Death Anniversary Meaning in Tamil-திதி எப்படி பார்க்கணும்..? தெரிஞ்சுக்கங்க..!
ஒருவர் இறந்த நினைவு தினம் என்பது அவர்கள் இறந்த திதி அடிப்படையில் காணவேண்டும். திவசம் செய்வது என்போம்.;
Death Anniversary Meaning in Tamil
பொதுவாக இறந்தவர்களுக்கு என்ன காரியங்கள் செய்ய வேண்டும் என்றாலும் அதனை கணக்கிட்டு செய்வார்கள். அதில் அனைவரும் நினைத்து இருப்பது ஒரு வருடத்தில் அவர்கள் இறந்த தேதி வந்து விட்டால் அவர்களுக்கு திதி கொடுக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருப்பார்கள். ஆனால் ஒரு சிலருக்கு இறந்த தேதிக்குள் திதி செய்ய தேதியை குறித்துக்கொடுப்பார்கள். இல்லையென்றால் அதற்கு பிறகு தேதி கொடுப்பார்கள் அதனை பற்றி அனைவரும் யோசித்து இருப்பீர்கள்.
Death Anniversary Meaning in Tamil
இறந்தவர்களின் திதி கணக்கிடப்படுவது எப்படி?
பொதுவாக இறந்தவர்களின் திதியை கணக்கிடுவதற்கு ஜோதிடர்களை அணுகி அவர்களிடம் கேட்டுக்கொள்வார்கள், அப்படி இல்லையென்றால் ஐயர்களிடம் சென்று தேதியை குறித்து அந்த தேதியில் திதியை செய்வார்கள். திதி கொடுப்பதற்கு எதற்கு அவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். நாமே தெரிந்துகொள்ளலாமே.
உங்கள் உறவுகளில் ஒருவருக்கு திதி கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் உடனே நாம் முதலில் கவனிக்க வேண்டிய மூன்று விஷயங்கள் உள்ளன. முதலில் அவர் இறந்த தமிழ் தேதி என்ன என்பதை கணக்கிட வேண்டும். பின்னர் வளர்பிறையா, தேய்பிறையா என்பதை பார்க்கவேண்டும். மூன்றாவதாக இறந்த தேதி அன்று என்ன திதி என்பதை பார்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த மூன்றையும் வைத்துத் தான் இந்த வருடத்திற்கு எப்போது திதி வரும் என்பதை பார்க்கப் போகிறோம்.
எடுத்துக்காட்டாக: 27.1.2021 தேதிலில் இறந்தவருக்கு திதி பார்க்க வேண்டும் என்றால்? மேல் கொடுக்கப்பட்ட கணக்கில் உள்ளது போல் மூன்றையும் ஞாபகத்தில் வைத்து குறித்துக்கொள்ளவும்.
Death Anniversary Meaning in Tamil
27.1.2021 என்றால் அன்று தை 14, வளர்பிறை, சதுர்த்தசி என்றால் அவர்களுக்கு 2022 அன்று எப்போது திதி வரும் பார்ப்போம் வாங்க.
மறுவருடம் அதாவது 2022 வருடத்தில் என்ன தேதியில் திதி வரும் என்றால் நாம் குறித்துவைத்த மூன்றையும் எடுத்துக்கொள்ளவும்.
அதன் பின் தை மாதத்தில் சதுர்த்தசி வளர்பிறையில் வருவதை பார்க்கவும். அனைவரும் இந்த வளர்பிறையா தேய்பிறையா என்பதை மறந்து பிறையை மாற்றி திதி கொடுத்துவிடுவார்கள் அதனால் வளர்பிறையில் வரும் திதில் கொடுக்க வேண்டும்.
ஒரு திதிக்கு பாகையின் கணக்கானது 12 ஆகும். திதி என்ற சொல்லானது பிறகு தேதி என்று மாற்றம் அடைந்தது. அமாவாசை அன்று சேர்ந்திருக்கும் சூரியனும், சந்திரனும் பிரதமை திதி அன்று பிரிவடைந்து மீண்டும் சேர்ந்து இருக்கும் நிலை உருவாக 30 நாட்கள் ஆகின்றன. இந்த 30 நாட்களுமே திதிகளை சேர்ந்ததாகும்.
Death Anniversary Meaning in Tamil
திதி வகைகளில் வளர்பிறை துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி போன்ற திதிகள் விசேஷமானவையாகும். தேய்பிறை திதிகளில் துவிதியை, திருதியை, பஞ்சமி போன்ற மூன்று திதிகளும் சுப தின திதியாகும். அந்த வகையில் இப்போது ஒவ்வொரு திதிகளிலும் எந்தெந்த சுப காரியங்களை செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.
எந்த திதியில் என்ன செய்யலாம்?
பிரதமை திதி பலன்கள்
பிரதமையில் என்ன செய்யலாம்? வளர்பிறை மற்றும் தேய்பிறையில் பிரதமை திதி அன்று வாஸ்து காரியங்கள் அனைத்தும் செய்வதற்கு மற்றும் திருமண சுப காரியம் செய்ய சிறந்த திதி. அக்னி சம்மந்தமான அனைத்து செயல்களிலும் பிரதமை திதியில் பங்கேற்கலாம். மேலும் இந்த திதியில் மத சடங்குகளிலும் கலந்துக்கொள்ளலாம்.
Death Anniversary Meaning in Tamil
துவிதியை திதி
அரசு சம்மந்தமான செயல்களை இந்த துவிதியை திதியில் தொடங்கலாம். மேலும் திருமணம் போன்ற சுப காரியங்களை செய்யலாம். துவிதியை திதியில் ஆடை, அணிகலன்கள் அணியலாம். ஆன்மீக ஈடுபாடான விரதங்களை மேற்கொள்ளலாம். இந்த திதியில் தேவதை பிரதிஷ்டை செய்யலாம். புதிதாக வீடு கட்ட தொடங்க அடிக்கல் நாட்டலாம்.
திருதியை திதி பலன்கள்
திருதியை திதி பலன்கள்: இந்த திருதியை திதியில், பிறந்த குழந்தைக்கு முதல் முதலாக உணவு ஊட்டி பழக்கலாம். மேலும் இந்த திதியில் இசைகள் கற்றுக்கொள்ளலாம். கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்ய உகந்த திதியானது இந்த திருதியை. திருதியை திதியில் சிற்பம் செதுக்கும் காரியங்களில் ஈடுபடலாம். வீட்டில் சுப காரியங்கள் செய்வதற்கு சிறந்த திதியாக விளங்குகிறது இந்த திருதியை. மேலும் அழகு சம்மந்தமான கலைகளில் ஈடுபடலாம்.
Death Anniversary Meaning in Tamil
சதுர்த்தி திதி 2022
முன் காலத்தில் மன்னர்கள் அனைவரும் போர் படைகளுக்கு சிறந்த நாளாக இந்த சதுர்த்தி திதியை மன்னர்கள் தேர்ந்தெடுப்பார்கள். மேலும் இந்த சதுர்த்தி திதியில் பகைவர்களை வெல்வதற்கு, விஷ சாஸ்திரம், நெருப்பு சம்மந்தமான செயல்களை செய்வதற்கு உகந்த திதியாக இந்த சதுர்த்தி திதி விளங்குகிறது.
பஞ்சமி திதியில் என்ன செய்யலாம்?
பஞ்சமி திதியில் அனைத்து சுப காரியங்களையும் தாராளமாக செய்யலாம். வளைகாப்பு செய்வதற்கு சிறந்த திதியாக பஞ்சமி திதி கூறப்படுகிறது. மருந்துகள் சாப்பிடுவதற்கு உகந்த திதி. நாக தேவதைகள் இந்த பஞ்சமி திதிக்கு அதிதேவதை ஆவார்கள். நாகர் வழிபாட்டிற்கு சிறந்த திதியாக பஞ்சமி திதியை ஆன்மிகம் கூறுகிறது.
சஷ்டி திதி
சஷ்டி திதியில் சிற்ப கலை செய்வது, வாஸ்து காரியங்கள் போன்றவற்றில் கலந்துக்கொள்ளலாம். புதிதாக அணிகலன்கள் செய்யலாம், வாகனம் வாங்கலாம். புதிதாக அறிமுகம் ஆனவர்களை தமக்கு நண்பர்களாக்கிக் கொள்ளலாம். புதிதாக ஏதேனும் பதவிகள் வந்தால் அதனை ஏற்றுக்கொண்டு செய்யலாம். சஷ்டி திதிக்கு அதிதேவதை என்று சொல்லக்கூடியவர் கார்த்திகேயன்.
Death Anniversary Meaning in Tamil
சப்தமி திதியில் என்ன செய்யலாம்?
வெளி பயணம் செல்வதற்கு சிறந்தது இந்த சப்தமி திதி. இந்த திதியில் புதிதாக வாகனம் போன்றவற்றை வாங்கலாம். வீடு மற்றும் தொழிலில் வாஸ்து சாஸ்திர பிரச்சனை உள்ளவர்கள் இந்த திதியில் இடமாற்றம் செய்யலாம். திருமணம் செய்வதற்கு உகந்த திதி. மேலும் சங்கீதத்திற்கு தேவையான உபகரணங்கள் வாங்கலாம். புதிதாக உடை, அணிமணிகள் நீங்களே தயாரிக்கலாம்.
அஷ்டமி திதியில் என்ன செய்யலாம்?
பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இந்த அஷ்டமி திதியில் தளவாடம் பொருள்கள் வாங்கலாம். நடனம் தெரியாதவர்கள் அஷ்டமி திதியில் நடன கலை கற்றுக்கொள்ளலாம். அஷ்டமி திதிக்கு அதிதேவதை ஐந்து முகம் கொண்ட சிவன்.
Death Anniversary Meaning in Tamil
நவமி திதியில் என்ன செய்யலாம்?
சத்ரு பயத்தினை போக்கக்கூடியது இந்த நவமி திதி. நவமி திதியானது தீய செயல்களை அழிப்பதற்கு உகந்த திதி. நவமி திதிக்கு அதிதேவதை அம்பிகை.
தசமி திதியில் என்ன செய்யலாம்?
தசமி திதியில் அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் ஈடுபடலாம். மத சடங்குகள் போன்றவற்றை செய்யலாம். தசமி திதியில் ஆன்மீக சம்மந்தமான செயல்கள் அனைத்தையும் செய்யலாம். வெளிப்பயணம் மேற்கொள்ளலாம். மேலும் இந்த திதியில் புதிதாக வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யலாம். வாகனம் ஓட்ட தெரியாதவர்கள் இந்த தசமி திதியில் வாகனம் ஓட்ட கற்றுக்கொள்ளலாம். அரசு சம்மந்தமான செயல்களில் பங்கேற்கலாம்.
ஏகாதசி பலன்கள்
ஏகாதசி திதியில் விரதம் போன்றவற்றை எடுக்கலாம். சுப காரியமான திருமணம் செய்யலாம். காயத்திற்கு சிகிச்சை பெற்று வரலாம். மேலும் இந்த திதியில் சிற்ப காரியம், ஆன்மீக வழிபாடுகளில் பங்கேற்கலாம்.
Death Anniversary Meaning in Tamil
துவாதசி திதி பலன்கள்
துவாதசி திதியில் மதச்சடங்குகள் போன்றவற்றில் கலந்துக்கொள்ளலாம். துவாதசி திதிக்கு அதிதேவதை விஷ்ணு.
திரயோதசி திதி பலன்
இந்த திரயோதசி திதியில் சிவன் வழிபாடு செய்வது விசேஷம். வெளிப்பயணம் செய்யலாம். புதிய ஆடை அணியலாம். எதிர்ப்புகள் நீங்கும். ஆன்மீக வழிபாட்டில் கலந்துக்கொள்ளலாம்.
சதுர்த்தசி திதி
புதிதாக ஆயுதம் போன்றவற்றை செய்யலாம். சதுர்த்தசி திதியில் மந்திரம் கற்றுக்கொள்ளலாம். இந்த திதிக்கு அதிதேவதை காளி ஆவாள்.
பௌர்ணமி அன்று என்ன செய்யலாம்?
ஹோம, சிற்ப, சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளலாம். விரதம் போன்றவை இந்த திதியில் எடுக்கலாம். பவுர்ணமி நாளிற்கு பராசக்தி அதிதேவதை.
Death Anniversary Meaning in Tamil
அமாவாசை திதி பலன்கள்
அமாவாசை திதியில் நம் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய வழிபாடுகளை செய்யலாம். இல்லாதவர்களுக்கு தான தர்மம் செய்வதற்கு சிறந்த திதி. மேலும் இந்த திதியில் இயந்திர பணிகளை மேற்கொள்ளலாம். இந்த திதிக்கு அதிதேவதை (thithi devathai in tamil) சிவன், சக்தி ஆவார்கள்.