Bus Number 375-பஸ்சுக்குள் பேய்..! டிரைவரும், கண்டக்டரும் என்ன ஆனார்கள்..?
நடுநிசியில் அந்த பேருந்தில் நடந்த பயங்கரம். எப்படி பாட்டியும் இளைஞனும் தப்பித்தார்கள்? படிங்க.;
Bus Number 375
இந்த பிரபஞ்சத்தில் அறிவியலையும் தாண்டி நிறைய அமானுஷ்ய சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதையெல்லாம் நம்பினால் நம்மால் இயல்பான வாழ்க்கையை வாழவே முடியாது. இருப்பினும் நம்மை அறியாத ஒரு ஆர்வம் ஏற்படும். எப்படி சிறு குழந்தைகளுக்கு தாத்தா பாட்டி கதை சொல்வார்களோ அதே போன்று அதனை ஒரு கதையாக எடுத்துக்கொண்டால் நமக்கு ஒரு சுவாரஸ்யம் கிடைக்கும். அப்படியான ஒரு உண்மை சம்பவத்தை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
Bus Number 375
90-களின் சம்பவம் என்று கூறப்படுகிறது
நவம்பர் 14, 1995 ஆம் வருடம் பெய்ஜிங், Yuan-ming இடத்தில் இருந்து இரவு 11 மணிக்கு பஸ் நம்பர் 375 தயாராக இருந்தது. இந்த பஸ் செல்லும் வழி எண் தான் 375, மேலும் அந்த பேருந்து Fragrant Hills என்று அழைக்கப்படும் சியாங்-ஷான் இடத்திற்கு செல்ல உள்ளது. பயணிகளை ஏற்றி கொண்டு பஸ் கிளம்பியது. கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் இறங்க, கடைசியில் பஸ் டிரைவர், கண்டக்டர், ஒரு பாட்டி, தாத்தா மற்றும் ஒரு இளைஞன் என்று மொத்தம் நான்கு பேர் மட்டுமே இருந்தனர்.
காட்டு பகுதிக்கு நடுவில் பேருந்து இறுதி ஸ்டாப்பை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது இடையில் மூன்று பேர் கை ஆசைப்பதை டிரைவர் பார்த்து பேருந்தை நிறுத்துகிறார். அவர்கள் மூவரும் உள்ளே ஏறி பின் சீட்டில் அமர்கின்றனர்.
Bus Number 375
16 ஆம் நூற்றாண்டைச் சேர்த்தவர்கள்
அப்படி பேருந்தில் எறியவர்களில் இருவர் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் போல உடை அணிந்திருந்தனர். அதை பார்த்ததும் அந்த பாட்டிக்கும் இளைஞனுக்கும் ஒரு பயம் ஏற்படுகிறது. ஆனால் அந்த டிரைவரோ அவர்கள் ஏதாவது நாடகத்துல நடிச்சிட்டு அப்படியே வந்திருப்பாங்கன்னு சொல்றாங்க. பஸ் அப்படியே போய் கொண்டிருக்கையில் திடீரென ஒரு அலறல் சத்தம்.
அந்த பாட்டி அங்கிருந்த இளைஞனை அடித்து என்னுடைய பர்ஸ எதுக்கு திருடுனன்னு சத்தம் போடறாங்க. அவனுக்கோ எதுவும் புரியல. மொதல்ல பஸ்ஸ பக்கத்துல இருக்குற போலீஸ் ஸ்டேஷன்ல நிறுத்துங்கன்னு ஒரே ஆர்ப்பாட்டம். ஒருவழியா பஸ்ஸ நிறுத்தி அந்த பாட்டியையும் அந்த பையனையும் நடு வழியிலேயே இறக்கி விடுறாங்க. பஸ் கிளம்பும் போது பின் சீட்ல இருக்குற அந்த மூனு பேரும் அந்த பாட்டிய மொறச்சிகிட்டே போறாங்க.
Bus Number 375
பாட்டிக்கு தெரிந்த உண்மை
அந்த பையன் என்ன பாட்டி போலீஸ் ஸ்டேஷன்னு சொன்னீங்க. எதுவும் இல்லனு கேக்குறான். ஒன்னும் இல்லப்பா, உன்னைய காப்பாத்துறத்துக்குத் தான் நான் பொய் சொன்னேன்னு சொல்றாங்க. பஸ்ல பின்னாடி இருந்த மூன்று பேர பாத்தாலே ஏதோ வினோதமா இருந்துச்சு.
அவங்க மனுசங்க இல்லைன்னு தோணிக்கிட்டே இருந்துச்சு. அப்ப அவங்கள கவனிக்கும் போது அவங்களுக்கு காலே இல்லைனு தெரிஞ்சிகிட்டேன். அதான் அப்படி நடந்துக்கிட்டேன்னு சொல்றாங்க. அவனுக்கோ இத நம்பலாமா, வேணாமான்னு ஒரே குழப்பம். சரி நாம தப்பிச்சோம் அதுவரைக்கும் போதும்னு கெளம்புறாங்க.
Bus Number 375
போலீஸ் மிரட்சி
அந்த பாட்டி உடனே நடந்தத போலீஸ்க்கு போன் பண்ணி சொல்றாங்க. ஆனா அவங்க அதை ஒரு பொருட்டாவே எடுத்துக்கல. ஆனா அடுத்த நாளே இந்த மாறி பஸ் 375 காணோம்னு புகார் வருது. உடனே நேத்து அந்த பாட்டி சொன்னது அவங்களுக்கு ஞாபகம் வருது.
அப்ப மொத அந்த பாட்டிய கண்டுபிடிக்கணும்னு தேடுறாங்க. அப்புறம் விசாரிக்கிறாங்க, என்ன நடந்ததுன்னு. பிறகு அந்த பஸ்ச தேடுறாங்க கிடைக்கவே இல்லை. அப்புறம் பாத்தா ஒரு 100 கிமீ தாண்டி ஒரு ஏரிக்குள் பஸ் கிடக்குது. அதை எடுத்து பார்த்த உடனே அதிர்ச்சி அடையறாங்க போலீஸார். அதுக்குள்ள இருந்த இரண்டு உடலும் பாதிக்கு மேல அழுகிப் போய் இருக்குது.
Bus Number 375
எந்த தடயமும் இல்லாத மர்மம்
ஏதாவது தடயம் கிடைக்குமான்னு தேடிப் பார்க்குறாங்க, ஆனா எதுவும் கிடைக்கல. சரி எப்படி இவ்ளோ தூரம் வர பெட்ரோல் இருந்திருக்கும் என்ற சந்தேகத்தில் டாங்க ஓபன் பண்ணி பாத்தா, அதில் இருந்தது இரத்தம். சரி இங்க எப்படி வந்துருக்கும் என்பதை கண்டுபிடிக்க சிசிடிவிய தேடி பாக்கும் போது அதுல, அந்த பஸ் அந்த வழியா வந்ததுக்கான எந்த ஒரு தடயமும் இல்ல. அதனால் இன்று வரை இந்த மர்மத்திற்கான விடை எதுவும் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் குறித்த செய்தி பெரும் பரபரப்பை அந்த காலகட்டத்தில் ஏற்படுத்தியது.
Bus Number 375
இது உண்மையா என்று பார்த்தால், அது ஒரு "Urban Story" என்று நிறைய பேர் கூறுகிறார்கள். அதாவது வழிவழியாக சொல்லப்படும் ஒரு கதை என்றும் கூறப்படுகிறது.