சர்க்கரை குறைபாடு இருந்தால் இந்த உணவுகளை சாப்பிடுங்க..!

Diabetic Diet Chart in Tamil -சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் சில உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றினால் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம்.

Update: 2023-05-30 10:01 GMT

diabetic diet chart in tamil-சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கான உணவு பட்டியல். (கோப்பு படம்)

Diabetic Diet Chart in Tamil -சர்க்கரை பாதிப்பு உள்ளவர்கள் சில உணவுக்கட்டுப்பாடுகளை பின்பற்றினால் சர்க்கரை அளவை அதிகரிக்காமல் சமநிலையில் வைத்துக்கொள்ளலாம். சர்க்கரை பாதிப்பு உள்ளவர்களுக்கான உணவு அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது

சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவு வகைகள்


காலையில் எழுந்ததும் சாப்பிடும் உணவு

இரண்டு செரிமான பிஸ்கட் சாப்பிடலாம்.

அதன் பின் சர்க்கரை சேர்க்காமல் ஒரு கப் காபி அல்லது தேநீர் குடிக்கலாம்.

காபி அல்லது தேநீர் குடிக்க விருப்பம் இல்லையெனில், எலுமிச்சை மற்றும் இஞ்சியுடன் கலந்த ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீர் உடலுக்கு ஆரோக்யமானது.

காலை உணவு

சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய காலை உணவு:-

இட்லி + சட்னி

எண்ணெய் குறைவாக பயன்படுத்திய மென்மையான தோசை

கைக்குத்தல் அரிசி (பழுப்புஅரிசி) பொங்கல்

வேகவைத்த கோதுமை அல்லது அவல் உப்புமா

ராகி தோசை மற்றும் இடியாப்பம்

கோதுமை ரொட்டி 2 துண்டுகளுடன் வெள்ளைக்கரு ஆம்லெட்

நண்பகல் சிற்றுண்டி

நீரிழிவு குறைபாடு உள்ளவர்கள் உணவுக்கு இடையே நீண்ட இடைவெளியைத் தவிர்க்க வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் சாப்பிடுவது அவசியம்.

எனவே, காலை உணவு சாப்பிட்டப் பின் 2 மணிநேர இடைவெளி விட்டு சிற்றுண்டி சாப்பிடலாம்.

ஒரு கிளாஸ் மோர் (உப்பு இல்லாமல்)

குறைந்த சர்க்கரையுள்ள பழங்கள். ஆரஞ்சு,ஸ்ட்ராபெர்ரி, கிவி, கொய்யா, வெண்ணெய் பழம், பிளம்ஸ் போன்றவை.

ஒரு கைப்பிடி உப்பு சேர்க்காத பருப்பு வகை. வேர்க்கடலை, பாதாம், வால்நட்ஸ், பிஸ்தா

குறிப்பு: சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் பழச்சாறுகளை தவிர்ப்பது நல்லது.

நீரிழிவு குறைபாடு உள்ளவர்களுக்கான மதிய உணவு

சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய மதிய உணவு அட்டவணை :-

பழுப்பு அரிசி, உடைத்த தினை, அல்லது நீரிழிவு அரிசி

தண்ணீர் சார்ந்த காய்கறிகளில் செய்யப்பட்ட கூட்டு. வெள்ளரி, கேரட், தக்காளி, குடை மிளகாய், ப்ரோக்கோலி.

கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளுடன் கூடிய பொரியல்.

பருப்பு கலந்த கீரை

கிழங்கு அல்லாத காய்கறிகளுடன் சாம்பார்


மாலை சிற்றுண்டி

மாலை சிற்றுண்டியை மாலை 4-5 மணிக்குள் சாப்பிட வேண்டும்.

சர்க்கரை இல்லாத ஒரு கோப்பை தேநீர் அல்லது காபி

சில செரிமான பிஸ்கட்

உப்புமா அல்லது அடை போன்ற சிறிய ஆரோக்யமான சிற்றுண்டி

இரவு உணவு

இரவு நேரத்திற்கான உணவு அட்டவணை

இரவு உணவிற்கு முன் காய்கறி சூப் சாப்பிடுங்கள்.

ஒரு கிண்ணம் காய்கறி சாலட்.

பருப்பு மற்றும் காய்கறிகளுடன் கோதுமை சப்பாத்தி.

பருப்பு கொண்டு செய்யப்படும் அடை + சட்னி.

காய்கறிகளுடன் ஓட்ஸ் கஞ்சி.

சாப்பிட வேண்டிய காய்கறிகள்:

புடலங்காய், வாழைக்காய் , காலிஃபிளவர், சோளம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பச்சை பீன்ஸ், ப்ரோக்கோலி, கடுகு கீரை, கேரட்.

நீங்கள் வேறு உணவை உண்டாலோ அல்லது சர்க்கரை அதிகமுள்ள உணவை சாப்பிட்டாலோ, இந்த சர்க்கரை குறைபாடு அட்டவணைப் படி, உங்கள் இரத்த சர்க்கரை அளவை, கண்காணித்துக் கொள்வது மிகவும் அவசியம்.

மாமிசம் உண்பவர்களுக்கான குறிப்புகள்

மாமிசம் அதிக எண்ணெயில் தயார் செய்து இருக்கக்கூடாது. சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் தணலில் வேகவைத்த இறைச்சியை சாப்பிடலாம்.

எண்ணையில் வறுத்த இறைச்சிக்கு பதிலாக, கறிக் குழம்பு வைத்து சாப்பிடலாம்.

கோழி மற்றும் மீன் வகைகளை அதிகம் சாப்பிடுங்கள்.

இறைச்சி உணவில் காய்கறிகளைச் சேர்க்கவும்.


சாப்பிடத்  தகுந்த சிற்றுண்டி வகைகள்

காய்கறி சாலடுகள்.

பழ சாலடுகள் (சர்க்கரை குறைவாக உள்ள பழங்களுடன்).

வேகவைத்த காய்கறிகள்.

வேகவைத்த பருப்பு வகைகள்.

சில பயனுள்ள குறிப்புகள்

காலை எழுந்தவுடன் சிற்றுண்டி சாப்பிடுங்கள்.

உணவுக்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும்.

ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் சிறிய உணவை உண்ணுங்கள்

இரவு உணவை சீக்கிரம் சாப்பிடுங்கள்.

எல்லா நேரங்களிலும் ஒரு சிறிய சிற்றுண்டியை எடுத்துச் செல்லுங்கள்.

சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள்  தவிர்க்க வேண்டிய உணவுகள் 

வறுத்த உணவுகள்

தேங்காய் சார்ந்த கறிகள் மற்றும் சட்னிகள்.

காரக் குழம்பு போன்ற அதிகப்படியான எண்ணெய் சேர்த்த கறி வகைகள்.

அதிகப்படியான எண்ணெய் மற்றும் அரிசி கொண்ட பிரியாணி மற்றும் புலாவ்.

குறிப்பு :

இது ஒரு சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கான உணவு ஆலோசனை மட்டுமே. உங்கள் உடல்நிலை, உங்களின் சர்க்கரை அளவு போன்றவைகளுக்கு ஏற்ப உணவுகள் மாறுபடலாம். எனவே, மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உணவுகளை எடுப்பது பாதுகாப்பானது. 



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News