பஸ்ஸில் பயணம் செய்த பேய்கள்..! ஒரு திகில் பயணம்..! ஓட்டுனரும்,நடத்துனரும் பிணமாக..!
Bus 375 Horror story in Tamil-சீனாவில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தின் ஒரு பேய்க்கதை. நீங்களும் படீங்க.
Bus 375 Horror story in Tamil-நாம் சிறிய வயதில் தாத்தா பாட்டியிடம் கதைகள் கேட்டிருப்போம். அந்த கதைகள் அத்தனையும் கற்பனைக்கதைகளாக இருக்கும். அல்லது இலக்கியங்களில் படித்த ஏதாவது ஒரு கதையாக இதுக்கும். அதையும் தாண்டி சில நேரங்களில் பேய்க்கதைகளையும் சொல்வார்கள். அப்போது தாத்தா பாட்டி அருகே நெருங்கி உட்கார்ந்துகொள்வோம். பேய் கதையல்லவா..?
ஆனாலும் நமக்கு பேய்க்கதை என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். ஆனால், நிஜத்தில் பேயைப் பார்க்க தைரியம் கிடையாது. அப்படி பயம் கவ்விக்கிடக்கும்போது உண்மையாகவே நடந்த ஒரு சம்பவத்தை நாம் பார்க்கப்போகிறோம்.
கதை ....க்குள் போவோமா....?!
இந்த சம்பவம் 1995ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் தேதி அன்று நடந்ததாக போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்தக் காலக் கட்டத்தில், மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் பீஜிங் மாகாணத்தில் உள்ள யுயான்-மிங்-யுயான் பேருந்து நிலையத்தில் இருந்து ப்ராகரண்ட் ஹில்ஸ் எனப்படும் ஷியாங்-சான் (XIANG-SHAN) என்ற இடத்திற்கு, 375 என்ற நம்பர் பேருந்து ஒன்று புறப்பட்டது. இது தான், அந்த ஷியாங்-சான் பகுதிக்குச் செல்கின்ற கடைசி பேருந்து ஆகும். இதன் பின்னர், மறுநாள் காலையில் தான் அடுத்தப் பேருந்துப் புறப்படும். இந்தப் பேருந்தினை விட்டால், வேறு பேருந்தில்லை.
அதனால் அந்தப் பேருந்திற்காக காத்திருந்த நான்கு பேர், அந்தப் பேருந்தில் ஏறினர். ஒரு இளம் ஜோடி, ஒரு இளைஞர் மற்றும் ஒரு வயதான மூதாட்டி ஆகியோர், அந்தப் பேருந்தில் ஏறினர். அந்தப் பேருந்தில், ஓட்டுநரும், பெண் கண்டக்டரும் இருந்தனர். அந்த இளம் ஜோடியானது, டிரைவருக்குப் பின்னால் உள்ள சீட்டில் அமர்ந்து கொண்டனர். கதவு அருகில் உள்ள சீட்டில், மூதாட்டியும், அந்த இளைஞரும் அமர்ந்து கொண்டனர்.
பேருந்தும் கிளம்பியது. வேகமாகப் போய் கொண்டிருந்த பேருந்தினை மூன்று பேர் கையைக் காட்டி நிறுத்தினர். அவர்களைப் பார்த்ததும் பேருந்து ஓட்டுனர் நிறுத்தினார். அந்த மூன்று பேரும், சீனர்களின் பாரம்பரிய உடைகளை அணிந்திருந்தனர். அவர்களில் ஒருவர் கீழே சாய்ந்தபடி, இருந்துள்ளார். அவரை, மற்ற இரண்டு பேரும் கைத் தாங்கலாக அழைத்து வந்தனர்.
அவர்கள் மூவரும், பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்தனர். பின்னர், பேருந்தும் போய் கொண்டே இருந்தது. சீனாவில் இரவு நேரத்தில் பனிக் காற்று வீசுவது வழக்கம். அன்றைக்கும் பனிக்காற்று வீசியது. நல்ல குளிர் வீசி ஊசிபோல உடலை தைத்தது.இதனால், அந்த மூதாட்டி அலறினார்.உடனே பேருந்து நிறுத்தப்பட்டது. என்ன என்றுக் கேட்டதற்கு, இந்த இளைஞன் என் பர்ஸைத் திருடிவிட்டான். உடனடியாக, பேருந்தினை போலீஸ் ஸ்டேசனுக்கு விடுங்கள் என்று அந்த பாட்டி கூறினார்.
ஆனால், அந்த இளைஞனோ, 'நான் திருடவில்லை. இந்தப் பாட்டி பொய் சொல்கின்றார்' எனக் கூறினார். ஆனாலும், அந்தப் பாட்டி விடவில்லை. தொடர்ந்து, திருட்டுப் பழி சுமத்திய அந்தப் பாட்டி, உடனடியாக வண்டியினை நிறுத்தி கீழே அந்த இளைஞருடன் இறங்கினார். நான் இந்த இளைஞனை போலீஸ் ஸ்டேசனுக்கு, அழைத்துச் செல்லப் போகிறேன் என்று அந்த பாட்டி தெரிவித்தார்.
இதனை கேட்ட ஓட்டுநர், அவர்களை அங்கேயே இறக்கி விட்டுவிட்டு பேருந்தினை ஓட்ட ஆரம்பித்தார். அந்தப் பாட்டியும், இளைஞரும் சாலையின் ஓரமாக நின்றனர். அப்பொழுது, அந்தப் பாட்டி பேருந்தில் அமர்ந்திருந்த மூன்று பேரையும் பார்த்தார். அவர்கள் இந்தப் பாட்டியினை பேருந்திற்குள் இருந்து கொண்டே, கண்ணாடி வழியாகத் திரும்பிப் பார்த்தனர். அப்பொழுது, மீண்டும் அந்த இளைஞரைப் பாட்டித் திருட்டுப் பயலே எனத் திட்டினார்.
அந்தப் பேருந்தும் வேகமாகச் சென்று, இரவில் வீசிய பனியில் மறைந்தது. அப்பொழுது, அந்த இளைஞர், 'ஏன் பாட்டி பொய் சொல்றீங்க' எனக் கேட்டார். அதற்கு அந்தப் பாட்டி, 'தம்பி, என்னை மன்னிச்சிடு. நான் உன் உயிரைக் காப்பாற்றத் தான் அப்படி செஞ்சேன்' எனக் கூறினார். 'என்ன சொல்றீங்கப் பாட்டி?' என அந்த இளைஞர் அதிர்ச்சியுடன் கேட்டார்.
அதற்கு அந்தப் பாட்டி, தம்பி நம்ம இருந்த வண்டில ஏறிய அந்த மூன்று பேரின் கால்களை நான் கவனித்தேன். அதில் இரண்டு பேருக்குக் கால் இல்லை. அவர்கள் பேய் தம்பி. அவர்களிடம் இருந்து உன்னைக் காப்பாற்றத் தான், அவ்வாறு செய்தேன்' என்றுக் கூறினார். பின்னர் அங்கிருந்து அவர்கள் தங்களுடைய ஊருக்கு நடந்தே சென்றனர்.
இந்நிலையில், அடுத்த நாள், முதல்நாள் இரவு புறப்பட்டுச் சென்ற கடைசிப்பேருந்து மீண்டும் யுயான்-மிங்-யுயான் பேருந்து நிலையத்திற்கு திரும்பி வரவில்லை என்று புகார் கூறப்பட்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இந்த விஷயம் டிவிக்களில் ஒளிபரப்புச் செய்யப்பட்டது.
இதனைப் பார்த்த அந்தப் பாட்டியும், இளைஞரும் தாமாக முன்வந்து பீஜிங் செய்தி சேனலுக்குப் பேட்டியளித்தனர். அப்பொழுது, நடந்த உண்மையினைக் கூறினர். இதைக் கவனித்த போலீசார், எப்படியும் அவர்கள் இறங்கிய இடத்திற்கு அருகில் தான் அந்தப் பேருந்து இருக்க வேண்டும் என போலீசார் கருதினர். அதனைத் தொடர்ந்து, மர்மமாக காணாமல் போன அந்தப்பேருந்தை அந்த பாட்டியும் இளைஞனும் இறங்கிய பகுதியில் தேடினர்.
அந்தப்பகுதியில் இருந்த குளத்தில், அந்தப் பேருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அந்தப் பேருந்தினைப் போலீசார் மீட்டனர். அதில், ஓட்டுநர், நடத்துனர் மற்றும் அந்த பேய்களால் அழைத்து வரப்பட்ட மூன்றாவது நபரின் பிணங்கள் மட்டுமே இருந்தன. அந்த வண்டி எப்படி இவ்வளவு தூரம் வந்தது? அதற்கேற்ப எரிபொருள் தீர்ந்திருக்கலாம் என்று எண்ணிய போலீசார் வண்டியின் டீசல் டேங்கினைத் திறந்து பார்த்தனர்.
திறந்ததும் போலீசார் அதிர்ந்து நின்றனர். அதில், டீசலுக்குப் பதில் ரத்தமே இருந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தற்பொழுது வரை, பீஜிங் போலீசாரால் இந்த வழக்கானது கண்டுபிடிக்கப்படாத மர்மமாகவே உள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2