண்பர்களை உருவாக்குங்கள்.
- நட்பு ஆரம்பிக்கும் இடம்.. ஒருவர் இன்னொருவரிடம், 'என்ன, நீங்களுமா? நான் மட்டும் தான் இப்படி என்று நினைத்தேன், எனும்போது தொடங்குகிறது..
- இருண்ட இடங்களில் உங்களைத் தேடி வந்து உங்களை வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்லும் அரிய மனிதர்களே உண்மையான நண்பர்கள்.
- ஒரு உண்மையான நண்பன் என்பவன், ஒரு மனம் எனும் தோட்டத்தில் உள்ள உடைந்த வேலியை மட்டும் பார்க்காமல், அதனுள் உள்ள அழகான பூக்களை ரசிப்பவன்.
- வறுமையில் வெறுமையாய் தவிக்கும்போது நான் இருக்கிறேன் என்று கைகொடுப்பவனே உண்மையான நண்பன்..
- லாபம் பார்த்து பழகும் நட்பை புரிந்துகொள்ளும் திறன் உனக்குள் வேண்டும்..!
- நல்ல நண்பன் 100 புத்தகங்களுக்குச் சமம்.
- ஒரு காலத்தில் சந்தோச பறவைகளும் நட்பு பறவைகளும் குடியிருந்த நினைவு கூடு பள்ளிக்கூடம்..!
- கர்ணனைப் போல நண்பனை தேர்ந்தெடு, ஆண்டவனே எதிர்த்தாலும் உனக்காக உயிரையே தருவான்.
- பழகும் முன் தனிமை..! பழகிய பின் இனிமை..! பிரிவு என்பதோ கொடுமை..! பிரிந்தபின் தான் தெரியும் நட்பின் அருமை..!
- புன்னகை என்ற முகவரி உங்களிடம் இருந்தால் நண்பர்கள் என்ற கடிதம் உங்களுக்கு வந்து கொண்டே இருக்கும்.
- எதிர்பார்ப்புகளே இல்லாமல் இணைந்திருக்கும் ஒரு உறவு நட்பு.
- நட்பு என்பது மூன்றே எழுத்தில் முடிவதல்ல.. நம் வாழ்க்கை முடியும் வரை.
- நம்மை பற்றி நமக்கே தெரியாத ரகசியங்களை அது நல்லதோ கெட்டதோ நமக்கே வெளிச்சம் போட்டு காட்டும் சிறந்த கருவி தான் நட்பு..!
- பிரிந்து விட்டால் இறந்து விடுவோம் இது காதல்..! இறந்து விட்டால் மட்டுமே பிரிந்து விடுவோம், இது தான் நட்பு..!
- உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டு கொடு.. ஆனால் எதற்காகவும் உன் நண்பனை விட்டு கொடுக்காதே.
- பால்ய பருவம். பள்ளிப் பருவம், இளமை பருவம், முதுமைப் பருவம் எல்லாவற்றிலும் பயணித்த நல்ல நண்பன் நீ..!
- நட்புக்கு வயது அவசியம் இல்லை..! பிறப்பு முதல் இறப்பு வரை தொடரும் உன்னதமான உறவே நட்பு..!
- நட்பு என்பது குழந்தைபோல இன்பத்திலும் துன்பத்திலும் நம்மை விட்டு பிரியாமல் புன்னகையோடு இருக்கும்.
- தினம் ஒருமுறை தோல்வியடைய விரும்புகிறேன். என் தோழன் என் தோளில் தட்டி ஆறுதல் சொல்வதை எதிர்பார்த்து.
- வேரூன்றி நிற்கும் பெரிய மரத்தை போல நம் நட்பின் ஆழம் இன்னும் சென்று கொண்டே இருக்க வேண்டும்.
- ஆயிரம் சொந்தம் நம்மை தேடி வரும். ஆனால் தேடினாலும் கிடைக்காத ஒரே சொந்தம் நண்பர்கள்..!
- தொலைதூரம் சென்று மறைந்தாலும், மனதைத் தொட்டது என்றும் மறைவதில்லை பள்ளி நாட்களில் அரட்டை அடித்ததை.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2