அட..மரவள்ளிக் கிழங்கில் அப்படி என்னதான் இருக்குன்னேன்..? படிங்கன்னேன்..!
Cassava Meaning in Tamil-மரவள்ளிக்கிழங்கை, குச்சிக்கிழங்கு, கப்பக்கிழங்கு என்று ஒவ்வொரு பெயரில் அழைக்கிறார்கள். வறட்சியைத் தாங்கி வளரும் பயிர்.;
Cassava Meaning in Tamil
Cassava Meaning in Tamil-மரவள்ளிக்கிழங்கு என்பது மாவுச்சத்து நிறைந்த வேரில் இருந்தே பெறப்படும் ஒரு வகை கிழங்கு ஆகும். இது பொதுவாக வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் வளர்க்கப்படுகிறது. இது யூக்கா அல்லது மணியோக் என்றும் அழைக்கப்படுகிறது. மரவள்ளிக்கிழங்கு உலகின் பல பகுதிகளில், குறிப்பாக ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஆசியாவில் உள்ள மக்களுக்கு கார்போஹைட்ரேட்டின் முக்கிய ஆதாரமாக உள்ளது.
ஊட்டச்சத்து உள்ளடக்கம்
மரவள்ளிக்கிழங்கு பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நல்ல மூலமாகும். இதில் வைட்டமின் சி, தயாமின் (வைட்டமின் பி1), ரிபோஃப்ளேவின் (வைட்டமின் பி2), நியாசின் (வைட்டமின் பி3) ஆகியவை நிறைந்துள்ளன. கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் இதில் உள்ளன.
மரவள்ளிக்கிழங்கின் ஆரோக்ய நன்மைகள் பின்வருமாறு:
கார்போஹைட்ரேட்டின் நல்ல ஆதாரம்:
மரவள்ளிக்கிழங்கு கார்போஹைட்ரேட்டுகளின் நல்ல மூலமாகும், இது உடலின் முக்கிய ஆற்றல் மூலமாகும்.
நார்ச்சத்து நிறைந்தது:
மரவள்ளிக்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது செரிமான ஆரோக்யத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் சில நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
தோல் ஆரோக்யத்திற்கு நல்லது:
மரவள்ளிக்கிழங்கில் வைட்டமின் 'சி' உள்ளது. இது ஆரோக்யமான சருமத்தை பராமரிக்க ஒரு முக்கிய ஊட்டச்சத்து ஆகும்.
இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவலாம்:
சில ஆய்வுகள் நீரிழிவு குறைபாட்டுக்கு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மரவள்ளிக்கிழங்கு உதவும் என்று கூறுகின்றன.
எடை இழப்புக்கு உதவலாம்:
மரவள்ளிக்கிழங்கில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இது எடை இழப்புக்கு உதவும்.
பல்வேறு உணவாக
தமிழகத்தில் மரவள்ளிக்கிழங்கு பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. இது பொதுவாக வேகவைக்கப்படுகிறது. வேகவைக்கப்பட்டு ஒரு பக்க உணவாக வழங்கப்படுகிறது. இது சிப்ஸ், பொரியல் மற்றும் பிற தின்பண்டங்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. மரவள்ளி கிழங்கு அடை எனப்படும் மரவள்ளிக்கிழங்கு மாவில் செய்யப்பட்ட ஒரு வகை அப்பத்தை தயாரிக்கப் பயன்படுகிறது. ஜவ்வரிசி, சேமியா போன்றவைகளும் மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
பாதுகாப்பு எச்சரிக்கை
மரவள்ளியைச் சமைக்கும் போது அதிலிருந்து நச்சுப் பொருள் நீக்கி முறையாகச் சமைக்க வேண்டும். அத்துடன், மரவள்ளியைச் சமைக்கும்போது இஞ்சியைக் கலந்து சமைத்தல் அல்லது மரவள்ளி உணவுடன் இஞ்சி கலந்த உணவுப் பொருள்களை உட்கொள்ளல் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது என அறியப்பட்டுள்ளது.
கேரள உணவு
கேரளாவில் மரவள்ளிக்கிழங்கு பிரசித்தமானது. பல்வேறு வகை உணவாக மரவள்ளிக்கிழங்கை சமைக்கிறார்கள். காலி உணவாக இதை வேகவைத்து, தேங்காய் துருவல் போட்டு உண்கிறார்கள். கடப்பா கறி, கப்பை கறி என பல்வேறு உணவுகள் சிறப்பாக தயார் செய்யப்படுகிறது.
பிற உற்பத்திப்பொருட்கள்
மரவள்ளிக்கிழங்கு ஸ்டார்ச்,சவ்வரிசி குளுக்கோஸ்,டெக்ஸ்ட்ரின், கோந்து, புரூக்டோஸ் சாறு ஆகியவை தயாரிக்கும் தொழில்துறை சார்ந்த தொழிற்சாலைகளில் ஒரு முக்கிய மூலப்பொருளாக பயன்படுகிறது.
பொருளாதார முக்கியத்துவம்
மரவள்ளிக் கிழங்கு பெரிய அளவில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பயிராகும். உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் சுமார் 500 மில்லியன் மக்கள் மரவள்ளிக் கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். இக்கிழங்கிலிருந்து சுமார் 300 கிலோ கலோரி ஆற்றல் பெறலாம். வளரும் நாடுகளில் மரவள்ளிக் கிழங்கு மிக முக்கியமான உணவு மற்றும் வாழ்வாதாரப் பயிராகவும் வாணிகப் பயிராகவும் உள்ளது.
உலகின் மரவள்ளிக் கிழங்கு உற்பத்தியில் இந்தியாவில் மட்டும் 6% உற்பத்தி செய்யப்படுகிறது. மரவள்ளிக் கிழங்கு உற்பத்தி செய்யும் மற்ற சில நாடுகள் பிரேசில்,கொலம்பியா, வெனின்சுலா, கியூபா, போர்ட்டோ ரிகோ, ஹைதி, டொமினிக்கன் குடியரசு, மேற்கிந்தியத் தீவுகள், நைஜீரியா, தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா ஆகும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2