Birthday wishes quotes in tamil-நீ பிறந்த நாள் அழகு..! உன்னை வாழ்த்துவதால் வார்த்தைகள் அழகாகின்றன..!
நமக்கு பிடித்தவர்களின் பிறந்த நாளில் வாழ்த்துச் சொல்வது, பல நாள் பந்தத்தின் வெளிப்பாடாக இருக்கவேண்டும்.;
birthday wishes quotes in tamil-பிறந்தநாள் வாழ்த்து மேற்கோள்கள்.(கோப்பு படம்)
Birthday wishes quotes in tamil
பிறப்பு மனித வாழ்க்கையில் பெரும் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் நாளாகும். புதிய உருவத்தை, புதிய குழந்தையை கொண்டாடும் அறிவினை பெற்றிருப்பது உயிரினங்கள் அத்தனைக்கும் கிடைத்த அரிய வரம். ஒருவரின் பிறந்த நாளை கொண்டாடுவது அவர் மீதான நமது அன்பை வெளிப்படுத்தும் நிகழ்வாக மாறுகிறது.
குழந்தையாக பிறந்த நீ ஒவ்வொரு ஆண்டும் வளர்ச்சியை நோக்கி நகர்கிறாய். அந்த வளர்ச்சியில் உன் அறிவும் செறிவு பெறவேண்டும் என வாழ்த்தி பரிசுகள் வழங்குவது, அன்றைய தினத்தில் பிறந்தவருக்கு மகிழ்ச்சித்தரும் நிகழ்வாக அமைகிறது.
பிறந்தநாள் மகிழ்ச்சியினை வாழ்த்துகளாக எப்படி ஆச்சர்யப்படுத்தலாம் என்பதை நீங்களும் தெரிஞ்சிக்கலாம். இதோ உங்களுக்காக பிறந்தநாள் வாழ்த்துகள் தரப்பட்டுள்ளன.
உன் பிறந்தநாளை பார்த்து மற்ற நாட்கள் எல்லாம் பொறாமை கொள்கின்றன. ஏன் என் நாட்களில் பிறக்கவில்லை என்று ..! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். இந்த பிறந்தநாள் உங்கள் வாழ்வில் வெற்றியையும் சாதனைகளையும் எட்டும் தொடக்க நாளாக அமையட்டும்.
உண்மையான அன்பு வெறும் வார்த்தைகளால் மட்டுமே வராது. அதை முழுமையாக உணர்வுகள் மட்டுமே வெளிப்படுத்தும். மகிழ்ச்சி பொங்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!
பிறப்பு அற்புதமானது. அந்த பிறப்பின் நாளது மீண்டும் வரும்போது அந்த நாட்களும் அழகாகின்றன, உன்னை வாழ்த்துவதற்கு வண்ணங்கள் பூசிக்கொள்கின்றன..! இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..!
Birthday wishes quotes in tamil
உண்மையான அன்புக்கு முகங்கள் தேவை; இல்லை முகவரியும் தேவை இல்லை; நம்மை நினைக்கும் உண்மையான நினைவு ஒன்றே போதும். அலைக்கற்றை போல காற்றில் மிதந்து ஒரு இணைப்பை ஏற்படுத்தும். அந்த காற்றலையில் உனக்கான இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை அனுப்புகிறேன். பெற்றுக்கொள் என் இனியவளே..!
இந்தப் பிறந்த நாள் உங்கள் வாழ்வின் இனியதொரு தொடக்கமாக அமையட்டும். எண்ணும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி மழை பொழியட்டும். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
வேறொன்றும் தேவை இல்லை நீ மட்டும் பொது. மகிழ்வான தருணங்கள் மலரட்டும் இனிமையாக. நெகிழ்வான நேசங்கள் தொடரட்டும் இளமையாக. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
பூவினம் சேராத பூவொன்று, என் உள்ளத்தை கொள்ளையிட பூமியில் பூத்த நாள் இன்று. வானம் சேராத நிலவொன்று எனக்காக மண்ணில் உதித்த நாள் இன்று. என்னவளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!
Birthday wishes quotes in tamil
சூரியக்கதிரின் மஞ்சள் நிறத்தை வண்ணங்களாக்கி உன் முகத்தில் பூசுகிறேன். மலர்களில் வண்டுகள் திருடும் மகரந்த நிறத்தை மானே உனக்குத் தூவுகிறேன். தூய்மையின் மழைத்துளி நீரெடுத்து உன் பிறந்த நாளில் நீராட்டுகிறேன். ஒற்றை மெழுகுவர்த்தியை தீபமாக ஏற்றி உன் முகத்தை ஒளிரச் செய்கிறேன். என்னவளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!
உன்னை பார்த்த பின்னர்தான் என் வாழ்க்கை வாழ்க்கையானது. நீ பிறந்தது எனக்கே எனக்குத்தான் என்பதை ஊருக்கு உரத்துச் சொல்ல உன் பிறந்தநாள் எனக்கு கிடைத்த வரமடா..! சத்தமிட்டு சொல்கிறேன் என்னவனுக்கு, என் மன்னவனுக்கு பிறந்தநாள். வாழ்துகிறேனடா என் நெஞ்சத்தில் உனைத்தாங்கி..!
இரும்பு போன்ற இதயம் என்று எண்ணி இருந்தது தவறு என்று என்னை கல்லூரியில் விட்டுவரும்போது உங்கள் கண்ணீர்தான் சாட்சியானது அப்பா..! உங்களுக்கு கரும்பு இதயம் என்று உணர்த்திய நாள். அதுதான் என் தந்தையின் பிறந்த நாள். எனக்காக ஓயாது உழைத்த என் அப்பாவுக்கு தாள்பணிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்..!
Birthday wishes quotes in tamil
படிக்கும் காலங்களில் என் புத்தகச் சுமையை நீ சுமந்தாய். தம்பிக்கு கைவலிக்கும் என்று நீயே எனக்கு வீட்டுப்பாடம் செய்தாய். அக்கா, நீ எனக்கு இன்னொரு தாய். உன் பிறந்தநாளில் நான் நெகிழ்ந்து வாழ்த்துகிறேன். இன்னொரு முறையும் உனக்கே தம்பியாக பிறக்க ஆசை.
நீ உணவு உண்டாயோ இல்லையோ என்ற கவலை நானறியேன். ஆனால், நான் உணவு உன்ன உன்னை வருத்திக்கொண்டு நாட்கள் அதிகம். எது எனக்குப்பிடிக்கும் என்று தேடித்தேடி சமைத்துத் தந்தாய்..நான் உன்னையே சார்ந்து வாழும் நிலையை தந்துவிட்டாய், அம்மா..! இன்று விடுதியில் பாதி நாட்கள் உன் நினைவுகளில் கரைகிறேன். இன்று உனக்கு பிறந்தநாளம்மா..! தூரத்தே இருந்தாலும் உன் அன்பின் வாசம் என்னருகிலேயே வீசுகிறது. அந்த வாசத்தின் வீச்சலையில் வாழ்த்துகளை உனக்கு அனுப்புகிறேன் அம்மா. உன் பாசத்திற்கு ஒப்பீடு ஏதம்மா.!!
என்னை எந்தை என்ற பட்டம் பெறவைத்த என் உள்ளத்து செல்ல இளவரசியே..உனக்கு இன்று பிறந்தநாள். உள்ளத்தில் வைத்து தாங்கும் தாலாட்டாக உன்னை வாழ்த்துகிறேன், இந்த இனிய நாளில்.
Birthday wishes quotes in tamil
அன்பே எனக்கு ஒரு வரம் கிடைத்தால், உன் பிறந்த நாளையே வருடத்தின் முதல் நாளாக அறிவிக்கக் கேட்பேன். ஆண்டவனே அந்த அருள் தருவாயா..? என்னவளின் பிறந்தநாள் ஆண்டின் தொடக்கமாகட்டும், என்னவளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
பிறப்பின் நொடிகள் என்றும் அழகானது. அதை மீண்டும் காலத்தின் நகர்வால் அடையும் போது வாழ்த்துகள் அழகானது. வார்த்தைகளின் கோர்வையில் வாழ்த்துகள் உயிர்பெறுகின்றன.
என்னில் கலந்து இருந்த கவிதையே உன்னை என் வரிகள் வாழ்த்தும், இன்று போல் என்றும் மகிழ்ச்சி பொங்க உன்னை என் இதயம் வாழ்த்தும். இதயம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
நிலவைக் கொண்டு வந்து உன்னிடம் நான் தந்தாலும், அதன் பெறுமதி உன்னிலும் குறைவே..! உன்னை உச்சி முகர்ந்து ஒரு முத்தம் தந்து அன்பாய் வாழ்த்தும் ஒற்றைச்சொல் உன்னை பல்லாண்டு வாழச்செய்யும்.
Birthday wishes quotes in tamil
உங்களைப் பற்றி ஒன்றும் தெரியாமல் மணவறைக்குள் அமர்ந்தேன். இன்று உங்களைப் பற்றி முழுவதுமாக புரிய வைத்து, என் இல்லறத்தை அழகாக்கி விட்டீர்கள். இனிய பிறந்த தின வாழ்த்துக்கள் என் ஆசை நாயகனுக்கு
காலங்கள் கடந்து நீ ஒரு மூலை நான் ஒரு மூலை என்று இருந்தாலும் நம் சொந்தம் எனும் பந்தத்திற்கு என்றுமே அழிவு இல்லை . என் பணிவான பிறந்த தின வாழ்த்துகள் என் சகோதரனே.
கண்களுக்கு என்றுமே மனதின் மொழி புரியும். அதனால் தான் என்னவோ என்னை உன்னிடம் சேர்த்து உன்னவளின் உனக்கான பிறந்த தின நல்வாழ்த்துகள்
அனைத்து குறைகளும் இன்று நிறைகளாகி போயின, நீ பிறந்த போது. என் தேவதை என்றுமே என் மனதின் மஹாராணி தான் வாழ்த்துகள் மகளே..!