Birthday Wishes for Best Friend in Tamil-அடே நண்பா..வாழ்த்து சொல்றேன்..பிறந்தநாள் வாழ்த்து..!
உலகம் முழுவதும் பிறந்தநாளை கொண்டாடும் வழக்கம் இருந்து வருகிறது. அந்த இனிய நாளில் வாழ்த்துக்கூறுவதும் மகிழ்ச்சிக்கான தருணங்களை ஒளியூட்டும்.;
Birthday Wishes for Best Friend in Tamil
பிறந்தநாள் என்பது கடந்த ஆண்டு அனுபவங்களைப் பற்றி சிந்தித்துக்கொண்டு எதிர்காலத்தை நோக்குவதற்கான நேரம் எனலாம். நாம் அடைந்த மைல்கற்கள் மற்றும் நாம் நிறைவேற்ற விரும்பும் கனவுகளை அவை நமக்கு நினைவூட்டுகின்றன.
அப்படியான இந்த சிறந்த நாளில் நண்பர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறலாம் வாங்க.
Birthday Wishes for Best Friend in Tamil
உடலால் தொலைவில் இருந்தாலும் உள்ளத்தால் நெருக்கத்தில் இருக்கும் என் உயிரே உடன் பிறப்பே
உனக்கு இந்த இனிய உறவின் பிறந்தநாள் வாழ்த்துகள்!
வேண்டுவோர் கேட்காமலே ஓடோடி உதவும் பெருவள்ளலே..நோய் நோடிகளின்றி வாழ
வாழ்த்தி மகிழ்கிறேன்!
உன் பிறந்தநாளில், நீ எனக்கு எவ்வளவு சிறப்பானவர்,ஆச்சர்யமான நபர் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். பிறந்தநாள் வாழ்த்துகள்.
எனது ஒவ்வொரு நாளையும் ஒளிமயமாக வைத்துக்கொண்டிருக்கும்
எனது அருமை நட்பே! உனக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
Birthday Wishes for Best Friend in Tamil
என்னை தினந்தோறும் புன்னகை செய்திட வைக்கும் இனிய நண்பருக்கு
பிறந்தநாள் வாழ்த்துகள்!
உங்களது பிறந்தநாளில் கடலளவு அன்புடன் வாழ்த்துகிறேன். இந்தநாள் அழகான மற்றும்
அற்புதமான பயணத்தின் தொடக்கமாக இருக்கட்டும்.
இந்த நாளில், எனதருமை நண்பரின் அன்பையும் கனிவையும் நினைத்து கொண்டாடுகிறேன்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நட்பே!
மகிழ்வான தருணங்கள் மலரட்டும் இனிமையாக.. நெகிழ்வான நேசங்கள் நிகழட்டும் இளமையாக... இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
Birthday Wishes for Best Friend in Tamil
என் வாழ்வில் ஒளியையும் மகிழ்ச்சியையும் கொண்டு வந்தவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
உங்கள் பிறந்தநாள் உங்களைப் போலவே அசாதாரணமாக இருக்கட்டும்.
என் வாழ்வின் சிறந்ததொரு நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! புதிய ஆண்டில் புதிய உயரங்களை
தொட வாழ்த்துகள்!
உன் பிறப்பினால் இந்நாள் தனித்துவம் ஆகிறது. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
பல உயரங்கள் தொட்ட என் அன்பரே, புதிய உயரம் தொட பிறந்தநாளில் உங்களை
வாழ்த்துகிறேன்!
Birthday Wishes for Best Friend in Tamil
வந்த கஷ்டங்கள் எல்லாம் பனி போல தூர விலகி மகிழ்ச்சி என்ற ஒன்றின் ஒளிவீசி தித்திக்கும். எதிர்காலம் சிறப்பாக அமைய உன் பிறந்த நாளில் மனதார வாழ்த்துகிறேன்.
பூவினம் சேராத பூவொன்று பூமியில் பூத்த நாள் இன்று வானம் சேராத நிலவொன்று மண்ணில் உதித்த நாள் இன்று
பிறப்பு என்பது அழகான விபத்து இறப்பு என்பது ஆபத்தான விபத்து இரண்டுக்குமிடையில் சில நாள் வாழ்க்கை இன்றுமொருமுறை பிறக்கவும் இறக்கவும் அஞ்சாதே.. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
வருடத்தில் பல வண்ணங்கள் மலரும் விடியலில் பிறந்தாயோ காற்றால் மலர்களை உதிர்த்து மழைத்துளியில் வெண்பகலை அழைத்து இநயந்தால் உன்னை வாழ்த்துகிறேன்
Birthday Wishes for Best Friend in Tamil
வாழ்க்கை என்ற கடலில் மகிழ்ச்சி என்ற படகில் வாழ்நாளெல்லாம் பவனி வந்து வளம் பல பெற்று வாழ்க நீடும் வளர்க வையத்தில் நின் புகழ் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
உனக்கு வாழ்த்து சொல்ல புதிதாய் பிறந்தது நீயா இல்லை நானா? உன்னை வாழ்த்த புதிதாய் யோசித்து, யோசித்து நானே புதியதாய் மாறிப்போனேன். யோசித்து யோசித்தும் பிறக்கவில்லை கவிதை? புதியதாய் இன்று பிறந்த நீயே கவிதைதானே எனக்கு.
பிறந்தநாள் மட்டுமல்ல நீ என்னுள் பிறந்த நாளையும் கொண்டாடுவேன் நான்.