அன்பின் அடையாளமாக இருப்பவர் அப்பா..! யாதுமாகி நின்றாயே..!
Dad Quotes in Tamil-பாசத்தை வெளியே காட்டிக்கொள்ளாவிட்டாலும் கூட மனசுக்குள் நமக்கென ஒரு இடத்தை வைத்திருப்பவர் அப்பா.;
Dad Quotes in Tamil-அப்பா என்பவர் உறுதிக்கு ஒப்பானவர். தனது துக்கங்களை வெளியே காட்டிக்கொள்ளாமல் தனக்குள்ளே பூட்டி வைத்துக்கொள்பவர். தான் பட்ட கஷ்டங்கள் பிள்ளைகள் படக்கூடாது என்பதற்காகவே தனது துன்பங்களை வெளியே சொல்லாமல் அமைதியாகவே இருப்பார். பார்ப்பதற்கு என்னவோ முரடர்போல தோன்றினாலும் அன்புக்கு அடையாளம் அவரே.
- எந்த பெண்ணும் அவளின்
கணவனுக்கு ராணியாக
இல்லாமல் இருக்கலாம்
ஆனால் நிச்சயம்
இளவரசியாக இருப்பாள்
அவளின் தந்தைக்கு
- மகள் பிறந்ததும்
புதிதாய் நடைப்பழக
கற்றுக்கொள்கிறான்
ஒவ்வொரு தந்தையும்
அவளின் கைகளை பிடித்து
- அப்பா கைக்குள் மகள் இல்லை
மகள் கைக்குள் தான் அப்பா
தொட்டிலில் தொடங்கும்
இந்த பாசத்துக்கு வாழ்நாள்
முழுவதும் மவுசு அதிகம்தான்
dad quotes in tamil
- பெண்கள் தந்தையை
அதிகம் நேசிக்க காரணம்
எவ்வளவு அன்பு வைத்தாலும்
தன்னை ஏமாற்றாத ஒரே ஆண்
அவளின் தந்தை என்பதால்
- இனி ஒரு ஜென்மம் வேண்டும் என்று
இதுவரை எண்ணியதில்லை
ஆனால் அவ்வாறு நிகழ்ந்தால்
நான் மீண்டும் கேட்பது
உனக்கு மக்களாகவே
பிறக்க வேண்டும் என்று
- கடவுள் அளித்த வரம்
கிடைக்கவில்லை எனக்கு
கடவுளே கிடைத்தார் வரமாக
அவர்தான் என் அப்பா
dad quotes in tamil
- தான் பெற்ற மகளை மட்டுமல்ல
மகளின் பெயரையும் சேர்த்து
பாதுகாக்க தங்களின் பெயரை
பின்னால் துணை அனுப்புகிறார்
- ஆயிரம் உறவுகள்
நம் அருகில் இருந்து
நமக்கு ஆறுதல் சொல்லி
அணைத்தாலும்
அப்பாவின் அரவணைப்பில்
ஆறுதலுக்கு ஈடாகாது எதுவும்
- தன் மகளை
தாயின் மறுபிறவியாகவும்
தன் வீட்டு தெய்வமாகவும்
நினைக்கும் அப்பாக்கள்
இங்கு அதிகம்
- பெண்களுக்கு வாழ்வில்
ஆயிரம் உறவுகள் கிடைத்தாலும்
அவளின் வாழ்நாள் முழுதும்
தன் அப்பாவின் உறவைப்போன்று
ஒரு உறவைப் பெறவே முடியாது
dad quotes in tamil
- என்னை தொழில் ஏற்ற
தலை குனிந்து உன்னை
என்றும் தலைகுனிய
விடமாட்டேன் அப்பா
- அவளில்லா நிறைவும் இல்லை
மகளில்லா மகிழ்வும் இல்லை
அவள் என்னை விட்டு பிரிந்து
அங்கே மருமகளாய் செல்கையிலே
மனம் ஏற்கா ஓர் விடையிங்கே
பிரியா விடை
- மகளின் எல்லா பிரச்சனைக்கும்
உடனே தீர்வுகாணத் துடிக்கும்
முதல் இதயம் அப்பா மட்டுமே
- தேவதையாய் ராட்சசியாய்
தாயாய் தங்கையாய்
தமக்கையாய் தோழியாய்
இருந்திடுவாள் பலவகையாய்
அவள் அவளாய்
ஆனந்தமாய் இருந்திடுவாள்
தந்தைக்கு மகளெனும் போதிலே
- பெண் பிள்ளைகள் அதிக பாசமா
இருக்குறது அப்பாவிடம் தான்
ஆனால் செயல்பாடு சிந்தனை
நடவடிக்கை எல்லாம்
அம்மா மாதிரியே இருக்கும்
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2