Female Meaning in Tamil-பெண் என்பவள் சக்தியின் வடிவம்..!
பெண்மை என்பது வெறும் உயிரின அடிப்படை மட்டுமல்ல. பெண்மை தாய்மையின் வடிவம். அன்பின் ஊற்று. சாதனையின் அடையாளம்.
Female Meaning in Tamil
பெண்மையின் அடையாளங்கள்
சமூகத்தினால் பெண்களுக்காக என வரையறுக்கப்பட்டுள்ள பண்புகள், நடத்தைகள், மற்றும் கடமைகள் போன்றனவையே பெண்மை என வரையறுக்கப்படுகின்றன.
Female Meaning in Tamil
அதாவது பெண்களுக்காக கலாச்சார ரீதியாக வழங்கப்படுகின்ற பண்புகளே பெண்மை என்ற சொல்லைக் கொண்டு அடையாளப்படுத்தப்படுகின்றது.
மேலும் பெண்மையின் அடையாளங்களாக உடல் அமைப்பு மற்றும் ஆடை அணிகலங்களும் காணப்படுகின்றன.
Female Meaning in Tamil
அத்தோடு நடை, உடை, பாவனை அங்க அசைவுகள், முகத்தோற்றம் போன்ற அனைத்தும் இந்த பெண்மையை வெளிப்படுத்தும் அம்சங்களாகவே பெண்களுக்கு காணப்படுகின்றன என்பதே குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
பெண்மையின் உணர்ச்சி வெளிப்பாடுகள்
பெண்களின் உணர்வுகள் ஒழுக்கம், கௌரவம், புனிதம் எனும் பெயரில் அடையாளப்படுத்தப்படுகின்றன.
மனம் என்பது மானிடர்களுக்கு பொதுவான ஒன்றாக காணப்பட்டாலும் ஆண்களினால் பெண்களின் மனமானது அடக்கி ஆளப்படுகின்றது. அதாவது ஒரு பெண் ஆணாதிக்கத்திற்கு அடி பணிந்து வாழும் நிலையே தற்கால சமூகத்திலும் நிலவுகின்றது.
Female Meaning in Tamil
இதனால் தனக்கான விருப்பு வெறுப்புகளை மனதுக்குள்ளையே புதைத்த நிலையில் சோகத்துடனும், ஏகத்துடனும் வாழும் நிலைமையினை காணலாம். பெண்கள் தங்களுடைய விருப்பு வெறுப்புகளை சுயமாக தீர்மானித்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகின்றன.
மேலும் பெண்கள் அன்புக்காகவும், அரவணைப்புக்காகவும் ஏங்குபவர்களாக சித்தரிக்கப்படுகின்றார்களே தவிர, அவர்களுடைய சாதனைகள், பதவி, அதிகாரம் என்பன சமூகத்தில் உயர் நிலையில் பேசப்படுவதும் இல்லை என்பதனையும் காணலாம்.
தமிழர் பண்பாட்டில் பெண்மை
பொதுவாகவே தமிழர் பண்பாட்டில் பெண்மை என்பது போற்றப்படும் ஒரு அம்சமாகவே காணப்படுகிறது. அதாவது பெண்களை தெய்வமாக போற்றும் தன்மையினைக் காணலாம்.
Female Meaning in Tamil
உதாரணமாக சரஸ்வதி, பார்வதி லட்சுமி போன்ற பெண் தெய்வங்களினைக் குறிப்பிடலாம்.
தமிழர் பண்பாட்டில் அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்பன பெண்மையின் குணாதிசயங்களாகவே குறிப்பிடப்படுகின்றன.
இன்றும் நதிகளுக்கு கூட காவேரி, யமுனா, சரஸ்வதி என பெண்களின் பெயர்களை சூட்டி அழைப்பதனையும் காண முடிகின்றது.
Female Meaning in Tamil
இவ்வாறாக தமிழர் பண்பாட்டில் பெண்களை போற்றும் குணம் காலப்போக்கில் ஆணாதிக்கத்திற்கு உட்பட்டு பெண்களை அடிமைகளாக பார்க்கும் நிலை ஏற்பட்டது. இதனை எதிர்க்கும் வகையிலேயே பாரதியாரும் பெண்கள் விடுதலை கும்மி, பெண் விடுதலை போன்ற கவிதைகளை எழுதியுள்ளமையும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
பெண்மை சார் பிரச்சினைகள்
தற்காலங்களில் பெண்கள் கல்வி, சுகாதாரம், மருத்துவம், திருமணம் போன்ற அனைத்து அம்சங்களிலும் பிரச்சினைகளை எதிர் கொள்ளக்கூடியவர்களாகவே காணப்படுகின்றனர்.
Female Meaning in Tamil
அதாவது கல்வி, பொருளாதாரம், திருமணம் போன்ற அனைத்திலும் பெண்களுக்கு என ஒரு ஆசை காணப்பட்டாலும், அவை வெறும் கனவுகளாகவே அமைந்து, மற்றவர்களின் வெறுப்புகளுக்கு கட்டுப்படும் நிலையினையே சமூகத்தில் காணலாம்.
இன்று பெண்கள் தனித்து இயங்க முடியாதவர்களாகவும், மிகவும் அதிகமான மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்படுபவர்களாகவுமே காணப்படுகின்றனர்.
Female Meaning in Tamil
இவ்வாறாக பெண்களை விட்டுக் கொடுப்பவர்களாகவும், தியாகிகளாகவும் சித்தரிப்பதற்காக இந்த சமூகம் அவர்களது உரிமைகளையும் சுதந்திரத்தையும் பறித்து விடுகின்றது என்பதைக் காண முடிகின்றது.
தாய்மை, மென்மை, பாசம், கூர் உணர்வு ஆகியன பெண்மையின் தன்மைகளாக கூறப்படுகின்றன .தமிழர் பண்பாட்டில் அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்பவை பெண்மையின் தன்மைகளாகக் குறிப்பிடப்படுகின்றன. இருப்பினும் பெண்மை இருப்பிடத்தையும் சூழமைவையும் பொறுத்து இவை வேறுபடுகின்றன; இவற்றில் பல்வேறு சமூக, பண்பாட்டுக் காரணிகளும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சில பண்பாடுகளில் சில கோட்பாடுகளும் அஃறிணைப் பொருட்களும் பெண்மைத்தன்மை கொண்டவையாகக் கருதப்படுகின்றன. பெண்மைக்கு எதிரானத் தன்மையாக ஆண்மை அமைகிறது.
பெண்ணியம்
பெண்ணியம் (feminism) என்பது பெண்களை தாழ்வுபடுத்தும் சமூக, அரசியல், பொருளாதார நடைமுறைகள், கட்டமைப்புக்கள் மற்றும் சமத்துவமின்மையை எதிர்க்கும் கவனப்படுத்தும் சமூக, கலாசார, அரசியல் இயக்கங்கள், செயற்பாடுகள், கோட்பாடுகளின் தொகுப்பாகும். ஆண் பெண் சமத்துவத்தில் கவனம் செலுத்தும் கோட்பாடாகவும் இது வரையறுக்கப்படுவதுண்டு.
தற்காலப் பெண்ணியவாதிகள் பெண்ணியத்தை இன, சமூக, கலாசார, மத எல்லைகளைக் கடக்கும் அடிப்படை இயக்கமாகக் கருதுகின்றனர். ஒரு வினைத்திறன்மிக்க பெண்ணிய இயக்கமானது வன்புணர்ச்சி, தகாப்புணர்ச்சி, பாலியற் தொழில் போன்ற பொதுப்பிரச்சினைகளையும் குறித்த சமூகங்களுக்குரிய சிறப்புப் பிரச்சினைகளையும் கவனத்திலெடுக்க வேண்டும் என்றும் இவர்கள் வாதிடுகின்றனர்.