விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
முகத்தில் இரண்டு கவிதைகள், அது இருவிழிக்கவிதைகள். கண்கள் இல்லாது இந்த உலகத்தை நாம் கற்பனையில் கூட கண்டுவிட முடியாது.;
eye quotes tamil-கண்கள் மேற்கோள்கள் (கோப்பு படம்)
Eye Quotes Tamil
கண்கள்... அவை நமது உடலின் ஜன்னல்கள் மட்டுமல்ல, ஆன்மாவின் கண்ணாடிகளும்கூட. அவற்றின் ஆழத்தை உற்று நோக்கினால், வலி, மகிழ்ச்சி, திகில், காதல் என எண்ணற்ற உணர்வுகளின் பிரதிபலிப்பை நம்மால் காணமுடியும். ஆரோக்கியமான கண்கள் நமக்கு அளிக்கும் பார்வை என்னும் அற்புதமான பரிசை கொண்டாடவும், அவற்றைப் பேணிப் பாதுகாக்கும் முக்கியத்தை வலியுறுத்தவும், இந்த அழகிய தமிழ்ப் பழமொழிகள் உதவட்டுமே.
Eye Quotes Tamil
கண் மேற்கோள்கள்
கண்ணுக்கு மை அழகு, கருத்துக்கு மை எழுத்து.
கண்ணிலே தெரிவது காட்சி; உள்ளத்திலே தெரிவது உண்மை.
கண்ணுக்கு இனியது காட்சி; கருத்துக்கு இனியது நேர்மை.
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்.
கண் இருக்கிறது. காது இருக்கிறது. கருத்தில் வையுங்கள்.
Eye Quotes Tamil
சில சமயங்களில், கண்களுக்கு தெரியாதது இதயத்துக்கு தெரிகிறது.- எச் ஜாக்சன் பிரவுன் ஜூனியர்
கண் பார்வை அற்றவன் குருடன் அல்ல, தன் தவறுகளை உணராதவனே குருடன்.-மகாத்மா காந்தி
கண்களும் பேசும் என்பதை உன் கண்களைப் பார்த்த பின்பு தான் அறிந்தேன்!
சிப்பிக்குள் முத்து, மண்ணுக்குள் வைரம்! இவை எல்லாம் தோற்றுப் போகும், அவன் இமைக்குள் இருக்கும் விழிகளுக்கு முன்!
என்ன மாயம் செய்தாயடி? என் விழி வழி அறியாமல் தவிக்கிறது... உன் விழியில்!
Eye Quotes Tamil
எத்தனை முறை உன்னைக் கண்டு ரசித்திருப்பேன். ஆனால், ஒரு முறை கூட என் விழிகளால் உன் விழிகளைக் கடந்து பயணிக்க முடியவில்லை !
உன் விழிகள் பேசும் மொழியின் அர்த்தம் புரியாமல் தவிர்த்துக் கொண்டிருக்கிறேன் நான். அதற்கான அகராதியையும் நீயே எழுதிவிடு, உன் கரு விழிகளால்!
உந்தன் விழிப் பார்வையில் வீழ்ந்த என் இதயத்தின் சிறகுகள் படபடவென்று அடித்துக் கொண்டு உந்தன் கருவிழிகளை சுற்றி அலைகிறதடி பெண்ணே!
தேனிதழ் கொண்ட தேனே... உன்னிரு விண்மீன் கண்களால், என்னைக் கொல்லாதே!
உன் கூர்மையான விழிகள் என் மீது பட, என் நெஞ்சம் பனி துளியின் மேல் பட்ட இளம்வெயில் போல் இதமாக இசைபாடுதடி, இளம் பனியே!
Eye Quotes Tamil
நிலவின் அழகை ரசிக்க மறுக்கிறேன், உன் விழியின் அழகைக் கண்டதிலிருந்து..
உந்தன் விழிகளை கண்டு உன்னை ரசிக்கும் ரசிகன் ஆகிறேன்! உந்தன் உள்ளத்தினைக் கண்டு உன்னை நேசிக்கும் காதலனாகிறேன்!
மையிட்ட உன் கண்கள் கண்டு, வண்ண மயில்கள் அனைத்தும் ஆட்டம் கொள்ளுமே உன்னைக் கவர்ந்திழுக்க!
விண்ணோடு மின்ன எண்ணாத விண்மீன்கள் எல்லாம், மண்மீது வந்து பெண்ணவள் என்னவளின் கண்ணாகிப் போனதோ?
என் அத்தனைத் திறமையும் தோற்றுப் போனது, உன் இரு இமையின் முன்னே!
Eye Quotes Tamil
மலர்க்கரம் போன்ற விழிகளைக் கண்டு, மது உண்டது போல் மயங்கினேன்!
அவள் கண்கள் தான் என் இனிய கவிதைகள்!
உதடுகள் வெறுக்கும் போதெல்லாம், இன்னும் இன்னும் உரத்துக் காதல் செய்கின்றன அவளது கண்கள்.
கண் பாஷை பேசினால் நான் என்ன செய்வேன்? கன்ப்யூசன் ஆகிறேன் உள்ளுக்குள்ளே!
மேல் வானத்தில் பல நட்சத்திரங்கள்; கீழ் வானத்தில் என் அழகி உன் இரு கண்கள்!
Eye Quotes Tamil
கண் சிமிட்டும் அந்த நொடிகளில், மின்மினிகள் தொற்று போக, உன் பார்வையால் எனை மயக்கி விழிகளைக் கொண்டு என்னை கொள்ளையடிதாயடி!
அவள் கண்களுக்கான கவிதைகள், சற்றே கவர்ச்சியானவை தான்!
கதவருகே உன் விழி; காதருகே உன் மொழி; காதலுக்கான வழி உன் கண்கள் தந்ததடி!
என் விழி கண்ட கவிதையில் அவள் விழி தான் புதுக்கவிதை!
உடனடியாக உன்னை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்! ஆளைக் கொல்லும் விழிகள் வைத்திருக்கும் குற்றத்திற்காக...
Eye Quotes Tamil
கண்ட ஒரு நொடி கருமை அவள்விழி காதல் என்னும் மொழி; கண்கள் கூறியதடி!
கன்னி அவள் கண்களைக் கனவில் கண்டேன்! காதல் கொண்டேன்!
ஓவியத்துக்கு மேல் ரெண்டு வரிக் கவிதை! உன் புருவங்கள்...
மரத்தின் பூக்களை ரசித்துக் கொண்டே இமைத்து விடாதே கண்மனி! மீறினால், நீ இமைத்த அழகைக் கண்டு, தன் பூக்களை எல்லாம் உன் மீது உதிர்த்து விடப்போகிறது, பரிசாக!
அடியேய் மாயக் கண் அழகி, உன் மாமன் பாவமடி; மயக்கும் மாய விழியாலே, என் விரதத்தை முறிக்காதே!