Fake Friends Quotes in Tamil Download-போலி, உண்மையின் முகமூடியை அணிந்திருக்கிறது..!

இன்றைய காலத்தில் உறவுகள் அனைத்தும் நிஜமான பாசத்தோடு தான் பழகுகின்றனரா? அல்லது போலியான பாசமா என்பதை காலம்தான் நமக்கு பாடங்களை கற்றுத்தரும்.

Update: 2024-02-06 13:06 GMT

Fake Friends Quotes in Tamil Download

முன்பெல்லாம் உறவுகளில் போலி என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் எல்லாம் உண்மையாகவே இருந்தது. சித்தப்பா, சித்தி, மாமா, அத்தை என உறவுகள் சூழ வாழ்ந்த காலம் அது. ஆனால் தற்போது உணவுப்பொருட்களைப் போன்று உறவுகளிலும் அதிக கலப்படம் ஏற்பட்டுவிட்டது. உறவுகள், நட்புகள், காதல் என எல்லாவிதத்திலும் போலிகளின் தலைதூக்கல் அதிகமாகிவிட்டது.

Fake Friends Quotes in Tamil Download

மற்றவர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் ஓடிச்சென்று உதவி செய்யும் காலத்தினை இழந்துவிட்ட நாம், தற்போது தலைகீழாக மாறி பிரச்னையில் செல்பீ எடுத்து ஒதுங்குகிறோம்.

ஆம், தற்போது யாரும் தானாக வந்து உதவி செய்வதில்லை. காரணம் அதீத வளர்ச்சியின் காரணமாக பணம் சம்பாதிப்பதற்காக ஓடிக் கொண்டிருக்கின்றனர். பணம் மட்டுமே வாழ்க்கையல்ல என்பதை எப்போது உணரப்போகிறார்கள்?

நீ என்ன தான் நல்லது செய்தாலும்

குற்றம் சொல்ல நாலு பேர் இருப்பான்..!

உறவுகளோடு இருக்கும் போது இறைவனின்

பார்வை உன்மீது இருக்கிறது என்று

மகிழ்ச்சியாக இரு. தனியாக நிற்கும் போது

இறைவனே உன்னோடு இருக்கிறான் என்று

நம்பிக்கையோடு இரு.


எந்த சூழ்நிலையலும் எவரையும் நம்பாதிருங்கள்…

இப்போதுள்ள மனிதர்கள் எல்லாம்

எவ்வித குற்றவுணர்ச்சியும் இல்லாமல்

துரோகமிழைக்கக் கற்றுக் கொண்டுள்ளனர்..!

Fake Friends Quotes in Tamil Download

தேவைக்காக பேசுவோரையும் பிடிக்காது

தேவைக்காக பேசவும் தெரியாது.

மிகவும் நம்பிக்கை வைத்த இடத்தில் தான்…

மிகவும் மோசமாக அவமானப்பட்டு

நிராகரிக்கப்பட்டிருப்போம்…!!!

ஒருவரை மன்னித்துவிடும் அளவிற்கு

நல்லவராக இருங்கள்;

ஆனால் அவரை மீண்டும் நம்புமளவிற்கு

முட்டாளாக இருக்காதீர்கள்…

இன்று பழகுவார், நாளை விலகுவர்!‌

உறவு தொடங்கும் முன்பே

பிரிவிற்கும் தயாராகிக்கொள்!

உங்களின் தேவைக்காகவோ

பொழுது போக்கிற்காகவோ பிறரின்

உண்மை அன்பிலும் அவர்களின்

உணர்விலும் விளையாடாதீர்கள்.

போலி உறவுகள் வதந்திகளை நம்புவார்கள்

உண்மையான உறவுகள்

உன்னை மட்டும் நம்புவார்கள்.

Fake Friends Quotes in Tamil Download

பழகிய உறவுகளிடம் வார்த்தைகளை

விடும் முன்.. அவர்களுடன் வாழ்ந்த

சிறந்த நாட்களையும் சற்று எண்ணிப் பாருங்கள்.

விளையாட்டாக எடுத்துக் கொள்ளும்

விடயங்களால் தான் சில உறவுகளை

இழக்க வேண்டி ஏற்படுகின்றது.

திரும்பி பார்க்க வைக்கும் முகம்

எல்லோருக்கும் இருக்கும்.. ஆனால்

திரும்ப நினைக்க வைக்கும் குணம்

ஒரு சில உறவுகளுக்கு மட்டுமே இருக்கும்.

நாம் மற்றவர்களுக்கு செய்வது மற்றோருவர்

மூலமாக நமக்கு வந்து சேரும்.. அது உதவியாக

இருந்தாலும் சரி..! துரோகமாக இருந்தாலும் சரி.

சிலவேளைகளில் நம் கூட இருக்கும் உறவுகள்

விஷமாகவும் அல்லது வேஷமாகவும் இருப்பதை

உணர்த்தி விடுகின்றார்கள்.

Fake Friends Quotes in Tamil Download

பல முகமூடி மனிதர்களால் சில நல்ல மனிதர்களும்

சந்தேக கண்ணோட்டத்துடன்

பார்க்கப்படுகிறார்கள் இன்று…

இந்த உலகத்தில் யாரையும் நம்பாதே…

உன்னிடம் ஒன்று பேசிவிட்டு

வெளியே ஒன்று பேசும் கேவலமான

மனிதர்கள் வாழும் உலகம் இது…!

ஏமாந்து போறத விட பெரிய வலி,

நாம் ஏமாந்துட்டு இருக்கோம்ன்னே

இருக்குறது தான்…!!!

போலியானவர்கள் உங்களைப் பற்றி

உங்களுக்கு முன்னால் நல்லதும்,

உங்களுக்குப் பின்னால் கெட்டதும் பேசுவார்கள்

Fake Friends Quotes in Tamil Download

என்னை பிடித்து பழகியவர்களை விட

என்னை ஒரு பொழுதுபோக்காய்

நினைத்து நடித்து பழகியவர்கள் தான் அதிகம்…

தேவைக்காக பழகும் நண்பர்களை விட பழி

தீர்க்கும் எதிரிகளே மேலானவர்கள்…


நம்மை தேவைக்கு மட்டுமே பயன்படுத்துபவர்களைத் தான்

நாம் தேவையானவர்கள்

என நம்பிக் கொண்டிருக்கிறோம்..

எவ்வளவு தான் பாசம் வைத்தாலும்,

குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு …

நாம் மூன்றாவது மனிதர்கள் தான்..

Fake Friends Quotes in Tamil Download

கழன்றுவிழும் வரை சிலரது முகமூடிகளை

முகம் என்று நம்புகிறோம்..

துரோகத்தின் முதல் விதை அதிகபட்ச

நம்பிக்கையால்தான் தூவப்படுகிறது !!!

போலி நண்பர்கள் நிழல் போன்றவர்கள்

அவர்கள் உங்களை வெயிலில்

பின்தொடர்வார்கள்

ஆனால் இருட்டில் விட்டுவிடுவார்கள்…

காயப்படுவதற்குப் பழகுங்கள்

உங்களுக்காக நிறைய போலி நபர்கள்

காத்திருக்கிறார்கள்.

முகத்திற்கு முகமூடி போடுபவர்களை விட,

அகத்திற்கு முகமூடி போடுபவர்கள் அதிகம் தான்..!

Fake Friends Quotes in Tamil Download

விஷத்தோடு பிறந்த பாம்பின் பிறவி குணத்தை

மாற்ற நினைப்பது முட்டாள்தனம்..

அது போல் தான் சில உறவுகளும்..

வேசம் போடும் உறவுகளுக்கு நடுவில்

உண்மையான பாசம்

தோற்றுத்தான் போகிறது…

மானங்கெட்ட மனசுக்கு தான்

தெரியவில்லை

அது பாசம் அல்ல வேசம் என்று…!!!

நிரந்தரம் இல்லாத உலகம்

சுயநலம் நிறைந்த உலகம்

யாரும் யாருக்காகவும் இல்லை

என்பது மட்டும் இங்கு நிஜம்…

போலியான உறவுகளுடன்

பொய்யான வாழ்க்கை வாழ்வதை விட

தனிமை’ ஒன்றும் கொடுமை அல்ல…!

உண்மை இல்லாத உறவுகளுடன்

ஒட்டி இருப்பதைவிட

ஒதுங்கி இருப்பதே நல்லது

அன்பிற்கு அதிகம் ஆசைப்படாதே….

ஆரம்பத்துல மனதை

அள்ளுவாங்க பின்பு மனதை கொல்லுவாங்க…

Fake Friends Quotes in Tamil Download

முகத்திற்கு முன்னால் பாசமும் …

முதுகிற்கு பின்னால் வேசமும்

போடும் உலகம் இது…!

சுடுகாட்டு பேயை நம்பு சொந்தகார நாயை நம்பாதே

தன் பொது நலத்திற்காக, நம்மை பலர்

சுயநலமாக பயன்படுத்துகிறார்கள்

என்பதை அறிந்து கொள்ள..!

வாழ்க்கை நேர்மையாக

உள்ளவனை அழ வைக்கிறது

நேரத்திற்கு ஏற்ப மாற்றி

பேசுபவனை வாழ வைக்கிறது…

போலியானவர்கள் மேகங்கள்

போன்றவர்கள்,

அவர்கள் களைந்து போனால்

அந்த நாட்கள் வெளிச்சமாயிருக்கும்.

Fake Friends Quotes in Tamil Download

கண்மூடித் தனமாக ஒருவரை

நேசித்து விட்டால்,

அவர்கள் சொல்லும் பொய்கள் கூட

உண்மையாகவே தெரிகிறது…!!

Tags:    

Similar News