Fight Quotes in Tamil-ஊடல் இல்லாமல் காதலா..?
வாயில் வடைசுடும் மன்னர்கள் போல இங்கு காதலில் வார்த்தைகளை பிசைந்து மாவாக்கி காதலியோடு வடை சுடுங்கள். சண்டை வரட்டும். பின்னர் சமாதானம் ஆகுங்கள்.;
Fight Quotes in Tamil
காதலில் சண்டை என்பது பாசத்தின் அல்லது அன்பின் அதீத வெளிப்பாடு. கணவன் மனைவிக்குள் சண்டை என்பது சிறு ஊடல். ஊடல் இறுக்கமான பிணைப்பை ஏற்படுத்தும். ஊடலுக்குப்பின்னே கூடுவது அன்பின் ஆழத்தை அதிகப்படுத்தும். ஆதலினால் காதல் செய்வீர் என்பதுபோல, ஆதலினால் சண்டை போடுவீர் என்று கூட சொல்லலாம்.
Fight Quotes in Tamil
இங்கு கத்தி இல்லை, இரத்தம் இல்லை. சும்மா.. வாயில் வடை சுடுவதுபோல வார்த்தைகளால் காயமின்றி இடிப்பது. பின்னர் அந்த இடிக்கு மருந்து போடுவது. இது காதல் வாழ்க்கையில் ஒரு எல்லையில்லா மகிழ்ச்சிக்கு வித்திடும்.
இதோ சண்டைக்கான மேற்கொள்கள்
என்னை தவறாக புரிந்தபின்,
என்னிடம் நற்செயலை எதிர்பார்க்காதே
அது உன் கண்களுக்கு கிடைக்காது
தவறான புரிதலுக்கு
சரியான பதில் மௌனம்
பேசுவது ஒரு திறமை
பேசாமல் இருப்பது
பெரிய திறமை
Fight Quotes in Tamil
எனக்குத் தெரியாது என்பது
உலகின் மிகச் சிறந்த தற்காப்புக் கலை
செருப்பாய் பிறருக்காக உழைப்பவன்
நிச்சயமாக ஒருநாள் கழட்டி விடப்படுவான்
திமிரும் பிடிவாதமும்
நேர்மை என்கிற நதியின்
இரு கரைகள்
மாற்றங்களை மாற்ற முடியும்
ஆனால் மாற்றியவர்களை
மாற்ற முடியாது
நீ யாரென்று உனக்கே
புரிய வைக்கும் ஆயுதம்
தான் அவமானம்
வலியும் வேதனையும்
சொன்னால் புரியாது
பட்டவனுக்குத்தான் தெரியும்
Fight Quotes in Tamil
நம்பி கெட்டதுல
நானும் ஒருத்தன்
நான் மாறிட்டேனு
சொல்றத விட
நிறைய விஷயம் என்ன
மாத்திடுச்சினு சொல்றது
தான் நிஜம்
பேசாமா போயிடு
என்ற சொல்லுக்கு
அவள் அகராதியில்
எங்க நீ போய் தான் பாரேன்
என்று பொருள்
யாருக்கும் விட்டு
கொடுக்கவும் மாட்டேன்
யாருக்காகவும் விட்டு
போகவும் மாட்டேன்
Fight Quotes in Tamil
எப்பொழுது ஒருவர் மீது
அதிகமாக கோபம் கொள்கிறாயோ
அப்பொழுதே புரிந்துகொள்
நீ அவர்கள் மீது
உயிராய் இருக்கிறாய் என்று
அதிக கோபம் கொண்டதும், அதை விட
அதிக பாசம் கொண்டதும்
உன்னிடம் மட்டுமே
உன்னோடு பேச முடியாத போது தான் உன் மீது
உள்ள அன்பு இன்னும் அதிகரிக்கிறது
நீ சொல்லி நானும்..
நான் சொல்லி நீயும்..
கேட்காத ஒன்று
நீ எனக்காக அழுவதும்
நான் உனக்காக
அழுவதும் தான்..!
Fight Quotes in Tamil
பிடித்தவர்களுடன் சண்டை
போடுவது அவர்களை
பிரிய வேண்டும்
என்பதற்காக அல்ல..
பிரியவே கூடாது
என்பதற்காக..!
அன்பிருந்தா சண்டை
வரத்தான் செய்யும்..
நம்பிக்கை இருந்தா
அதுக்கு மேல
செம சண்டை வரும்..
ஒண்ணுமே இல்லனா
கம்முனு கிடக்கும் மனசு..
இதை புரிந்தால் தான்
உன் காதல் நிலைக்கும்..!
ஆயிரம் சண்டைகள்
உன்னோடு நான்
போட்டாலும்..
நீ இல்லாமல்
என் வாழ்க்கை இல்லை
என்பதே உண்மை..!
Fight Quotes in Tamil
உன் மீது அதிக அன்பு
இருப்பதால் தான்..
நீ செய்யும் சிறு தவறு கூட
என்னை பெரிய அளவில்
பாதித்து விடுகிறது..
கோபம் தான் உனக்கு
தெரியுது.. பாசம்
புரியவில்லை..!
எங்கே அன்பு அதிகம்
இருக்கிறதோ.. அங்கே
சண்டைகள் அதிகம் வரும்..
எங்கே சண்டை அதிகம்
வருகிறதோ.. அங்கே
சமாதானமும் அதிகம் இருக்கும்..
சண்டை இடுவது விலக அல்ல..
விலகி விடுவோமோ என்ற
பயத்தினால் தான்..!