biryani eppadi seivathu-பாய் வீட்டு கல்யாண பிரியாணி செய்வோம் வாங்க..!

biryani eppadi seivathu-பிரியாணின்னு சொன்னாலே எப்போ விருந்துன்னு பரபரக்கும் பிரியாணி ரசிகர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். அந்த பிரியாணியை நாமே வீட்டில் செய்து பார்த்தால் என்ன?

Update: 2023-05-23 10:18 GMT

பிரியாணின்னு சொன்னாலே சப்புக்கொட்டுபவர்கள் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு பிரியாணி மீது காதல். இன்னும் சிலர் மூன்று வேளை பிரியாணி குடுத்தாலும் வயிறு முட்டத் தின்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரையும் கவர்ச்சிக் கன்னிபோல பிரியாணி மயக்கி வைத்துள்ளது.


தமிழ்நாடு முழுவதும் சிறிய நகரங்கள் முதல் சாலையோர பிரியாணிக்கடைகள் ஏராளமாக முளைத்துவிட்டன. பெரிய நிறுவனங்களும் பிரியாணி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. தமிழர்களின் வாழ்வியலோடு ஒரு உணவாக பிரியாணி கலந்து விட்டது.

biryani eppadi seivathu

பிரியாணி தயாரிப்பில் கூட வேறுபாடான செய்முறைகள் உள்ளன.பிரியாணி பலவகைப்படும். பாய் வீட்டு பிரியாணி, ஆம்பூர் பிரியாணி தொடங்கி ஹைதராபாத் பிரியாணி, கல்கத்தா பிரியாணி, திண்டுக்கல் பிரியாணி, ஆற்காடு பிரியாணி, தலசேரி பிரியாணி, பாம்பே பிரியாணி, லக்னோ பிரியாணி, சிந்தி பிரியாணி வரை லிஸ்ட்  நீளமாக நீண்டு செல்கிறது.

இந்த லிஸ்டில் தவிர்க்க முடியாத பிரியாணி ’பாய் வீட்டு கல்யாண பிரியாணி’ தான் நாம் இன்று செய்து பார்க்கப்போறோம். இஸ்லாமியர்களின் திருமணங்களில் கறியின் மணத்துடன் ஆவி பறக்க இலையில் பரிமாறப்படும் இந்த பிரியாணி வேறு எங்குமே கிடைக்காத சுவை வகைகளில் ஒன்று.


பாரம்பரிய முறையில் பாய் வீட்டில் தயாரிக்கப்படும் இந்த பிரியாணியின் ஸ்பெஷல், எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாது. வயிறு நிரம்பியது போன்ற உணர்வையும் தராது. ஆசை தீர சாப்பிடலாம்.

biryani eppadi seivathu

இப்படியொரு சூப்பரான பாய் வீட்டு பிரியாணியை இந்த சண்டே வீட்டிலேயே செய்து அசத்துவோம் வாங்க. அதற்கான செய்முறை கீழே தரப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி – 1 கிலோ

சிக்கன் – 1.1/5 கிலோ

நெய் – 100 மி.லி

எண்ணெய் - 100 மி.லி

பட்டை – 2 கிராம்

ஏலக்காய் – 7

கிராம்பு – 6

வெங்காயம் – 400 கிராம்

இஞ்சி பூண்டு விழுது – தேவையான அளவு

புதினா –கொத்தமல்லி – ஒருகைபிடி அளவு

தக்காளி – 400 கிராம்

தயிர் – 180 மி.லி

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

பால் – 200 மி.லி

எலுமிச்சை – 1

biryani eppadi seivathu


எப்படிச் செய்வதுன்னு பார்க்கலாம் :

  • பாஸ்மதி அரிசியை தண்ணீரில் 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பின்பு, அடுப்பில் அகலமான பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். இதில்தான் பாஸ்மதி அரிசியை வேக வைத்து எடுக்க வேண்டும்.
  • பின்பு மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பிரியாணி செய்ய ஆரம்பிக்கவும்.
  • பாத்திரம் சூடானதும் அதில் நெய், எண்ணெய் சேர்க்கவும். பின்பு அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
  • அடுத்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்பு அதில் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.
  • இப்போது ஒருகைப்பிடி அளவுக்கு கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து வதக்கி, அதில் பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வேக விடவும்.
  • அடுத்து, தயிர் சேர்த்து வதக்கி அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து மசாலாவுடன் நன்கு கலந்து விடவும்.
  • இப்போது, சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளைச் சேர்த்து, அடுப்பின் தீயை குறைத்து வைத்து சிக்கனை வேக விடவும்.
  • பின்பு பிரியாணிக்கு தேவையான 800.மி.லி தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • இப்போது அதில் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து சில வினாடிகள் கொதிக்க விடவும். இறுதியாக பச்சை பால் சேர்த்து பாத்திரத்தை மூடி கலவையை வேக விடவும்.
  • அடுப்பில் இருக்கும் மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் கொதித்ததும் அதில் ஊற வைத்துள்ள அரிசியை சேர்க்கவும்.
  • இப்போது தேவையான அளவு உப்பு சேர்த்து பாதி பதத்திற்கு வேக வைக்கவும். பின்பு அரிசியை வட்டிக்கட்டி, கொதித்து கொண்டிருக்கும் பிரியாணி கலவையுடன் சேர்க்கவும்.
  • இப்போது பாத்திரத்தை தட்டால் மூடி, அடுப்பை குறைவான தீயில் வைத்து 10 நிமிடம் வேக வைக்கவும். அடுத்து அடுப்பை அணைத்து பாத்திரத்தை 10 நிமிடம் அப்படியே விடவும்.

இப்போது தட்டின் மேல் கனமான பொருளை வைத்து சிறிது நேரம் விடவும். அவ்வளவு தான் முடிந்தது. பாரம்பரியமான பாய் வீட்டு கல்யாண பிரியாணி தயார்.


biryani eppadi seivathu

இப்ப நாங்க கூறியுள்ள இந்த முறையை பயன்படுத்தி நீங்களும் வீட்டிலேயே அட்டகாசமான பாய் வீட்டு கல்யாண பிரியாணி செய்து அசத்துங்க. பிரியாணி வாசம் அடிச்சி பக்கத்து வீட்டு பாமா அக்கா வந்து கேப்பாங்க. டீச்சர் மாதிரி இருந்து சொல்லிக்கொடுங்க. 

Tags:    

Similar News