மீண்டும் பள்ளிக்கு போவோமா..? தொலைத்த நட்பினை தொடர்வோமா..? நட்புக்கவிதை..!

அறியாத வயதில் அழியாத கோலமாக மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கும் நட்பு, மறக்கமுடியா நினைவலைகளாக, நீடித்துக் கிடக்கிறது, நிழற்படங்கள்போல.;

Update: 2023-08-22 07:48 GMT

friendship kavithai in tamil-பள்ளி நட்பு (கோப்பு படம்)

Friendship kavithai in tamil

எத்தனை உறவுகள் வந்தாலும் வாழ்க்கையில் இன்பம் ஒன்றே சுமந்து இருக்கும் ஒரே உறவு நட்பு. அந்த நட்பு காலங்கள் கடந்தும் நிலைத்து இருக்கும். எதிர்பார்ப்புகள் இல்லாத ஒரு உறவு. கற்ற காலங்களில் உற்ற உறவுகளாக துள்ளித்திரிந்த அந்த காலம் வாழ்நாள் முழுவதும் ஒரு வரலாற்றுத்தடமாக நீடித்து நிலைத்திருக்கும். எங்கிருந்தாலும் வாழ்க என்று காதலியை வாழ்த்திய காதலன் போல, அருகில் இல்லாதபோதும் தூரத்தில் இருந்து மன ஆறுதல் அளிக்கும் மென்மையான உறவு நட்பு.


அந்த உன்னத நட்பு குறித்த கவிதைகளைப்  பார்ப்போம் வாங்க. 

தோள் கொடுக்க தோழன் ஒருவன், தோள் சாய தோழி ஒருவள் இருந்தால் அவர்கள் கூட தாய் தந்தைக்கு சமமானவர்கள்தான்..!

உப்பு இருந்தால் உணவு சுவையாக இருக்கும்..!

நட்பு இருந்தால் வாழ்க்கை முழுதும் இனிக்கும்..!


சோகமான நேரங்கள் கூட மாயமாக மறைந்திருக்கும்

வலிகள் கூட வழிதெரியாமல் போய்ச் சேர்ந்திருக்கும், நண்பர்கள் உடன் இருந்தால்..!

நல்ல நண்பனிடம் உரிமையோடு எவ்வளவு கோபத்தையும் காட்டலாம்.வருத்தம் வாராது. ஆனால், சிறு சந்தேகம் பட்டால் கூட தாங்கமாட்டான்..!

Friendship kavithai in tamil

யாரிடத்தில் நாம் நாமாக இயல்போடு இருக்க முடிகிறதோ அவர்கள்தான் உண்மையான நண்பர்கள்..!

ஒவ்வொரு மனிதனுக்கும் கடவுள் துணை இருக்கிறார், நண்பன் எனும் பெயர் சொல்லி..!

நட்பின் வலிமை எப்போது தெரியும் எனில் வாழ்நாள் முழுவதும் அருகில் இல்லை என்றாலும்

எங்கோ இருந்து இறுதிவரை நினைவில் வைத்து காட்டும் ஒற்றை அன்பு..!

நல்ல நண்பன் உள்ள எவரும் வாழ்க்கையில் தோற்றுப்போக மாட்டார்..!


வரும் ஒரு துளி கண்ணீரைத் துடைத்து விடுவது நட்பு இல்லை

மறு துளி வராமல் தடுப்பதே உண்மை நட்பு..!


Friendship kavithai in tamil

மனம் இருந்தால் வருவேன் என்றது காதல்,

பணம் இருந்தால் வருவேன் என்றது சொந்தம்,

எதுவும் வேண்டாம் இதோ நான் இருக்கிறேன் என்று வந்து நின்றது நட்பு..!

நீண்டதூரம் சென்றிருந்தாலும் மனதை விட்டு என்றும் மறைந்ததில்லை..!

பள்ளி நாட்களில் காக்கா 'கடி' கடித்துத் தின்ற புளிப்பு மிட்டாய் நினைவுகள்..!

சேரும் போது அழுது ஆர்ப்பாட்டம் செய்த அதேபள்ளி…

பிரியும் போதும் அழுது கண்ணீரை நிறைக்கிறது, நட்பாக..!

பள்ளி முடிந்து நண்பர்களுடன் காலாற வீட்டுக்குச் சென்ற மகிழ்ச்சி

இப்போது கார்களில் செல்லும்போதும் காணவில்லை..!


Friendship kavithai in tamil

ஒரு காலத்தில் சந்தோசங்களை சுமந்து,

நட்பு பறவைகள் கூடுகட்டி குடியிருந்த வீடு, பள்ளிக்கூடம்..!

நட்புடன் பழகிய நாட்கள் தொலைவதால் பள்ளிக்கு விடுமுறை வேண்டாம் என்று தவித்த அன்றைய மனம் இன்று செல்போனுக்குள் தொலைந்து கிடக்கிறது..!

கல்விச்சுமை மனதை தேய்பிறையாய் வருத்தியபோதும் கூட

இதயச்சுமையால் வளர்பிறை ஆனது உள்ளத்து நட்பால்..!

நாம் ஓடித்திரிந்த விளையாட்டு மைதானம், ஆச்சிரியர் வராத பாடவேளையில் அமர்ந்து அடித்த அரட்டை, மை தீர்ந்தபோதெல்லாம் சொட்டு மைவிட்டு எழுதிய காலமெல்லாம் மனப் புத்தகத்தில் பதிவாகிக் கிடக்கிறது..! 

Ffriendship kavithai in tamil

நட்பு என்பது நமக்குள் வாழும் குழந்தை-அது

துன்பமோ இன்பமோ எதுவும் அறியாமல் புன்னகைத்தே கிடக்கிறது இதழ் விரித்து..!

காலம் நீண்டுவிட்டால் கெட்டுப்போவதற்கு இது உணவுப்பொருள் இல்லை..காலத்தால் கூட அழிக்கமுடியாத கற்கோட்டை, நட்பு..!

ஆயிரம் காரணங்களை அடுக்குமொழியில் சொல்லிவிட்டு பிரிந்து போக இது ஒன்றும் காதல் இல்லை..!

ஆயிரம் காரணங்களை அடுக்கி உயிர் உள்ளவரை தொடரும் உண்மை நட்பு..!

தங்கத்தை திடமாக்க சேர்க்கும் அரக்கு போல, உறவுக்கு திடம்சேர்த்து ஒளிரச் செய்யும் நட்பு..! 


Friendship kavithai in tamil

ஒன்றும் இல்லை என்றாலும் குதித்து மகிழ்வோம்..! எதுவும் கிடைத்தால் பகிர்ந்து உண்டு பரவசம் அடைவோம்..! பிறப்பு முதல் இறப்பு வரை தொடரும் உன்னத உறவே நட்பு..!

நம்மைப் பற்றி நமக்கே தெரியாத திறமைகளை

நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி அதில் சாதிக்க வைத்து மகிழும் காட்டும் சிறந்த தற்காப்புக் கருவிதான் நட்பு..!

 தவறு செய்யும் நண்பர்களை வெறுத்து ஒதுக்காமல் மன்னித்து மற...! ஏனெனில், அவர்கள் உன் உறவுகள் அல்ல, உன் உணர்வுகள்.

தவறுகளை கண்டுகொள்ளாமல் இருந்தால் அவன் உன் உண்மை நண்பனல்ல..! உன் தவறுகளை உனக்குச் சுட்டிக்காட்டி திருத்த முயல்பவனே உண்மையான நண்பன்..!


Friendship kavithai in tamil

எதிர்பார்ப்புகளே இல்லாமல் இணைந்திருக்கும் ஒரு உறவு நட்பு..! கண்ணுக்குத் தெரியாத அலைக்கற்றை போல நட்பின் இணைப்பை உருவாக்கும் உள்ளத்து வரவு..!

செல்வம் சேரும்போது உன்னை பிரிய முனைந்தால், அவனில் இருந்து உன்னை விலக்கிக்கொள்..!

உண்மையான நட்பை இழந்து ஒருநாள் உன்னைத்  தேடிவர வேண்டும்..! 

Tags:    

Similar News