ஒரு கொடியில் பிறந்த இரு மலர்கள்..! அண்ணன்,தங்கை..! பாசப் பிணைப்பு..!
Brother and Sister Quotes in Tamil-உடன் பிறப்புக்கள் இல்லாதவர்களிடம் கேட்டுப்பாருங்கள். அதன் வேதனையை வெளிப்படுத்துவார்கள்.
Brother and Sister Quotes in Tamil
பிறப்பு என்னவோ ஒருமுறைதான் என்பது எல்லோருக்குமே தெரியும். பிறப்பது ஒருமுறை எனினும் பெரிய குடும்பத்தில் பிறப்பது ஒரு வரம். ஒத்தைப்பிள்ளை என்று வேதனைப்படும் பெற்றோரும் உள்ளனர். இத்தனையைப் பெற்று வேதனைப்படுகிறோமே என்று வாடும் பெற்றோரும் உள்ளனர். ஆனால் அதையும் மீறி எத்தனை இருப்பினும் அத்தனையும் முத்துக்கள் என்று மகிழ்ச்சியோடு வாழும் குடும்பங்களும் உள்ளன. பெரியண்ணன், சின்ன அண்ணன், பெரியக்கா, சின்னக்கா என்று அத்தனை பேருடன் வாழ்வது மகிழ்ச்சியாகத்தானே இருக்கும். உடன் பிறந்தவர்களின் வாசகங்கள்..இதோ உங்களுக்காக..
- உடன் பிறக்கவில்லை என்றாலும் உள்ளம் கலந்து உறவானோம்.. உயிரே போகும் நிலை வந்தாலும் இந்த அண்ணன் தங்கை உறவு எப்போதும் நிலைத்திருக்கும்.
- ஆயிரம் தான் அவனிடம் சண்டையிட்டாலும், பேசாமல் இருப்பதில்லை.. இருக்கவும் முடியாது.. என் அண்ணனிடம்.
- ஒவ்வொரு தங்கையின் மிகப் பெரிய கர்வம் தனக்கொரு அண்ணன் இருக்கிறான் என்பதே
- தங்கையும் அன்னையாவாள்.. தன் அண்ணனுக்கொரு துன்பம் நேர்கையில்...
Brother and Sister Quotes in Tamil
- அண்ணனோடு பிறக்காத எல்லா பெண்களுக்கும் ஒரு ஏக்கம் உண்டு. எந்த ஆணாவது தன்னை தங்கச்சி என்று அழைக்கமாட்டானா என்று..
- தாய்க்கு மேலாக அன்பு காட்ட அண்ணன் என்னும் உறவு இருந்தால் வாழும் காலம் யாவும் சொர்க்கமே..
- அண்ணனுடன் பிறந்த தங்கைகளுக்கு மட்டுமே தெரியும்.. அண்ணனுக்கு இன்னொரு பெயர் அப்பா என்று..
- உன்னை நினைக்க பல பேர் இருக்கலாம்.. ஆனால் உன்னைப் பற்றி மட்டுமே நினைப்பது உன் அன்பு தங்கை நானாக மட்டுமே இருப்பேன்
Brother and Sister Quotes in Tamil
- எத்தனை உறவுகள் நம்மிடம் சொந்தம் புகுந்தாலும், இரத்த பாசத்தினால் வரும் அண்ணன் தங்கை உறவு என்றுமே உருக்கமானதே
- பூக்களில் உள்ள நிறங்கள் மாறப்போவதில்லை.. அதன் மனமும் மாறப்போவதில்லை.. அது போலத்தான் நம் உறவும், உணர்வும் என்றும் மாறாது
- இந்த உலகில் தன்னை ஏமாற்ற நினைக்காத ஆண், தன் அப்பாவிற்கு அடுத்ததாக அண்ணன் தான்..
- உலகில் ரசிக்க ஆயிரம் விஷயம் இருந்தாலும் பெண்கள் ரசிக்கக் கூடிய ஒரே விஷயம் அண்ணனின் பாசம் மட்டுமே
- இரத்த பந்தம் அண்ணன் தங்கை உறவை மட்டுமே நிர்ணயிப்பதில்லை.. இரு உயிர்களின் பாசப் பிணைப்பையே நிர்ணயிக்கிறது
Brother and Sister Quotes in Tamil
- உன்னை உயிராக நினைத்து விட்டேன். உயிர் போனாலும் அண்ணா உன்னை மறக்க மாட்டேன்...
- தகப்பனை விட தங்கையின் மேல் நூறு மடங்கு பாசம் காட்டுவது, அண்ணன் என்ற உறவால் மட்டுமே முடியும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2